எவ்விதமாக தூதன் என்னிடத்திற்கு வந்தார் என்பதும், அவருடைய கட்டளையும் 55-0117 1. அநேகமாக சகோதரர்கள்…இருக்கிறார்கள். நான் இங்கே அநேக ஒலிப்பதிவு செய்யும் கருவிகளைக் (Tape Recorders) காண்கிறேன். உண்மையாகவே அவைகள் இச்செய்தியை பதிவாக்கும். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு என்ன கூறினார் என்பதை நீங்கள் எந்த நேரத்திலும் அறிய விரும்பினால், இங்கே ஒலிப்பதிவு செய்யும் கருவிகளை வைத்து பதிவு செய்கின்ற சகோதரர்களைக் கண்டு, அவர்களிடத்தில் போய் கேட்டால், அவர்கள் அதை திரும்ப உங்களுக்கு போட்டுக் காண்பிக்கக்கூடும், அப்பொழுது நீங்கள் உங்களுடைய காரியத்தை சரியாக அறிந்து கொள்ள முடியும். அதன் பின்னர் அது கூறப்பட்ட விதமாக அது சம்பவிக்காமல் போகிறதா என்பதை கவனித்துப் பாருங்கள். நீங்களே கவனித்துப் பாருங்கள். நீங்கள், “கர்த்தர் உரைக்கிறதாவது, ‘ஒரு குறிப்பிட்ட காரியம் அல்லது இது இந்த விதமாக உள்ளது’” என்று கூறுவதை நீங்கள் கேட்கும்போது, அது சரியா அல்லது இல்லையா என்பதைப் பாருங்கள். புரிகின்றதா? அது எப்பொழுதுமே அந்த விதமாகத்தான் இருக்கிறது. 2 இப்பொழுது ஒரு சிறு பின்னணியத்திற்காக…இன்றிரவு நம்மில் ஒரு சிலர் இங்கிருக்கின்றபடியினால் நான் ஒரு விதமாக சந்தோஷமுடையவனாய் இருக்கிறேன். நாம் இவ்விடத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா? நம்மில் ஒருவரும் அந்நியர்கள் அல்ல. நாம்…என்னுடைய கென்டக்கி இலக்கணத்தை நான் உபயோகிக்கும்போது, இப்பொழுது நான் வீட்டில் இருப்பதுபோன்றே உணர முடிகிறது. ஏனென்றால் நாம்—நாம் சற்று…இப்பொழுது யாராவது இங்கு கென்டக்கியிலிருந்து வந்திருப்பார்களாயின், நான் கென்டக்கியை இப்பொழுது மதிப்புக் குறைவாய் பேசவில்லை. கென்டக்கியிலிருந்து யாராவது இங்கு வந்திருக்கிறார்களா? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அப்படியா, அப்பொழுது நான் வீட்டில் இருப்பதுபோன்றே உணர வேண்டும், இல்லையா? அது மிகவும் அருமையாய் இருக்கிறது. 3 என்னுடைய தாயார் ஒரு சாப்பாடு விடுதியை நடத்தி வந்தாள். நான் அதை பார்க்கும்படியாய் ஓர்நாள் அங்கே சென்றிருந்தேன்…அங்கு ஒரு பெரியதான கூட்டமுள்ள ஜனங்கள் சாப்பிடவிருந்தனர். எனவே அங்கு ஒரு பெரிய நீண்ட மேஜை வைக்கப்பட்டிருந்தது. நான் அவர்களிடத்தில், “இதில் எத்தனை பேர் கென்டக்கியை சேர்ந்தவர்கள்” என்றேன். எல்லாருமே எழும்பி நின்றுவிட்டனர். அன்றிரவு நான் என்னுடைய சபைக்குச் சென்று, “இங்கே கென்டக்கியிலிருந்து வந்தவர்கள் எத்தனை பேர்?” என்று கேட்டேன். எல்லோருமே எழுந்து நின்றனர். எனவே நான், “அது மிகவு அருமையாயிருக்கிறது” என்றேன். ஊழியக்காரர்கள் ஒரு நல்ல பணியை செய்திருக்கிறார்கள். எனவே நாம் அதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 4 இப்பொழுது ரோமாபுரியாருக்கு எழுதின புத்தகத்தில் 11-ம் அதிகாரம் 28-ம் வசனத்தை வாசிக்கலாம். இப்பொழுது வேத வசனத்தை வாசிக்கையில் கூர்ந்து கவனியுங்கள். சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக் குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப் பட்டவர்களாயிருக்கிறார்கள். தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. 5 ஜெபம் செய்வோம். கர்த்தாவே, நாங்கள் இதை பயபக்தியோடும், எங்கள் முழு இருதயத்தோடும், உத்தமத்தோடும் அணுகுகையில், இன்றிரவே இப்பொழுதே எங்களுக்கு உதவி செய்யும். உம்முடைய மகிமைக்காகவே இந்த காரியங்களெல்லாம் கூறப்பட்டிருக்கின்றன. எனக்கு உதவி செய்யும் கர்த்தாவே. சொல்லப்பட வேண்டிய காரியங்களையும், அதிலும் எந்தளவு சொல்லப்பட வேண்டும் என்பதையும் என் சிந்தனையில் வையும். உம்முடைய நேரம் வரும்போது என்னை நிறுத்தும். இந்த கூட்டத்திலுள்ள வியாதியஸ்தரும், தேவைகளுள்ளவர்களும் பயனடையவும், ஒவ்வொரு இருதயமும் இந்த காரியங்களை ஏற்றுக்கொள்ளவுஞ் செய்யும். நான் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். 6 நாம் சிறு கூட்டமாய் இருக்கையிலே, நான் இந்த பொருளின் பேரில் பேசும்படியாய் அணுகுகிறேன். நான் உங்களை நீண்ட நேரம் காக்க வைக்காமலிருக்க முயற்சிப்பேன். என்னுடைய கடிகாரத்தை இங்கே எனக்கு முன்பாக வைத்து உங்களை சரியான நேரத்தில் வெளியே அனுப்ப இயன்ற வரையில் பிரயாசிப்பேன். அதனால் நீங்கள் நாளை இரவு திரும்பவும் வரமுடியும். இப்பொழுது ஜெபத்தில் இருங்கள். பையன் ஜெப அட்டைகளைக்கூட கொடுக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அவன் கொடுத்தானா என்றுகூட அவனிடத்தில் கேட்கவில்லை. அவர்கள் கொடுக்கவில்லையென்றாலும் அல்லது கொடுத்திருந்தாலும் அல்லது கொடுக்கவில்லையென்றாலும் ஒரு பாதகமுமில்லை. எப்படியாயினும் நாங்கள் யாரையாவது அழைக்க வேண்டுமென்றால், நாங்கள் இங்கே உள்ளே அட்டைகளை வைத்திருக்கிறோம். எனவே, அப்படியாய் இல்லையென்றாலும், ஏன்? பரிசுத்த ஆவியானவர் என்ன கூறுகிறார் என்பதையே நாம் சற்று பார்ப்போம். 7 இப்பொழுது நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களேயானால்…நலமாயிருக்கும். இப்பொழுது…இது ஒருக்கால்…அதாவது நான்…இங்கே நம்மில் ஒரு சிலர்தான் இருக்கிறோம். இதை கூறுவதற்கு இதுதான் நல்ல நேரமாயிருக்கிறது. ஏனென்றால் இது என்னுடைய சொந்த காரியத்தோடு இடைபடுகிறது. அந்த காரணத்தினால்தான் நான் இன்றிரவு இந்த வேத வாக்கியத்தை வாசித்தேன். அதாவது வரங்களும், அழைப்புகளும் யாரும் ஏதோ ஒரு தகுதியின்பேரில் பெற்றுக்கொள்கின்ற ஒன்றல்ல என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கே வாசித்துக் காண்பித்தேன். 8 பவுல் இங்கே பேசிக்கொண்டிருக்கையில், “சுவிசேஷத்தின் வரிசையில் உள்ள யூதர்கள் நம் நிமித்தமாகவே குருடாக்கப்பட்டு தேவனிடத்திலிருந்து தூரமாய் விலக்கப்பட்டனர்” என்றான். ஆனால் அதற்கு சற்று முன் உள்ள வசனத்தில், “இஸ்ரவேலர் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள்” என்றும் கூறினான். இஸ்ரவேலர் எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள். தெரிந்து கொள்ளுதலின்படியே, பிதாவாகிய தேவன் அவர்களை நேசித்து புறஜாதியாராகிய நமக்கு ஒரு இடம் உண்டாயிருக்கும்படியாக அவர்களைக் குருடாக்கினார். இப்பொழுது மனந்திரும்புதலினால் ஆபிரகாம் மூலமாக அவருடைய வித்தானது எல்லா உலகத்தையும் அவருடைய வார்த்தையின்படியாக ஆசீர்வதிக்கும்படிக்கே அப்படி செய்தார். தேவனுடைய ஒப்பற்ற தன்மையானது எப்படியுள்ளது என்பதை பார்த்தீர்களா? அவருடைய வார்த்தை அப்படித்தான் இருக்க வேண்டும். அவர் வேறெதோ ஒன்றாக ஒருபோதும் இருக்கமுடியாது. இப்பொழுது நாம்…தேவன் நம்மை தெரிந்துகொண்டார். அவர் யூதர்களை தெரிந்து கொண்டார். எனவே அவர்… 9 இந்த காரியங்கள் யாவுமே தேவனுடைய முன்னறிவாக இருக்கின்றன. அவைகள் என்னவாயிருக்கும் என்று அவர் அவைகளைக் குறித்து உரைத்தபோதே அவர் அவைகளை முன்னறிந்திருந்தார். இப்பொழுது தேவனானவர், தாம் தேவனாக இருக்கும்படியாக ஆதியிலேயே அவர் முடிவை அறிந்திருக்க வேண்டும். அவ்வாறில்லையென்றால், அவர் எல்லையற்ற தேவனாயிருக்க முடியாதே. ஒருவரும் கெட்டுப் போகக்கூடாது என்பதே தேவனுடைய விருப்பமாயிருக்கிறது. நிச்சயமாகவே கெட்டுப் போகக்கூடாதென்பதே! ஒருவரும் கெட்டுப்போக அவர் விரும்புகிறதில்லை. ஆனால் ஆதியிலே நாட்களின் துவக்கத்திலேயே, உலகத்தின் துவக்கத்திலேயே தேவனானவர் யார் இரட்சிக்கப்படுவர், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதை சரியாக அறிந்திருந்தார். அவர் ஜனங்கள் இழக்கப்பட்டு போக விரும்பவில்லை. ஆனால், “யாரேனும் இழந்து போக வேண்டும் என்பது அவருடைய சித்தமாயில்லாமல் எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதே அவருடைய சித்தமாயிருக்கிறது”. ஆனால் ஆதியிலேயே அவர் யார் இரட்சிக்கப்படுவார்கள் என்றும், யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிந்திருந்தார். அந்த காரணத்தினால்தான் அவரால், “இந்த காரியம் சம்பவிக்கும் என்றும், அந்த காரியம் சம்பவிக்கும் என்றும்” முன்னறிவிக்க முடிந்தது. எனவே, “இது அதுவாயிருக்கும். இந்த நபர் அந்தவிதமாயிருப்பான்” என்றும் முன்னறிவிக்க முடிந்தது. புரிகின்றதா? 10 அவரால் அதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். ஏனென்றால் அவர் எல்லையற்றவராய் இருக்கிறார். நீங்கள் அதன் அர்த்தம் என்ன என்று அறிந்துகொள்ள வேண்டுமென்றால், அதாவது அவருக்குத் தெரியாதது ஒன்றுமேயில்லை என்பதேயாகும். பாருங்கள், அவர் அறிந்திருக்கிறார். காலம் என்ற ஒன்று உண்டாவதற்கு முன்பும், இனி காலம் செல்லாது என்பதற்கு பின்னும் அவர் அறியாதது ஒன்றுமேயில்லை. பாருங்கள், அவர் இன்னமும் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அவருடைய சிந்தையில் ஒவ்வொரு காரியமும் இருக்கிறது. ஆகையால் பவுல் ரோமர் 8,9—வது அதிகாரங்களில் கூறியுள்ளதுபோன்று, “இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்?” என்றான். எனவே நாம் அதை காண்கிறோம். ஆனால் தேவன்… 11 சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது போன்றேயுள்ளது. யாரோ ஒருவர் “சகோதரன் பிரான்ஹாம் நீர் அதை விசுவாசிக்கிறீரா?” என்று கேட்டார். அதற்கு நான், “கவனியுங்கள்” என்றேன். அப்பொழுது அவர், “நீர் ஒரு கால்வீனிய கொள்கைக்காரராயிருக்க வேண்டும்” என்றார். அதற்கு நான், “வேதாகமத்தில் கால்வீனிய கொள்கை என்ற ஒன்று இருக்கும் வரையில் நான் ஒரு கால்வீனியனாகத்தான் இருப்பேன்” என்றேன். 12 இப்பொழுது மரத்தின் மேல் ஒரு கிளை இருக்கின்றது. அதூதான் கால்வீனிசம். ஆனால் அங்கே மரத்தில் அதிகமான கிளைகளும்கூட இருக்கின்றன. ஒரு மரம் ஒன்றுக்கு மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாய் இருக்கிறது. அவர் அதை நித்திய பாதுகாப்புக்குள்ளாக கொண்டுபோக வேண்டுமென்று விரும்புகிறார். கொஞ்சம் கழித்து நீங்கள் முழு மானிட மீட்பு என்ற கோட்பாட்டுக் (Universalism) கிளைக்குப் போய் விடுவீர்கள். அதன் பின்னர் அங்கிருந்து வேறெதோ கிளையில் விழுந்துவிடுவீர்கள். எனவே அதற்கு முடிவே கிடையாது. ஆனால் நீங்கள் கால்வீனிசத்தினூடாக போகும்போது, நீங்கள் திரும்பி வந்து அர்மீனியனிசத்தில் துவங்குவீர்கள். பாருங்கள், அங்கே மரத்தில் இன்னொரு கிளை இருக்கிறது. இன்னொரு கிளை மரத்தின் மேல் இருக்கிறது. அப்படியே போகலாம். அந்த முழு காரியமும் சேர்ந்துதான் அதை மரமாக ஆக்குகிறது. எனவே வேத வார்த்தைகளில் அது நிலைத்து இருக்குமட்டாய்…நான் கால்வீனிசத்தை விசுவாசிக்கிறேன். 13 தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்பே கிறிஸ்துவுக்குள் தம்முடைய சபையை அறிந்து, தெரிந்துகொண்டு உலகத் தோற்றத்திற்கு முன்பே கிறிஸ்துவை அடித்தார் என்பதை நான் விசுவாசிக்கிறேன். வேதம் அவ்வண்ணமே உரைத்துள்ளது, அதாவது, “அவர் உலக தோற்றம் முதல் அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியாயிருந்தார்” என்றே உரைத்துள்ளது. புரிகின்றதா? உலகத்தோற்றத்திற்கு முன்பே நம்மை அறிந்திருந்தார் என்று இயேசுவானவர் கூறினார். பவுலும், “அவர் நம்மை அறிந்து, உலக தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்து கொண்டபடியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்” என்றார். அது தேவனே. அது நம்முடைய பிதாவானவரே. புரிகின்றதா? 14 எனவே கவலைப்படாதீர்கள். காலச்சக்கரங்கள் சரியாக திரும்புகின்றபடியால் எல்லா காரியங்களும் சரியான நேரத்திலேயே சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. ஒரே ஒரு காரியம் என்னவெனில், திருப்பத்திற்குள்ளாக செல்வதேயாகும். அதைக் குறித்த நல்ல பகுதி அதுவேயாகும். ஆகையால் நீங்கள் திருப்பத்திற்குள்ளாக சென்று கொண்டிருக்கும் போது, எப்படி கிரியை செய்ய வேண்டுமென்பதை அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 15 இப்பொழுது, இப்பொழுது கவனியுங்கள், “தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.” கர்த்தருக்குள் உண்டான என்னுடைய அழைப்ப்பை வேத வாக்கியங்களின்படியாய் பொருத்த இந்த வழிதான் எனக்கு உள்ளது. இது தனிப்பட்ட நபருக்குரியது என்று எடுத்துக்கொள்ளாமல், நிச்சயமாகவே இதை புரிந்து கொள்ளக்கூடிய நண்பர்களோடு இன்றிரவு நான் இங்கு இருக்கிறேன் என்றே நம்புகிறேன். மேலும் உங்களுக்கு ஒரு புரிந்துகொள்ளுதல் உண்டாகி, தேவன் என்ன செய்வதாக கூறியிருக்கிறாரோ, அதை அறிந்து, ஏதோ காரியம் அசைவதையும் கண்டறிந்து, பின்னர் அதை பின்பற்றிச் செல்வீர்கள் என்றே நம்புகிறேன். 16 ஆதியிலே என்னால் எப்போதும் நினைவுகூரமுடிந்த முதலாவது காரியம் ஒரு தரிசனமாகவே இருக்கிறது. தரிசனமே என்னுடைய சிந்தனையில் என்னால் நினைவுகூர முடிகின்ற முதல் காரியமாயுள்ளது. அவைகள் அநேகமாயிருந்தன. நான் ஒரு சிறு பையனாயிருந்தபோது அநேக வருடங்களுக்கு முன்னர் அவைகளைக் கண்டேன். நான் என்னுடைய கரத்தில் ஒரு சிறு பாறையை வைத்திருந்தேன். 17 இப்பொழுது, என்னை மன்னிக்கவும், நான் நீண்ட ஆடையை அணிந்திருந்ததை என்னால் நினைவுகூர முடிகிறது. சிறுபையன் முன்பெல்லாம் அணிந்துகொள்ளும் நீண்ட ஆடைகள் உங்களில் (எவருக்காவது) வயதானவர்களுக்காவது நினைவிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இங்கே இருக்கின்ற எத்தனை பேர்களுக்கு அந்த சிறுபிள்ளைகள் அணிந்துகொள்ளும், ஆம், அந்த நீளமான ஆடைகள் நினைவிருக்கிறது. நாங்கள் வசித்து வந்த வீட்டில், என்னுடைய சிறிய பழமையான குடிசை வீட்டில் இருக்கும்போது, நான் தவழ்ந்துகொண்டிருந்ததை என்னால் நினைவுகூர முடிகிறது. அது யாரோ ஒருவராயிருந்தது. ஆனால் அவர் யாரென்று எனக்குத் தெரியாது. அப்பொழுது அவர் உள்ளே வந்தார். என்னுடைய தாயார் என்னுடைய ஆடையில் நீலநிற நாடாவை வைத்து தைத்து எனக்கு உடையை ஆயத்தம் பண்ணியிருந்தாள். என்னால் அப்பொழுது சரியாக நடக்கக்கூடிய முடியாது. ஆனால் நான் அப்பொழுது தவழ்ந்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் குளிர்காயும் அடுப்பண்டை நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்த அவருடைய கால்களில் ஒட்டிக்கொண்டிருந்த பனியை நான் என் விரலை நீட்டி எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய தாயார் அதற்காக என்னை வெடுக்கென்று அங்கிருந்து தூக்கினது எனக்கு நினைவிருக்கின்றது. 18 அதன்பின்னர் எனக்கு நினைவிருக்கிற அடுத்த காரியம் என்னவெனில், அதற்கு சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின்னால் இது சம்பவத்திருக்க வேண்டும். நான் ஒரு சிறு பாறையை வைத்திருந்தேன். அப்பொழுது எனக்கு சுமார் மூன்று வயதிருந்திருக்கலாம். அப்பொழுது என்னுடைய சிறிய சகோதரனுக்கு இரண்டு வயதிருக்கும். நாங்கள் வீட்டின் முன் முற்றத்தில் இருந்தோம். அங்கே ஒரு சிறு முற்றம் இருந்தது. அங்கே வழக்கமாக மரக்கட்டையை கொண்டு வந்து வெட்டுவார்கள். அந்நாட்களில் அவர்கள் வழக்கமாக பின்முற்றத்தில் அதை இழுத்துக் கொண்டு வந்து வெட்டுவார்களே, அது உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? இன்றிரவு நான் ஏன் கழுத்தில் ஒரு கழுத்துப்பட்டையை அணிந்திருக்கிறேன்? நான்—நான் வீட்டில் இருக்கிறேன். 19 அப்பொழுது அவர்கள்…அங்கே வெளியே இருக்கின்ற அந்த பழைய விறகு வெட்டும் முற்றத்தில் ஒருசிறு ஓடை ஓடிக்கொண்டிருக்க அதிலிருந்து ஊற்று வந்து கொண்டிருந்தது. மேலும் அங்கே உயரேயிருந்த அந்த ஊற்றில் ஒரு பழமையான சுரக்குடுக்கை இருந்தது. நாங்கள் அதைக் கொண்டே தண்ணீரை மொண்டு அங்கிருந்த பழைய வாளியில், பழைய மர வாளியில் நிறைத்து, பின்னர் அதை கீழே கொண்டு வருவோம். 20 என்னுடைய வயோதிக பாட்டியை, அவள் மரிப்பதற்கு முன்னர் கடைசியாக நான் அவளை பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. அவள் நூற்றுப்பத்து வயதுடையவளாயிருந்தாள். அவள் மரித்தபோது, நான் அவளை என்னுடைய கரங்களில் தூக்கிக் கொண்டு, அவள் மரிப்பதற்கு முன்னரே இந்த விதமாய் என் கரத்தில் வைத்துக்கொண்டிருந்தேன். அவள் தன்னுடைய கரங்களினால் என்னை சுற்றிப்பிடித்துக் கொண்டு, அவள் மரிக்கும்பொழுது, “தேனே, தேவன் உன்னுடைய ஆத்துமாவை இப்பொழுதும் என்றென்றைக்கும் ஆசீர்வதிப்பாராக” என்றாள். 21 அந்த பெண்மணியின் ஜீவிய காலத்தில் அவளுக்கென சொந்தமாக ஒரு ஜதை பாதரட்சைகூட ஒருபோதும் இருந்ததே கிடையாது என்று நான் கருதுகிறேன். நான் அவளையே கவனித்துக் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் ஒரு வாலிபனாய் இருக்கும்போதுகூட அங்கு சென்று அவளை பார்ப்பேன். ஒவ்வொரு நாள் காலையிலும் அவள் எழுந்து, வெறுமையான பாதங்களோடு அந்த பனியில் நடந்து அந்த ஊற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வருவாள். அவளுடைய பாதம் வெறுமையாகவே இருக்கும். எனவே அது உங்களை புண்படுத்துகிறதில்லை. அவள் நூற்றுப்பத்து வயது வரை ஜீவித்தாள். (ஆம், ஐயா) அவள் மிக மிக கரடுமுரடானவளாயும் கூட இருந்தாள். 22 அதன் பின்னர் என்னுடைய தந்தை பையனாய் இருந்தபோது விளையாடின கோலிகளைக் குறித்து என்னிடம் கூறினது எனக்கு நினைவிருக்கிறது. பாவம் அந்த வயோதிகமானவள், அப்பொழுது நான், “எப்படித்தான் அவள் அந்த பரணின் மேல் ஏறுவாளோ?” என்று எண்ணியிருந்தேன். பழமையான இரண்டு அறைகளைக் கொண்ட ஒரு சிறு வீடும், அதில் ஒரு பரணும் இருந்தது. அவள் இரண்டு கட்டைகளினால் உண்டு பண்ணியிருந்த ஒரு ஏணியை வைத்திருந்தாள். அதைக் கொண்டே பரணிக்கு ஏறுவாள். அப்பொழுது நான்… 23 இப்பொழுது அவள், “மதிய உணவிற்குப் பின்னர், உன்னுடைய தகப்பனாருடைய கோலிகளை நான் உனக்கு காட்டப் போகிறேன்” என்றாள். அதற்கு நான், “சரிதான்” என்றேன். 24 அவள் அவைகளை எனக்கு காட்டப்போவதாக இருந்தாள். மேலும் வயோதிகர்கள் செய்வது போன்றே அவளுடையவைகளையெல்லாம் ஒரு தகரப்பெட்டியில் போட்டு பரணியில் வைத்திருந்தாள். அப்பொழுது நான், “அந்த வயதான பாட்டி பாவம் எப்படித்தான் அந்த ஏணியில் ஏறி இதை எனக்கு காட்டப்போகிறாளோ?” என்று எண்ணினேன். எனவே நான் அங்கே போய், “பாட்டியம்மா” என்று கூப்பிட்டு, “இப்பொழுது கொஞ்சம் பொறுங்கள், தேனே, நான் மேலேறிப்போய் உங்களுக்கு உதவி செய்வேன்” என்றேன். 25 அதற்கு அவளோ, “ஒதுங்கி நில்” என்றாள். பின்னர் ஒரு அணிலைப் போன்று அந்த ஏணியில் ஏறிச்சென்றாள். அதன் பின்பு அவள், “இப்பொழுது மேலே வா” என்றாள். அப்பொழுது நான், “சரி, பாட்டி” என்றேன். 26 நான், “ஓ, என்னால் மட்டும் அவ்விதமாய் இருக்க முடிந்தால் நலமாயிருக்குமே. நூற்றுப்பத்து வயதாயிருக்கும்போது எனக்கு அவ்வளவு பலம் இருந்தால் நலமாயிருக்குமே” என்று எண்ணிக்கொண்டேன். 27 இப்பொழுது, அடுத்தபடியாக இந்த சிறிய நீரூற்றண்டை இருக்கையில் என்னுடைய கரத்தில் ஒரு சிறு கற்பாறையை வைத்துக் கொண்டு, நான் எவ்வளவு பலமுள்ளவனாயிருந்தேன் என்பதை என்னுடைய இளைய சகோதரனுக்குக் காட்டும்படியாக முயற்சித்து சேற்றில் அதை இந்த விதமாக வீசிக்கொண்டிருந்தது என் நினைவிற்கு வருகிறது. அங்கே ஒரு பறவை மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு சத்தமிட்டுக் கொண்டு, மரப்பட்டையை கிழித்துக்கொண்டும் இருந்தது. அது ஒரு சிறிய ராபின் அல்லது வேறெதோ ஒரு பறவையாக இருந்தது. அப்பொழுது அந்த சிறிய ராபின் பறவை என்னிடத்தில் பேசினது என்று நான் எண்ணிக் கொண்டேன். பின்னர் அது அப்படியே பறந்து போய்விட்டது. அதன் பின்னர் ஒரு சத்தம், “நியூ ஆல்பனி என்று அழைக்கப்படுகின்ற பட்டணத்திற்கு அருகில் உன்னுடைய ஜீவியத்தின் பெரும் பகுதியை நீ கழிக்கப்போகிறாய்” என்றுரைத்தது. 28 அது நான் வளர்க்கப்பட்ட இடத்திலிருந்து மூன்று மைல்கள் தூரத்தில் இருக்கிறது. பின்னர் சுமார் ஒரு வருடம் கழித்து அந்த இடத்திற்குச் சென்றோம். அந்த இடத்தைக் குறித்து ஒன்றுமே அறியாதவர்களாக நியூஆல்பனிக்குச் சென்றோம். ஜீவிய காலத்தினூடாக…அந்த காரியங்கள் எப்படியாய் நிகழ்ந்தது. 29 இப்பொழுது பாருங்கள், என்னுடைய ஜனங்கள் புத்தியுள்ளவர்கள் அல்ல. என்னுடைய தகப்பனும், தாயும் சபைக்கு சென்றதேயில்லை. அதற்கு முன்னர் அவர்கள் கத்தோலிக்கர்களாயிருந்தனர். 30 என்னுடைய அக்கா மகன் இன்றிரவு இங்கு எங்கோ அமர்ந்து கொண்டிருக்கிறான் என்றே நான் யூகிக்கிறேன். எனக்குத் தெரியாது. அவன் ஒரு போர்வீரன். நான் அவனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன், அவன் ஒரு கத்தோலிக்கன், இன்னமும் கத்தோலிக்கனாகவே இருக்கிறான். நேற்று மாலை அவன் இங்கே இருந்து தேவனுடைய அந்த காரியங்களைக் கண்டான். அவன் அங்கே மேடையருகில் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன், “பில் மாமா” என்றான். அவன் நீண்டகாலமாக கடல் கடந்து சென்று வருபவன், எனவே அப்பொழுது அவன் அதை கண்டபோது,…“இப்படிப்பட்ட காரியங்கள் கத்தோலிக்க சபையில் சம்பவிக்கிறதில்லையே” என்றான். பின்னர் அவன், “பில் மாமா, நான் அதை விசுவாசிக்கிறேன், நீர் சரியாயிருக்கிறீர்” என்றான். 31 எனவே நான், “தேனே, நான் சரியாயிருக்கிறேன் என்பதல்ல, அது அவர் சரியாயிருக்கிறார் என்பதாகும், பாருங்கள். அவர் சரியாயிருக்கிறார்” என்றேன். எனவே அப்பொழுது அவன்…அப்பொழுது நான், “இப்பொழுது மெல்வீன் (Melvin) உன்னுடைய முழு இருதயத்தோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சேவி என்பதையல்லாமல் வேறெதையும் நீ செய்யும்படி நான் கேட்டுக் கொள்ளப்போவதில்லை, நீ எங்கு வேண்டுமானாலும் செல். ஆனால் புத்தம் புதிதாய் இயேசு கிறிஸ்து உன்னுடைய இருதயத்தில் பிறந்திருக்கிறார் என்ற நிச்சயத்தை உடையவனாய் இரு. அதை உன் இருதயத்தில் பார். அதன்பின்னர் நீ விரும்புகிற எந்த சபைக்கு வேண்டுமானாலும் போகலாம்” என்றேன். 32 இப்பொழுது, ஆனால் எனக்கு முன்பிருந்தவர்கள் கத்தோலிக்கர்களாக இருந்தனர். என்னுடைய தகப்பனார், அயர்லாந்து நாட்டுக்காரர். என்னுடைய தாயாரும் அயர்லாந்து நாட்டவரே. எனவே அந்த அயர்லாந்து இரத்தத்தில் ஏற்பட்ட ஒரே ஒரு இடைவெளி என்னவென்றால், என்னுடைய பாட்டி ஒரு செவ்விந்திய இனத்தவளாயிருந்தாள். என்னுடைய தாயார் ஒரு கலபு இனம். ஆகவே அப்பொழுது நான்…எனக்கு, அது என்னுடைய…எங்களுடைய தலைமுறையில் மூன்று தலைமுறைகளுக்குப் பின்னர்தான் அது இல்லாமற் போகும். ஆனால் முழுவதுமாக அயர்லாந்துக்காரர்களிடையே ஏற்பட்ட ஒரு இடைவெளி அதுவே. ஹார்வே பிரான்ஹாம் என்பதே பெயராக இருந்தது. பின்னர் அதற்குப் பின்னால் ஸ்காத்லாந்து அதுவும் அயர்லாந்துக்காரராகவே இருக்கிறது. ஆக அவர்களெல்லாரும் கத்தோலிக்கர்கள். எனவே எனக்கே பிள்ளைகள் என்ற முறையில் எந்தவித சமய பயிற்சியோ அல்லது உபதேசமோ ஒன்றுமே கிடையாது. 33 ஆனால் அந்த வரங்கள், அந்த தரிசனங்கள், நான் இப்பொழுது காண்கிறது போலவே அப்பொழுதும் தரிசனங்களைக் கண்டேன். அது உண்மை. ஏனென்றால், தேவனுடைய கிருபை வரங்களும், அவர் அழைத்த அழைப்புகளும் மாறாதவைகளே. அது தேவனுடைய முன்னறிதலாயிருக்கிறது. அது தேவன் செய்து கொண்டிருக்கிற ஏதோ காரியமாகும். என்னுடைய ஜீவியத்தினூடாக நான் அதைக் குறித்து எதையுமே கூற பயந்திருந்தேன். 34 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் என்ற சிறு புத்தகத்தில் என்னுடைய கதையை நீங்கள் வாசித்திருப்பீர்கள். அது மற்ற ஏதோ புத்தகத்திலும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஜீன் (Gene) அது சரிதானே! ஜீன் அது வழக்கமாக—வழக்கமாக அனுப்புகின்ற புத்தகங்களில் இருக்கிறது. இப்பொழுது எந்த புத்தகத்தில் அது உள்ளது? சுய சரிதையிலா? அதில்தான் உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஆகையால் நாம்…அது பயபக்தியை உண்டாக்கவில்லையா? என்னுடைய சொந்த புத்தகங்களிலிருந்து நானே அதை வாசித்ததில்லை. ஆனால் அதை வேறு யாரோ எழுதுகிறார்கள். ஆக அவர்கள் கூட்டங்களில் நான் கூறுபவைகளிலிருந்து சில காரியங்களை எடுத்துக் கொள்கிறார்கள். நான் அதை வாசித்துக் கொண்டு வருகிறேன். எனவே இனி ஏதோ காரியம் சம்பவிக்க நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆக அவைகள் அருமையானவைகளாயிருக்கின்றன. நான் அவைகளில் சில பகுதிகளை இங்கேயும் அங்கேயுமாக சமயம் கிடைக்கும்போதெல்லாம் வாசித்திருக்கிறேன். 35 இப்பொழுது நான் ஒரு சிறு பையனாய் இருந்தபோது அந்த சத்தம் என்னிடத்தில் எப்படி பேசினது என்ற தரிசனத்தை நீங்கள் அறிவீர்கள். எனக்கு சுமார் ஏழு வயதிருக்கும். அப்பொழுது, “குடிக்காதே, புகைக்காதே, உன்னுடைய சரீரத்தை எந்த வழியிலும் கறைப்படுத்திக் கொள்ளாதே. உனக்கு வயதாகும் போது நீ செய்ய வேண்டிய ஒரு ஊழியம் இருக்கும்” என்றுரைத்தது. நீங்கள் அவ்வாறு கூறப்பட்டுள்ளதை புத்தகத்தில் வாசித்திருப்பீர்கள், நல்லது. அது உண்மையே. இப்படியாக அவை தொடர்ந்து சம்பவித்தன. 36 நான் ஒரு ஊழியக்காரனானபோது, அப்பொழுது அது உண்மையாகவே எல்லா நேரங்களிலும் சம்பவிக்கத் துவங்கியது. 37 ஓர் நாள் இரவு நான் நம்முடைய கர்த்தராகிய இயேசுவைக் கண்டேன். நான் பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து பெற்ற அனுமதியோடு இதை கூறிக்கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். கர்த்தருடைய தூதனாக வருகிறவர் கர்த்தராகிய இயேசுவல்ல. அதே தரிசனத்தில் அது அவரைப் போன்று காணப்படவில்லை. ஏனென்றால், கர்த்தராகிய இயேசுவை நான் காண்கிற தரிசனத்தில், அவர் ஒரு சிறிய மனிதராக இருந்தார். நான் வயல்வெளியில் என்னுடைய தகப்பனாருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் நான் உள்ளே வந்து என்னுடைய படுக்கைக்குச் சென்றேன். அன்றிரவு நான் அவரை நோக்கிப் பார்த்து, “ஓ தேவனே அவரை இரட்சியுமே!” என்றேன். 38 என்னுடைய தாயார் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டிருந்தாள். நான் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்தேன். அதன் பின்னர் நான், “என்னுடைய தகப்பனார் அதிகமாய் குடிக்கிறாரே” என்று நினைத்தேன். அப்பொழுது நான், “என்னால் மட்டும் அவரை இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்படி செய்யக் கூடுமானால் நலமாயிருக்குமே” என்று எண்ணினேன். பின்னர் நான் வெளியே சென்று, என்னுடைய அறைக்கு முன்பாக இருந்த கதவுக்கு அருகில் இருந்த ஒரு சிறு பழைய வைக்கோல் படுகையில் (Pallet) படுத்துக் கொண்டேன். 39 அப்பொழுது ஏதோ ஒன்று என்னிடத்தில் “எழுந்திரு” என்றது. உடனே நான் எழும்பி நடக்கலானேன். பின்னர், மீண்டுமாக எனக்கு பின்னாக இருக்கின்ற வயல்வெளியில் உள்ள ஒரு பழைய துடைப்ப புதர் வயலுக்குச் சென்றேன். 40 அங்கே என்னிடத்திலிருந்து பத்து அடி தூரத்திற்கு அப்பால் ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தார். அவர் வெண்மையான வஸ்திரம் தரித்த ஒரு சிறு உருவங்கொண்ட மனிதனாயிருந்தார். அவர் இந்த விதமாக தன்னுடைய கரங்களை மடக்கி வைத்துக் கொண்டிருக்க, ஒருவிதமான குட்டையான தாடியுடன், தோள் வரை தலைமுடி தொங்கிக் கொண்டிருந்தது. அவர் என்னிடத்திலிருந்து பக்கவாட்டில் இந்த விதமாக பார்த்துக் கொண்டிருந்தார். மிகவும் அமைதியாக காணப்பட்ட ஒரு உருவம். ஆனால் என்னால் அதை புரிந்து கொள்ளமுடியவில்லை. அவருடைய பாதங்கள் எப்படி இருந்ததென்றால் ஒன்றன்பின் ஒன்றாக இருந்தது. அப்பொழுது காற்றும் அடித்துக் கொண்டிருந்தபடியால், அவருடைய அங்கி துடைப்பப்புல்லோடு அசைந்து கொண்டிருந்தது. 41 நான், “இப்பொழுது ஒரு நிமிடம் பொறுத்துப் பார்க்கலாம்” என்று எண்ணினேன். பின்னர் நான் என்னையே கடித்துப் பார்த்தேன். அதன்பின்பு நான், “இப்பொழுது நான் உறங்கவில்லையே” என்று சொல்லிக்கொண்டேன். அப்பொழுது நான் ஒரு துடைப்பப் புல்லைப் பிடித்து இழுத்து, அதில் ஒரு சிறு துண்டை ஒரு பல்பகுதியைப் போன்று செய்து கொண்டேன். பின்னர் அதை என்னுடைய வாயில் போட்டுக்கொண்டேன். அப்பொழுது நான் திரும்பி என்னுடைய வீட்டை நோக்கியே பார்த்துக் கொண்டிருந்தேன். நான், “இல்லை, நான் அங்கே உள்ள தகப்பனாருக்காகத்தானே ஜெபித்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஏதோ ஒன்று என்னிடத்தில் இங்கே வெளியே வா என்று கூற, இங்கே இந்த மனிதன் நிற்கிறாரே!” என்றே எண்ணினேன். 42 அப்பொழுது நான், “அது கர்த்தராகிய இயேசுவைப் போன்று இருக்கிறதே” என்று நினைத்தேன். நான், “அது அவராகத்தான் இருக்குமோ” என்றும் வியந்தேன். அவர் சரியாக நேராக இப்பொழுது எங்களுடைய வீடு இருக்கிற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார். எனவே என்னால் அவரைப் பார்க்கமுடியுமா என்று எண்ணி இந்த வழியாக நான் நகர்ந்து சென்றேன். இந்த விதமாக அவருடைய முகத்தைப் பக்கவாட்டில் என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் அவர்…அவரை பார்ப்பதற்காக நான் இந்தவிதமாய் அப்படியே சுற்றி வரவேண்டியதாயிருந்தது. நான், “ஹும்!” என்றேன். அது அவரை அசைக்கவேயில்லை. பின்னர் நான், “அவரை கூப்பிட்டுப் பார்க்கலாமே” என்று நினைத்தேன். அப்பொழுது நான், “இயேசுவே” என்றேன். அவர் அதை கேட்டபொழுது, இந்தவிதமாக திரும்பி நோக்கிப் பார்த்தார். எனக்கு அவ்வளவுதான் நினைவிருக்கிறது. அப்பொழுது அவர் அப்படியே தன்னுடைய கரங்களை நான் பிடிக்கும்படி நீட்டினார். 43 அவருடைய படத்தை வரைய இந்த உலகில் எந்த ஒரு ஓவியனும் இல்லை. அதாவது அவருடைய முகபாவத்தை ஒருவராலும் வரையமுடியாது. நான் எப்போதும் கண்டதிலேயே மிகவும் சிறந்ததாயிருப்பது எதுவென்றால் ஹாப்மேன் (Hotmann) என்பவர் வரைந்த முப்பத்தி மூன்று வயதில் கிறிஸ்துவினுடைய தலை என்ற புகைப்படமேயாகும். நான் அதை எல்லா புத்தகங்களிலும், நான் உபயோகிக்கின்ற ஒவ்வொரு புத்தகத்திலும் அதை வைத்திருக்கிறேன். அதற்குக் காரணம் என்னவென்றால் அது சரியாக அந்த விதமாக இருப்பது போலுள்ளது, எனவே…அல்லது கிட்டத்தட்ட சற்றே அப்படியே உள்ளது. 44 அவர் (ஒரு மனிதனை) போன்று காணப்பட்டார். அவர் பேசுவாரானால் உலகமே ஒரு முடிவுக்கு வந்துவிடும் போலிருந்தது. அதே சயமத்தில் அவர் அவ்வளவு அன்பும் தயவும் கொண்டவராயிருந்தார்…நான் தலைக்குப்புற விழுந்தேன். பொழுது விடிந்ததும் எனக்கு நினைவு வந்து விடியற்காலையில் நான் என்னைப் பார்க்கும்போது என்னுடைய இரவு உடுப்பான தளர் கால்சட்டையானது (Pajama) கண்ணீரினால் அப்படியே தோய்ந்திருந்தது. அப்படியே நான் துடைப்ப புதரினூடாக வீட்டிற்கு திரும்பி நடந்து சென்றேன். 45 நான் என்னுடைய ஊழியக்கார நண்பர் ஒருவரிடம் அதை கூறினேன். அப்பொழுது அவர், “பில்லி, அது உன்னை பைத்தியமாக்கிவிடும்” என்றார். மேலும் அவர், “அது பிசாசு” என்றார். தொடர்ந்து அவர், “நீ அதனோடு அந்தவிதமாய் விளையாடாதே” என்று கூறிவிட்டார். அந்த சமயத்தில் நான் ஒரு பாப்டிஸ்டு ஊழியக்காரனாயிருந்தேன். 46 அதன்பின்பு நான் என்னுடைய இன்னொரு பழைய நண்பரிடம் சென்றேன். நான் அவரிடம் அமர்ந்து அதைக் குறித்துச் சொன்னேன். பின்னர் நான், “சகோதரனே நீர் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டேன். 47 அதற்கு அவர், “பில்லி நான் உனக்கு கூறவுள்ளேன்” என்றார். பின்னர் அவர், “நீர் உம்முடைய ஜீவியத்தை காத்துக் கொள்ள முயற்சிப்பாயானால், வெறுமனே வேதத்தில் இங்கு என்ன உள்ளதோ அதையே பிரசங்கிக்கும்படி, தேவனுடைய கிருபை முதலான காரியங்களை பிரசங்கிப்பதே நலமாயிருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும் நான் ஏதோ ஒரு விசித்திரமான ஒரு காரியத்தின் பின்னோ, அதைப் போன்ற ஒரு காரியத்தின் பின்னோ செல்ல மாட்டேன்” என்று கூறினார். 48 அதற்கு நான், “ஐயா, ஏதோ விசித்திரமான ஒரு காரியத்தின் பின்னே போக வேண்டுமென்று நான் கூறவில்லை” என்றேன். மேலும் நான், “நான் கண்டறிய வேண்டும் என்று முயற்சிக்கின்ற ஒரே காரியம் என்னவென்றால், அது என்னவாயிருக்கும் என்பதேயாகும்” என்றேன். 49 அதற்கு அவர், “பில்லி, எத்தனயோ வருஷங்களுக்கு முன்னர் சபைகளிலே அந்த காரியங்களெல்லாம் இருந்திருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு, “ஆனால் அப்போஸ்தலர்கள் போன பிறகு அந்த காரியங்களெல்லாம் அதனோடு இல்லாமற்போயிற்றே” என்றார். மேலும் அவர், “இப்பொழுது நமக்கிருக்கின்ற ஒரே காரியம் என்னவென்றால்…நாம் அப்படிப்பட்ட காரியங்களைக் காண்கிறதில்லையே” என்றும், “அது மரித்த ஆவிகளோடு தொடர்பு கொள்ளுதலும், பிசாசுகளுமாயிருக்கிறதே” என்றும் கூறிவிட்டார். அதற்கு நான், “ஓ சகோதரன் மிக்கினி (Mckiney) நீரும் அப்படித்தான் கருதுகிறீரா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம் ஐயா” என்றார். அப்பொழுது நான், “ஓ தேவனே என் மேல் கிருபையாயிருமே” என்றேன். 50 பின்னர் நான், “நான்—நான்…ஓ, சகோதரன் மிக்கினி அவ்விதமாய் எனக்கு சம்பவிக்கும்படி தேவன் ஒருபோதும் அனுமதியாதபடிக்கு நீர்—நீர் என்னோடு ஜெபத்தில் சேர்ந்து சேர்ந்து கொள்வீரா? நான் அவரை நேசிக்கிறேன் என்பதை நீ அறிவாய். எனவே நான் இந்த காரியங்களில் தவறாயிருக்க விரும்பவில்லை” என்றேன். மேலும் நான், “நீங்களும் என்னோடு ஜெபியுங்கள்” என்றேன். 51 அதற்கு அவர், “சகோதரன் பில்லி நான் ஜெபிக்க விரும்புகிறேன்” என்றார். எனவே நாங்கள் அங்கிருந்த போதகரின் வீட்டிலேயே ஜெபித்தோம். 52 நான் அநேக ஊழியக்காரர்களையும் கேட்டுப் பார்த்தேன். அப்போதும் அதேவிதமான பதிலே வரும். அதன் பின்னர் அவர்களிடம் கேட்பதற்கே பயப்பட்டேன். ஏனென்றால் நான் ஒரு பிசாசு என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்களே என்றே பயந்திருந்தேன். எனவே நான் அவ்விதமாய் இருக்க விரும்பவில்லை. என்னுடைய இருதயத்தில் ஏதோ ஒரு காரியம் சம்பவித்ததை நான் அறிந்திருந்தேன். இப்பொழுது அவ்வளவுதான், ஏதோ காரியம் என்னுடைய இருதயத்தில் சம்பவித்திருந்தது. எனவே நான் ஒருபோது அவ்விதமாய் இருக்க விரும்பவில்லை. 53 எனவே அநேக வருடங்களுக்கு முன்னர் முதல் பாப்டிஸ்ட் சபையில் நான் ஒரு அங்கத்தினனாக இருந்தபோது, அங்கே யாரோ ஒருவர், “நீ அங்கே போய் அந்த பரிசுத்த உருளைகள் பேசுவதை நேற்றிரவு கேட்டிருக்க வேண்டும்” என்று கூறினதை கேட்டிருந்தேன். 54 அப்பொழுது நான், “பரிசுத்த உருளைகளா?” என்று எண்ணிக் கொண்டேன். என்னுடைய நண்பர்களில் ஒருவரான வால்ட் ஜான்சன் (Walt Johnson) என்பவர் கீழ் சுருதியில் (Bass) பாடுபவர். அப்பொழுது நான். “சகோதரன் வால்ட் அதுவென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அது இந்த ஒரு கூட்ட பெந்தேகோஸ்தேகளே” என்றார். நான், “என்ன?” என்று கேட்டேன். 55 அதற்கு அவர், “அது பெந்தேகோஸ்துகளாயிற்றே!” என்றார். மேலும், “பில்லி, நீர் மட்டும் அதைப் பார்த்திருந்தால் நலமாயிருந்திருக்கும்” என்றார். ஏனென்றால், “அவர்கள் அப்படியே அந்த விதமாக தரையில் உருண்டு கொண்டும், மேலும் கீழுமாகக் குதித்துக் கொண்டுமிருந்தனர்” என்றார். தொடர்ந்து அவர், “அவர்கள் ஏதோவிதமான ஒரு அந்நிய பாஷைகளில் உளறிக் கொண்டிருந்தார்கள் என்றும், அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்றால் அவர்கள் இரட்சிக்கப்படவில்லை என்றும் அர்த்தமாம் என்றே அவர்கள் கூறினர்” என்றார். அப்பொழுது, “அது எங்கே நடக்கிறது?” என்று கேட்டேன். 56 அவர், “ஓ” என்று கூறி, “லூயிஸ்வில்லுக்கு பக்கத்தில் ஒரு சிறு பண்டைய மாதிரியான கூடாரக் கூட்டம் அங்கே நடக்கிறது” என்றும், “அவர்கள் உண்மையிலேயே கறுத்த ஜனங்கள்” என்று கூறினர். அதற்கு நான், “ஹு, ஹு” என்றேன். அவரோ, “அங்கே அநேக வெள்ளையர்களும் இருக்கிறார்களே” என்றார். நான், “அவர்களும்கூட அதைச் செய்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம், ஆம்! அவர்களும்கூட அதைச் செய்தார்கள்” என்றார். 57 நான், “அது வேடிக்கையாய் இருக்கிறதே, அப்படிப்பட்ட காரியத்தில் ஜனங்கள் கலப்பாகி விடுகிறார்களே” என்றேன். பின்னர் நான், “அப்படிப்பட்ட காரியங்கள் நமக்கு இருந்தாக வேண்டும் என நான் யூகிக்கிறேன்” என்றேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், நான் அதை ஒருபோதும் மறக்கமாட்டேன். அவருக்கிருந்ந்த அஜீரணத்திற்காக அவர் காய்ந்துபோன ஆரஞ்சுப் பழத்தோலில் ஒரு துண்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நேற்றைய தினம் நான் அதைக் கண்டவிதமாகவே இன்றைக்கு அதை காணமுடிகிறது. நான், “உளறிக்கொண்டும், மேலும் கீழுமாக குதித்துக் கொண்டும், எந்தவிதமான ஒரு மார்க்கத்தை அவர்கள் அடுத்து பெறப்போகிறார்கள்?” என்று எண்ணினேன். எனவே நான்—நான் தொடர்ந்து சென்றேன். 58 அதன்பின்னர் சற்று கழித்து நான் ஒரு வயோதிக மனிதனை சந்தித்தேன். அவர் ஒருக்கால் இப்பொழுது இங்கே சபையில் இருக்கலாம் அல்லது ஜான் ராயன் (John Ryan) என்ற பெயரைக் கொண்டவராய், இங்கே சபைக்கு வந்தவராய் இருக்கலாம். நான் ஓர் இடத்தில் அவரை சந்தித்தேன்…அவர் நீண்ட தாடியும், நீண்ட தலைமுடியையும் உடையவராயிருந்தார். அவர் இங்கே இருக்கலாம். அவர் தாவீதின் வீடு இருக்கிற பென்டன் ஹார்பர் (Benton Harbour) என்ற இடத்திலிருந்து வந்தவர் என்றே எண்ணிக் கொண்டேன். 59 அவர்களுக்கு லூயிவில்லில் ஒரு இடம் இருந்தது. நான் அந்த ஜனங்களைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் அதை தீர்க்கதரிசிகளின் பள்ளி என்று அழைத்தனர். எனவே நான் அங்கு சென்று அது என்னவென்பதை பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். நான் தரையில் உருண்டு கொண்டிருந்த எவரையுமே அங்கே காணவில்லை. ஆனால் அவர்கள் விநோதமான உபதேசங்களை உடையவர்களாயிருந்தார்கள். அங்கேதான் நான் இந்த வயதானவரையும் சந்தித்தேன். அவர் தன்னுடைய இடத்திற்கு வரும்படி என்னை அழைத்திருந்தார். 60 நான் ஓய்வெடுப்பதற்காக அங்கே சென்றேன். நான் ஒருநாள் அங்கு இருக்கையில், நான் அவருடைய வீட்டிற்கு திரும்பவுமாக போயிருந்தேன். அப்பொழுது அவரோ வேறெங்கோ போயிருந்தார். அவர் இந்தியானாபோலீஸீல் உள்ள ஓர் இடத்திற்கு சென்றிருந்தார் என்று நான் எண்ணினேன். ஆனால் அவருடைய மனைவியோ, “கர்த்தர் அவரை அழைத்துக் கொண்டார்” என்றாள். அப்பொழுது நான், “நான் அந்தவிதமாக அந்த மனிதன் ஓடிப்போக நீ அனுமதித்ததைக் கூறுகிறாயா?” என்று கேட்டேன். 61 அதற்கு அவள், “ஓ, அவர் தேவனுடைய ஊழியக்காரனாயிற்றே!” என்றாள். பாவம் அந்த வயதானவர் சில வாரங்களுக்கு முன்னர்தான் மரித்துப் போனார் என்று கேள்விப்பட்டேன். அவருக்கு அவள் விசுவாசமுள்ளவளாயிருந்தாள். என்னே, அந்த விதமாக மனைவி அமைய வேண்டுமே! அது உண்மை. சரியோ அல்லது தவறோ, எப்படியிருந்தாலும் அவர் கூறுவதே சரியானதே! நான் கூறினேன்,…நல்லது, அவர்களை அறிவேன், அவர்கள்… 62 இப்பொழுது அவர்…சகோதரன் ரையன் நீர் இங்கே இருக்கிறீரா? அவர் இங்கு இல்லை. அன்றொரு நாள் அவர் இருந்தார். பையன்களே அவர் இருக்கவில்லையா? 63 அவர்கள் கைக்கு கிடைக்கிறது எதுவோ அதைக்கொண்டு தான் அவர்கள் ஜீவிக்கிறார்கள். சாப்பிட அவருக்கு வீட்டில் ஒன்றுமே இருந்ததில்லை. அது உண்மை. நான் மிக்சிகனிலுள்ள ஒரு குட்டையில், இல்லை, ஏரியில் சில மீன்களை பிடித்துவிட்டு, நான் திரும்பி வந்தேன். அவர்களிடத்தில் மீனை வைத்துக் கொள்ளும்படியான இடமும் கிடையாது. மீனை சமைப்பதற்கு எண்ணெயும் கிடையாது. நான், “வீட்டில் ஒன்றுமே இல்லாத நிலையில் உன்னை விட்டுப்போய்விட்டாரா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “சகோதரன் பில், ஓ, அவர் தேவனுடைய ஊழியக்காரனாயிற்றே!” என்றாள். மேலும் அவள், “அவர்…” என்றாள். 64 அப்பொழுது நான், “உங்களுடைய வயோதிக இருதயத்தை தேவன் ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, நான் உன் பட்சத்தில் இருப்பேன்” என்று எண்ணிக்கொண்டேன். அது உண்மை. “உன்னுடைய கணவரைக் குறித்து அவ்வளவாய் கருதுகிறாயே. நானும் உன்னோடு சேர்ந்து அதற்காக உன் பட்சத்தில் நிற்பேன்” என்றேன். அது உண்மை. இன்றைக்கு இதைப் போன்ற அதிகமான பெண்கள் நமக்குத் தேவை. இந்த விதமாக தங்களுடைய மனைவியைக் குறித்து நினைக்கின்ற அதிகமான ஆண்கள் தேவை. அது சரியே. அந்தவிதமாக புருஷனும் மனைவியும் இணைந்து இருந்தால் இது ஒரு மேலான அமெரிக்காவாக இருக்குமே. சரியோ அல்லது தவறோ அவர்களோடு தரித்திருங்கள். அப்படியிருந்தால் அதிகமான விவாகரத்துகள் இருக்காதே. 65 எனவே நாங்கள்—நாங்கள்…சென்றபோது…அதன் பின்பு நான் தொடர்ந்து சென்றேன். நான் என் வீட்டிற்குப் போகையில், அது ஒரு விநோதமான காரியமாயிருந்தது. நான் மிஷவாக்காவினூடாக (Mishawaka) வந்தேன். அப்பொழுது அங்கே வீதியில் நான் சிறிய—சிறிய பழைய மாதிரியான கார்களைக் கண்டேன். அவைகளில், “இயேசு மாத்திரம்” என்ற பெரிய விளம்பர பலகைகள் இருந்தன. “இயேசு மாத்திரம்” எது என்னவெனில்…நான், “அது மார்க்க சம்பந்தமாயிருக்க வேண்டும்” என்று எண்ணினேன். நான் இந்தப் பக்கமாக சென்றபோது அங்கே, “இயேசு மாத்திரம்” என்ற விளம்பரத்துடன் இருசக்கர மிதிவண்டிகளும், (Bicycles) காடிலாக் கார்களும், T மாதிரியான போர்டு கார்களிலும் மற்றவைகளிலும் “இயேசு மாத்திரம்” என்ற விளம்பரங்களும் இருந்தன. அப்பொழுது நான், “அது என்ன என்று வியப்புற்றவாறே” யோசிக்கலானேன். 66 ஆகவே நான் அதை பிதொடர்ந்து சென்றேன். அவ்வாறு சென்றபோது அது ஒரு மார்க்க சம்பந்தமான கூட்டமாயிருக்க பதினைந்தாயிரம் அல்லது இருபதினாயிரம் பேர்கள் அங்கே இருந்தனர். அங்கே இருக்கின்ற யாவரும் கூச்சலிட்டுக் கொண்டும், மேலும் கீழுமாக இவ்விதமாக குத்தித்துக் கொண்டிருப்பதை நான் கேட்டேன். அப்பொழுது நான், “யார் இந்த பரிசுத்த உருளைகள் என்பதை நான் இங்கு காணவுள்ளேன்” என்றே எண்ணிக்கொண்டேன். 67 நான் வைத்திருந்த என்னுடைய பழைய போர்டு காரை நீங்கள் அறிவீர்கள். அது மணிக்கு முப்பது மைல் வேகம் செல்லும். அதாவது இந்த வழியாக பதினைந்தும், இந்த வழியாக மேலும் கீழுமாக பந்தினைந்துமாக செல்லும் என்று நான் கூறுவேனே. எனவே அந்த என்னுடைய காரை ஒரு பக்கமாக கொண்டு சென்று, நான்…நிறுத்தி வைக்க இடம் கிடைத்தவுடன் அங்கேயே நிறுத்திவிட்டு வீதியினூடாக நடந்து சென்றேன். உள்ளே நடந்து சென்று சுற்றும் முற்றும் பார்த்தபோது, நிற்கக்கூடிய யாவரும் நின்று கொண்டிருந்தனர். நான் அவர்களுடைய தலைகளின் மேல்தான் பார்க்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், குதித்துக்கொண்டும், விழுந்துகொண்டும், தொடர்ந்து அவ்விதமே செய்துகொண்டிருந்தனர். நான், “வ்வூயு, ஹும், இவர்கள் என்ன விதமான ஒரு ஜனமாயிருக்கின்றார்கள்” என்றே எண்ணிக் கொண்டேன். 68 ஆனால் நான் அங்கே நீண்ட நேரம் நின்றபோது, நான் நன்கு உணர்ந்தேன். அப்பொழுது நான், “அது மிக நன்றாயுள்ளது போன்று தென்படுகிறதே” என்று எண்ணினேன். பின்னர் நான், “அந்த ஜனங்களிடத்தில் தவறு ஏதும் இல்லையே. அவர்கள் பைத்தியக்காரர்கள் அல்ல” என்றும் எண்ணினேன். நான் அவர்களில் சிலரிடத்தில் பேசினேன். அப்பொழுது அவர்கள்—அவர்கள் அருமையான ஜனங்களாயிருந்தனர். ஆகையால் நான்…சொன்னேன். 69 இப்பொழுது நான் அதே கூட்டத்திலிருந்து வெளியே போய், முழு இரவும் வெளியே தங்கிவிட்டு, பின்னர், அடுத்த நாளும் நான் கூட்டத்திற்குச் சென்றேன். என்னுடைய ஜீவிய சரித்திரத்தில் நான் அதை கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். நான் நூற்றைம்பது அல்லது அதை கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். நான் நூற்றைம்பது அல்லது இருநூறு ஊழியர்களோடு அல்லது அதற்கு அதிகமான ஊழியர்களோடு மேடையின்மீது இருந்தேன். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவரும் எழும்பி நின்று எங்கேயிருந்து வந்தவர்கள் என்பதை கூறும்படியாய் விரும்பினர். எனவே நான் எழும்பி நின்று சுவிசேஷகன் வில்லியம் பிரான்ஹாம், ஜெபர்சன்வில்லில் உள்ள “பாப்டிஸ்டு” சபையை சேர்ந்தவன் என்று கூறிவிட்டு அமர்ந்தேன். ஒவ்வொருவரும் தாங்கள் எங்கேயிருந்து வந்தவர்கள் என்பதை கூறினர். 70 ஆக அடுத்த நாள் காலையில் நான் அங்கே சென்றபோது…அந்த இரவு முழுவதும் நான் வயல்வெளியிலேயே உறங்கினேன். என்னுடைய போர்டு காரின் இருக்கைகள் இரண்டிற்கும் இடையில் என்னுடைய கால் சட்டைகளை வைத்து சலவை போட்டது போன்று அழுத்தி வைத்துவிட்டேன். நான்—நான்…அணிந்திருந்த அந்த பழங்கால நீல வெள்ளை கோடிட்ட நாரியல் கால் சட்டையையும், (Seersucker Trousers) சிறிய T-சட்டையையும் நீங்கள் அறிவீர்கள். எனவே அடுத்தநாள் காலையில் நான் என்னுடைய சிறிய T-சட்டையை போட்டுக் கொண்டு கூட்டத்திற்கு சென்றேன். நான்…போயிருந்தேன்… 71 அப்பொழுது நான் மூன்று டாலர்களைத் தவிர வேறொன்றும் வைத்திருக்கவில்லை. மேலும் வீடு போய் சேரும் அளவிற்கு பெட்ரோல் இருந்தது. நான்—நான் கொஞ்சம் தின்பண்டங்களை எனக்கு வாங்கி வைத்திருந்தேன். அது பழங்கால உணவுப்பண்ட வகை என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் நன்றாகவே இருந்தேன். நான் தெரு குழாய்க்குச் சென்று ஒரு கண்ணாடி கோப்பையில் தண்ணீர் கொண்டு வந்தேன். அது மிகவும் நன்றாகவே இருந்தது. நான் அந்த தின்பண்டங்களை தண்ணீரில் இலேசாக ஊறவைத்து காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டேன். 72 இப்பொழுது என்னால் அவர்களோடு சாப்பிட முடியும். அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுவார்கள். ஆனால் என்னிடத்தில் அவர்களுக்கு காணிக்கை போட ஒன்றுமே இல்லை. எனவே நான் அவர்களுக்கு ஒரு உறிஞ்சியாக இருக்க விரும்பவில்லை. 73 எனவே அப்பொழுது நான்—அப்பொழுது அந்த காலையன்று நான் அங்கே சென்றபோது, அவர்கள்…கூறியதென்னவெனில்…நான் அதனுடைய இந்தப் பகுதியை கூறவேண்டியதாயிற்று. எனவே அந்தக் காலையில் நான் அங்கே உள்ளே சென்றபோது, அவர்கள், “நாங்கள் வில்லியம் பிரான்ஹாம் என்பவருக்காக, நேற்றிரவு இங்கே மேடையில் மேல் வந்த வாலிப பாப்டிஸ்டு சுவிசேஷகருக்காக எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம்” என்றார், மேலும் அவர், “இந்த காலையில் நாங்கள் அவரை செய்தி கொடுக்கும்படி அழைத்துவர விரும்புகிறோம்” என்றும் கூறினார். நான் ஒரு பாப்டிஸ்ட், அந்த விதமான ஒரு ஜனக்குழுவிற்கு செய்தியை கொடுப்பதென்றால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் என்பதையும் கண்டு கொண்டேன். எனவே நான் அப்படியே என்னுடைய இருக்கையில் சீக்கிரமாகப் போய் உட்கார்ந்து கொண்டேன். நான் நீல வெள்ளை கோடிட்ட நாரியல் கால் சட்டையும், ஒரு T-சட்டையையும் அணிந்துகொண்டிருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் குருமார்களைப் போன்று உடையணிந்திருக்கவில்லை. எனவே…நான் இந்தவிதமாக பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். ஆக அவர் இரண்டு மூன்று முறைகள் கேட்டார். நான் ஒரு கறுத்த சகோதரனின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். 74 அவர்கள் வடக்கில் அந்த கூட்டத்தை வைத்ததகான காரணமென்னவெனில், தெற்கில் அந்த சமயத்தில் பாகுபாடு உண்டாயிருந்தது. எனவே அவர்களால் இதை தெற்கில் வைக்க முடியாமற்போயிற்று. 75 எனவே இந்த “இயேசு மாத்திரம்” என்பது என்ன என்பதைக் குறித்து நான் வியந்தேன். மேலும் நான், “அது குறித்து வியந்தேன். இயேசு என்று இருக்கும்வரைக்கும் அது சரியானதே. எனவே அது அவராய் இருக்கும்வரைக்கும் அது எதுவாயிருந்தாலும், அது எப்படியிருந்தாலும்…அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணாதே” என்றே எண்ணினேன். 76 எனவே நான் அங்கே சற்று நேரம் அமர்ந்திருந்து அவர்களை கவனித்தேன். அப்பொழுது அவர்கள் தொடர்ந்து இரண்டு இல்லை மூன்று முறை கூப்பிட்டனர். அப்பொழுது அந்த கறுத்த சகோதரன் என்னை நோக்கிப் பார்த்தார். பின்னர் அவர், “உங்களுக்கு அவரைத் தெரியுமா?” என்று கேட்டார். நான்—நான்—நான்…அப்பொழுது சச்சரவு வெளிப்படையாகிவிட்டது. அந்த மனிதனிடம் என்னால் பொய் சொல்ல முடியவில்லை. நான் பொய் சொல்லவும் விரும்பவில்லை. நான், “சகோதரனே, இங்கே பாருங்கள். நான் அவரை அறிவேன்” என்றேன். அப்பொழுது அவர், “நல்லது, போய் அவரை அழைத்து வாருங்கள்” என்றார். 77 அதற்கு நான், “சகோதரனே, நான்—நான் உங்களுக்கு சொல்ல உள்ளேன்” என்றேன். அடுத்தபடியாக நான், “நான்தான் அது. ஆனால் நீங்கள் பாருங்கள்”, என்றேன். மேலும் நான், “என்னைப் பாருங்கள்…இந்த நீல வெள்ளை கோடிட்ட நாரியல் கால்சட்டையைப் பாருங்கள்” எண்றேன். அவரோ, “அங்கே மேலே செல்லுங்கள்” என்றார். 78 அப்பொழுது நான், “இல்லை, என்னால் அங்கே மேலே போகமுடியாது” என்றேன். மேலும் நான், “இந்த விதமான கால் சட்டையோடும், T சட்டையோடும் செல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவரோ, “நீர் எப்படி ஆடை அணிந்திருக்கிறீர் என்பதைக் குறித்து அந்த ஜனங்கள் கவலைப்படமாட்டார்கள்” என்றார். 79 நான், “சரி, பாருங்கள், நீர் இதைக் கூறிவிடாதீர், கேட்கிறதா?” என்று கூறினேன். பின்னர் நான், “பாருங்கள், நான் இந்த நீல வெள்ளை கோடிட்ட நாரியல் கால் சட்டையை அணிந்திருக்கிறேன். எனவே நான் அங்கு மேலே செல்ல விரும்பவில்லை” என்றேன். மேலும் அவர்கள், “வில்லியம் பிரான்ஹாம் எங்கே இருக்கிறார் என்று யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு இவர் “இதோ அவர் இருக்கிறார். இதோ அவர் இருக்கிறார்” என்று கூறிவிட்டார். 80 ஓ, என்னே! என்னுடைய முகம் சிவந்து போயிற்று. உங்களுக்குத் தெரியுமா? நான் கழுத்துப்பட்டையை கட்டியிருக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த பழைய T சட்டையானது, சிறிய அரைக்கை சட்டையைப் போன்றிருப்பதை நீங்கள் அறிந்ததே. எனவே என்னுடைய காதுகள் எரிச்சலால் எரிந்து கொண்டிருக்க நான் அங்கே நடந்து சென்றேன். நான் ஒரு ஒலி பெருக்கியின் முன் நின்றதே கிடையாது. 81 எனவே நான் அங்கு பிரசங்கிக்கும்படியாய் மேலேறிச் சென்றேன். நான் ஒரு பாட பகுதியை எடுத்தேன். நான் அதை ஒருபோதும் மறந்துபோக மாட்டேன். அது என்னவெனில், “பாதாளத்திலே ஐஸ்வரியவான் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அப்பொழுது அவன் கூச்சலிட்டான்” என்பதேயாகும். நான் அநேக முறைகள் அதைப் போன்று “வந்து ஒரு மனிதனைப் பாருங்கள்,” “இதை நீ விசுவாசிக்கிறாயா?” “பின்னர் அவன் அழுதான்” என்ற மூன்று சிறு வார்த்தைகளைக் கொண்டு பிரசங்கித்திருக்கிறேன். பின்னர் நான் தொடர்ந்து, “அங்கே பூக்கள் இல்லை, அப்பொழுது அவன் அழுதான். அங்கே ஜெப கூட்டங்கள் ஏதும் கிடையாது. பின்னர் அவன் அழுதான். அங்கே பிள்ளைகளே இல்லை. பின்னர் அவன் அழுதான். பாடல்களே கிடையாது, பின்னர் அவன் அழுதான்” என்று கூறிக்கொண்டிருந்தேன். பின்னர் நான் அழுதேன். 82 ஆக இவைகளெல்லாம் முடிந்தபின்னர், ஏன்? என்னே, அவர்கள் அப்படியே…எல்லோரும் அப்படியே என்னை சுற்றிக்கொண்டு, அவர்களுக்காக நான் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். நான், “ஒருக்கால் நானும்கூட ஒரு பரிசுத்த உருளையா?” என்று எண்ணினேன். புரிகின்றதா? எனவே நான், “ஒருக்கால்…இருக்கலாம்” என்றும் எண்ணிக்கொண்டேன். பாருங்கள், அவர்கள் அவ்வளவு அருமையான ஜனங்களாயிருந்தனர். 83 நான் அங்கு வெளியே நடந்து வந்தேன். அப்பொழுது ஒரு மனிதன் மாடு மேய்க்கும் பையனின் காலணிகளோடும், தொப்பியோடும் இருந்தான். அப்பொழுது நான், “நீ யார்?” என்று கேட்டேன். அதற்கு அவன், “டெக்சாசிலிருந்து வந்த மூப்பன் இன்னார்—இன்னார்” என்றான். நானோ, “அதை பார்த்தபோது…” எண்ணிக்கொண்டேன். 84 இன்னொரு நபர் முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான கால்சட்டையுடன் (Knickerbocker Plant) நடந்து வந்தார். அவர்கள் குழி பந்தாட்டம் (Golf) விளையாடும்போது அவைகளை வழக்கமாக அணிவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுமட்டுமின்றி அவர்களில் ஒருவர் கம்பளிப் பின்னல் சட்டையையும் அணிந்திருந்தார். அப்பொழுது அவர், “பிளாரிடாவில் இருந்து வருகிற சங்கை. இன்னார்—இன்னார் நான்தான். நீர் அங்கு வந்து கூட்டம்…நடத்துவீரா?” என்றும் கேட்டார். 85 நான், “இந்த நீல வெள்ளை கோடிட்ட நாரியல் கால் சட்டையையும், T சட்டையையும் அணிந்து வீட்டிலேயே இருக்கலாம். அதுவே அருமையாய் இருக்கும்” என்றே எண்ணிக்கொண்டேன். 86 எனவே இந்த காரியங்களை நீங்கள் என்னுடைய சுயசரிதையில், கேட்டிருக்கிறீர்கள். ஆகையால் நான் இங்கே நிறுத்திவிட்டு, இதற்கு முன்பு ஒருபோதும் கூறாத ஏதோ காரியத்தை கூறவுள்ளேன். முதலாவது நான் உங்களை கேட்க விரும்புவது…நான் அதை அப்படியே விட்டுவிட்டு தொடருகிறேன். என்னுடைய ஜீவியத்தில் நான் இதை பொது ஜனங்களுக்கு முன்பாக இதற்கு முன்பு கூறினதே கிடையாது. நீங்கள் என்னை நேசிப்பீர்கள் என்றும், நான் இதை கூறுவதற்கு முன்பாக நீங்கள் என்னை நேசித்தவிதமாக இதை கூறின பின்பும் நேசிப்பீர்கள் என்றும் வாக்களிப்பீர்களேயானால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி. அது உங்களுடைய வாக்குறுதியாயிருக்கிறபடியால், நான் அதை உங்களிடத்தில் தொடர்ந்து கூறப்போகிறேன். 87 அன்றிரவு கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கையில், அவர்கள் தங்கள் கரங்களைத்தட்டி பாடல்களைப் பாடினர். அவர்கள், “நான்…” என்று பாடுவார்கள். அந்த சிறிய பாடல், “அது இரத்தமாயிருந்தது என்பதை நான் அறிவேன். அது இரத்தமாயிருந்தது என்பதை நான் அறிவேன்” என்பதாகும். அவர்கள் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் கர்த்தரை துதித்துக் கொண்டும் இருப்பார்கள். எனவே நான், “அது எனக்கு மிக நல்ல பயபக்தியை ஏற்படுத்துகிறதே” என்றே எண்ணினேன். பின்னர் நான்…துவங்கி… 88 அவர்கள் அப்போஸ்தலர் 2:4, அப்போஸ்தலர் 2:38; அப்போஸ்தலர் 10:49 முதலானவைகளை எப்போதும் குறிப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது நான், “அது வேத வாக்கியமாயிற்றே! நான் அதை இதற்கு முன் அந்த விதமாய் கண்டதே இல்லையே” என்றே எண்ணினேன். ஆனால், ஓ, என்னுடைய இருதயம் எரிந்து கொண்டிருந்தது. ஆக நான், “இது அற்புதமாயிருக்கிறதே!” என்று எண்ணினேன். பின்னர் நான் முதலாவதாக அவர்களை சந்தித்தபோது அவர்கள் ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள் என்றே எண்ணினேன். ஆனால் இப்பொழுதோ நான், “ஓ, என்னே, அவர்கள் ஒரு கூட்ட தூதர்கள்” என்று எண்ணினேன். பாருங்கள். நான் உடனடியாக என்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டேன். 89 எனவே அடுத்த நாள் காலையில் இந்த கூட்டங்களை நடத்தும்படியான மகத்தான தருணத்தை கர்த்தர் எனக்கு கொடுத்திருந்தார். அப்பொழுது நான், “ஓ, என்னே நானும் இந்த கூட்ட ஜனங்களோடு சேர்ந்து கொள்ளலாம். அவர்கள் வழக்கமாக ‘சத்தமிடும் மெத்தோடிஸ்டுகள்’ என்று அழைக்கும் வகையினராய் இருக்க வேண்டும்” என்றே எண்ணிக்கொண்டேன். பின்னர் அப்படியே தொடர்ந்து சற்றுதூரம் சென்று, ஒருக்கால் அதுவாக இது இருக்கலாம் என்று நான் எண்ணினேன். எனவே நான், “நல்லது, நான்…நான் நிச்சயமாகவே அதை விரும்புகிறேன். ஓ, அவர்களிடத்தில் நான் விரும்புகிற ஏதோ காரியம் இருக்கின்றது. அவர்கள் தாழ்மையையும், இனிமையாயும் இருக்கிறார்களே” என்று எண்ணினேன். 90 ஆனால் அந்நிய பாஷைகளில் பேசுவது மட்டுமே நான் புரிந்து கொள்ளமுடியாத ஒரு காரியமாக இருந்தது, அது என்னை இழுத்தது. எனவே நான்…அங்கே ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருந்தான். இன்னொரு மனிதன் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தான். அவர்கள் குழுத் தலைவர்களாயிருந்தனர். இங்கே இருப்பவர் எழும்பி அந்நிய பாஷையில் பேசுவார், அப்பொழுது அங்கே இருப்பவர் அதற்கு வியாக்கியானம் அளித்து, பின்னர் கூட்டங்களைக் குறித்த காரியங்களைக் கூறுவார். நானோ, “என்னே, வ்யூ, நான் அதை வாசிக்க வேண்டும்” என்று எண்ணினேன். ஆக உடனே அது அப்படியே மாறுதலாக இவன் மேல் விழுந்து பின்னர் திரும்பவும் அவன் மேல் வரும். அப்பொழுது ஒவ்வொரும் அந்நிய பாஷையிலே பேசி வியாக்கியானம் அளிப்பார்கள். சபையிலிருக்கிற மற்றவர்களும் அந்நிய பாஷையில் பேசுவார்கள். ஆனாலும் இவர்கள் இருவருக்கும் வியாக்கியானம் வருவதுபோன்று அது தென்படவில்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து உட்காருவதை நான் கண்டு, “ஓ, என்னே, அவர்கள் தூதர்களாய் இருக்க வேண்டும்” என்றே எண்ணினேன். எனவே அங்கே பின்னாக நான் உட்கார்ந்திருக்கையில்… 91 அது என்னவாக இருந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை (நீங்கள் அறிவீர்கள்.) அது என் மேலும் வரும். அதாவது நான் அதை அறிய வேண்டுமென்று கர்த்தர் விரும்புவாரானால், அப்பொழுது அந்த காரியங்களை அறிந்து கொள்ளும்படியாக நான் ஒரு வழியை உடையவனாயிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான்…அந்த காரணத்தினால்தான் நான் இதைக் குறித்து மூச்சு விடுகிறதில்லை. மேலும் இதை பொது ஜனத்திற்கு முன்பாகவும் கூறினதே கிடையாது. நான் உண்மயாகவே ஏதோ ஒரு காரியத்தை அறிய வேண்டுமானால், அப்பொழுது கர்த்தர் வழக்கமாக அந்த காரியங்களைக் குறித்து என்னிடம் கூறிவிடுவார். அதற்காகவே அந்த வரம் இருக்கிறது. உங்களுக்குப் புரிகின்றதா? எனவே அதை தூக்கி ஜனங்கள் முன்பாக எறிய முடியாது, ஏனெனில் அது பன்றிக்கு முன்பாக உங்களுடைய முத்துக்களை எறிவது போலாகும். அது ஒரு புனிதமான, பரிசுத்தமான காரியமாக இருக்கிறது. ஆயினும் அதைச் செய்ய நீங்கள் விரும்புகிறதில்லை. எனவே, தேவன் என்னை அதற்காக உத்தரவாதமுடையவனாக்குவார். சகோதரர்களிடத்தில் பேசுதல் போன்ற காரியங்களைப் போன்ற, ஒரு சகோதரனைக் குறித்த பொல்லாங்கான ஏதோ காரியத்தை நான் அறிய மாட்டேன். 92 ஒரு சமயம் ஒரு மனிதனுடன் மேஜையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவன் தன்னுடைய கரத்தை என் மேல் போட்டிருந்தான். அப்பொழுது அவன், “சகோதரன் பிரான்ஹாம், நான் உங்களை நேசிக்கிறேன்” என்றான். ஏதோ ஒரு காரியம் அசைந்து கொண்டிருக்கிறது போன்றதான உணர்வெனக்கிருந்தது. அப்பொழுது நான் அவரை நோக்கிப் பார்த்தேன். அவன் அதை என்னிடத்தில் கூறியிருக்க முடியாது. அவன் அதைச் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டேன், பாருங்கள், ஏனென்றால் அங்கேதான் அந்த காரியம் இருந்தது. அங்கு ஒரு மாய்மாலக்காரன் இருந்தான் என்றால் அது சரியாக இவனே. ஆனால் பாருங்கள், அவனோ அங்கே என்மேல் தன்னுடைய கரத்தை போட்டுக்கொண்டிருந்தான். 93 நான் சரி என்று கூறி கடந்து சென்றுவிட்டேன். நான் அதை அறிந்து கொள்ள விரும்பவில்லை. என்னுடைய சகோதரன் என்ற முறையில், நான் அறிந்த முறையில் நான் அவனை அறிந்திருந்தேன். அது அந்த விதமாகவே போகட்டும். எஞ்சியுள்ளதை தேவன் செய்யட்டும். புரிகின்றதா? இந்த காரியங்களையெல்லாம் நான் அறிந்து கொள்ள விரும்பவில்லை. 94 இந்த காரியங்களின் பேரில் அநேக முறைகள், இங்கே இந்த சபைக்குள்ளாக இல்லை. நான் அறையில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். நான் உணவகத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். அப்பொழுது சம்பவிக்கப்போகின்ற காரியங்களை பரித்த ஆவியானவர் என்னிடத்தில் கூறுவார். அது உண்மை என்பதை இங்குள்ள ஜனங்கள் அறிவர். நான் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பேன், உதாரணமாக, “இப்பொழுது ஜாக்கிரதையாயிரு. கொஞ்சம் கழித்து ஒரு கார் வரப்போகின்றது. இன்னின்ன நபர் அதிலே இருப்பான். அவர்கள் இங்கே இருப்பார்கள் என்று கர்த்தர் கூறியுள்ளபடியால் அவர்களை இங்கே உள்ளே கொண்டு வாருங்கள்” என்பேன். மேலும் அவர், “நாங்கள் வீதிக்குச் செல்லும்போது அங்கே இன்னின்ன காரியம் சம்பவிக்கும். அங்கே வீதியின் சந்திப்பில் கவனி, அங்கே நீ சற்றேறக்குறைய மோதிவிடப் போகின்றாய்” என்று கூறுவார். அந்தவிதமாக அது இருக்கவில்லையா என்று பாருங்கள். அது ஒவ்வொரு நேரத்திலும் அப்படியே பரிபூரணமாக இருக்கிறதே! ஆயினும் நீங்கள் உங்களை அதன்பேரில் அதிகமாய் சர்ந்திருக்கும்படி செய்து கொள்ள வேண்டாம், ஏனென்றால் நீங்கள்…அது…நீங்கள் அதை உபயோகிக்கலாம். அது ஒரு தேவனுடைய வரம். ஆனால் அதனைக் கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும், நீங்கள் கவனிக்க வேண்டும். தேவன் உன்னை அதற்காக பதில் கூறும்படி செய்வார். 95 மோசேயைப் பாருங்கள். மோசே தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதனாயிருந்தான். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? முன்குறிக்கப்பட்டவன், முன்நியமிக்கப்பட்டவன், ஒரு தீர்க்கதரிசியாக ஆக்கப்பட்டவனாயிற்றே! தேவன் அவனை அங்கே வெளியே அனுப்பி, அந்த கன்மலை அடிக்கப்பட்ட பின்னர், “கன்மலையண்டைப் போய் பேசு” என்று கூறினார். மேலும் “போய் கன்மலையினிடத்தில் பேசு, அது தன்னுடைய தண்ணீரை அளிக்கும்” என்றார். 96 ஆனால் மோசேயோ கோபமடைந்து அதனிடத்திற்கு ஓடிப் போய் அந்த கன்மலையை அடித்தான். தண்ணீர் வரவில்லை. அதை மீண்டுமாக அடித்து, “கலகக்காரர்களே உங்களுக்கு இந்த கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமா?” என்றான். 97 தேவன் என்ன செய்தார் என்று பார்த்தீர்களா? தண்ணீர் வந்தது. ஆனால், “மோசே இங்கே மேலே ஏறிவா” என்றார். அதுதான் அதன் முடிவாய் இருந்தது, பாருங்கள். இந்த காரியங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். எனவே நீங்கள்…தெய்வீக வரங்களோடு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். 98 ஒரு நல்ல பிரசங்கியைப் போன்றோ, ஒரு நல்ல வல்லமையான பிரசங்கியாரைப் போன்றோ, வெளியே சென்று காணிக்கைகளையும், பணத்தையும் எடுத்துக் கொள்ளும்படியாய் பிரசங்கிப்பவனை அதற்காக தேவன் அவனை கணக்கொப்புவிக்கும்படி செய்வார். அது உண்மை. தெய்வீக வரங்களோடு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஏதோ ஒரு சபைக்கு பெயர் உண்டாகும்படியாகவோ அல்லது பெரிய கௌரவத்தை அடையும்படியாகவோ அல்லது தனக்கு ஒரு பெரிய பெயரை தேடிக் கொள்ளும்படியாகவோ முயற்சிக்கக்கூடாது. நான் இரண்டு அல்லது மூன்று கூட்டங்களை நடத்திவிட்டு எங்கேயாவது ஒட்டிக் கொள்வதைக் காட்டிலும் தாழ்மையாயிருந்து தரித்திருக்கவே விரும்புவேன். நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? சரி, ஐயா, தேவன் தம்முடைய கரத்தை உங்கள் மேல் எங்கே வைக்கக்கூடுமோ, அங்கேயே உங்களுடைய ஸ்தானத்தை எப்பொழுதும் காத்துக் கொள்ளுங்கள். இது உள்ளான ஜீவியமாயிருக்கிறது என்பது நினைவிருக்கட்டும். 99 எனவே அந்நாளில் நான், “நான் மேலேறி நடந்து செல்லப்போகிறேனே” என்று எண்ணினேன். அந்த ஜனங்களைக் குறித்து அதிகமாய் எச்சரிப்படைந்து, பின்னர் நான், “அந்த மனிதர்களைக் குறித்து நான் கண்டறிவேன்” என்று எண்ணினேன். நான் வெளியே திறந்த வெளியில் கூட்டம் முடிந்தவுடன் அவர்களை கவனித்துக் கொண்டே இருந்தேன். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அவர்களில் ஒருவரை கண்டுபிடித்தேன். அப்பொழுது நான் அவரிடத்தில், “ஐயா எப்படி இருக்கின்றீர்கள்?” என்று கேட்டேன். 100 அதற்கு அவர், “நீர் எப்படி இருக்கிறீர் என்றும், இன்று காலையில் பிரசங்கித்த அந்த வாலிப பிரசங்கியார் நீர்தானே?” என்றும் கேட்டார். அதற்கு நான்…அப்பொழுது நான் இருபத்திமூன்று வயதுடையவனாக இருந்தேன். எனவே நான், “ஆம் ஐயா” என்றேன். அதன் பின்னர் அவர், “உம்முடைய பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு நான், “பிரான்ஹாம்” என்றேன். பின்னர் நான், “உம்முடைய பெயர் என்ன?” என்று கேட்டேன். 101 அவருடைய பெயரை என்னிடத்தில் கூறினார். அப்பொழுது நான், “நல்லது, இப்பொழுது அவருடைய ஆவியோடு என்னால் தொடர்பு கொள்ளக்கூடுமானால் நலமாயிருக்குமே” என்று எண்ணினேன். அதனை செய்துகொண்டிருக்கிறது எது என்பதை இன்னமும் அறியாதிருந்தேன். பின்னர் நான், “நல்லது, சரி ஐயா” என்று கூறி தொடர்ந்து, “நான் பெற்றிராத ஏதோ காரியத்தை இங்கே உள்ள ஜனங்களாகிய நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்” என்றேன். அதற்கு அவர், “நீர் விசுவாசியானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீரா?” என்று கேட்டார். அதற்கு நான், “நான் ஒரு பாப்டிஸ்ட்” என்றேன். 102 அதற்கு அவரோ, “நீர் விசுவாசியானபோதே பரிசுத்த ஆவியை பெற்றுகொண்டீரோ?” என்று கேட்டார். 103 அதற்கு நான், “சரி சகோதரனே, நீர் என்ன கூறுகிறீர்” என்று கேட்டேன். பின்பு நான், “நீங்கள் எல்லோரும் பெற்றிருப்பதை நான்—நான் பெற்றுக்கொள்ளவில்லை. நான் அதை அறிவேன்” என்றேன். மேலும் நான், “வல்லமையுள்ளதைப் போன்று காணப்படுகின்ற ஏதோ காரியத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்…” என்றேன். அதற்கு அவர், “நீங்கள் எப்பொழுதாவது அந்நிய பாஷையில் பேசியிருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு நான், “இல்லை ஐயா” என்றேன். அப்பொழுது அவர், “அப்படியானால் நீர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை என்று என்னால் உடனடியாக கூறமுடியும்” என்றார். 104 அப்பொழுது நான், “பரவாயில்லை, நான்…பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள அது சம்பவிக்க வேண்டுமென்றால், அப்பொழுது நான் அதை பெற்றுக்கொள்ளவில்லை” என்றேன். 105 ஆகவே அவர், “நீர் அந்நிய பாஷையில் பேசினதில்லையென்றால், நீர் அதை பெற்றிருக்கவில்லை” என்றார். 106 அவருடைய உரையாடல் அந்தவிதமாயிருக்கையில், நான், “நான் அதை எங்கே பெற்றுக்கொள்ள முடியும்?” என்று கேட்டேன். 107 அதற்கு அவர், “அங்கே இருக்கின்ற அந்த அறைக்குள் சென்று பரிசுத்தாவியை தேடத் துவங்குங்கள்” என்றார். 108 நான் தொடர்ந்து அவரை கவனித்துக் கொண்டிருந்தேன். உங்களுக்குத் தெரியுமா? நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவர்…அவர் ஒரு விநோதமான உணர்வை உடையவராயிருந்தார் என்பதை நான் அறிந்து கொண்டேன். ஏனென்றால் அவர்…அவர் என்னை நோக்கிப் பார்க்கும்போது அவருடைய கண்கள் சற்று கண்ணாடி போலிருந்தது. அவர்…ஆனால் அவர் ஒரு உண்மையான கிறிஸ்தவராய் இருந்தார். அவர் முற்றிலுமாக, நூறு சதவீதம் ஒரு கிறிஸ்தவராக இருந்தார். அது உண்மை. அப்பொழுது நான், “தேவனுக்கு ஸ்தோத்திரம் இதுதான் காரியம். நான்—நான்—நான் அந்த பீடத்தண்டை சென்றாக வேண்டும்” என்று எண்ணினேன். 109 நான் வெளியே போய் சுற்றும் முற்றும் பார்த்தேன். அப்பொழுது நான், “அந்த இன்னொரு மனிதனையும் நான் கண்டுபிடிப்பேன்” என்று எண்ணினேன். நான் அவரை கண்டுபிடித்து அவரிடத்தில் பேசத் துவங்கியதும், நான், “ஐயா, நீர் எப்படியிருக்கிறீர்?” என்று கேட்டேன். 110 அதற்கு அவர், “நீர் எந்த சபையை சேர்ந்தவர்?” என்று கேட்டார். மேலும் அவர், “நீர் ஒரு பாப்டிஸ்ட் என்று அவர்கள் என்னிடம் கூறுகிறார்களே” என்றார். அதற்கு நான், “ஆம்” என்றேன். அதற்கு அவர், “நீர் இன்னும் பரிசுத்த ஆவியைப் பெறவில்லையே, நீர் பெற்றுவிட்டீரா?” என்று கேட்டார். அதற்கு நான், “எனக்குத் தெரியாது” என்றேன். அதற்கு அவர், “நீர் எப்பொழுதாவது அந்நிய பாஷையில் பேசியிருக்கிறீரா?” என்று கேட்டார். நான், “இல்லை ஐயா” என்றேன். அவர், “நீர் இன்னும் அதை பெற்றுக்கொள்ளவில்லை” என்றார். 111 நான், “நீங்கள் யாவரும் பெற்றுள்ளதை நான் பெற்றிருக்கவில்லை என்பதை நான் அறிவேன். நான் அதை அறிவேன்” என்றேன். மேலும் நான், “ஆனால், என் சகோதரனே உண்மையாகவே அது எனக்கு வேண்டியதாயிருக்கிறது” என்றேன். அதற்கு அவர், “அங்கே தண்ணீர் தடாகம் ஆயத்தமாயிருக்கிறதே” என்றார். 112 அப்பொழுது நான், “நான் ஞானஸ்நானம் பெற்றுவிட்டேன். ஆனால்” என்று கூறிவிட்டு, “நீங்கள் பெற்றுக் கொண்டதை நான்—நான் பெற்றிருக்கவில்லையே” என்றேன். மேலும் நான், “எனக்கு—எனக்கு உண்மையாகவே தேவைப்படுகிற ஒன்றை நீங்கள் உடையவர்களாயிருக்கிறீர்கள்” என்றேன். அதற்கு அவர், “அது மிகவும் அருமையாயிருக்கிறது” என்றார். 113 நானோ அவரைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் பாருங்கள். நான்……முடிவிலே நான் அவருடைய ஆவியைக் கண்டறிந்தேன். அது இன்னொரு மனிதனாயிருந்தது. நான் எப்பொழுதாவது ஒரு கீழ்த்தரமான மாய்மாலக்காரரோடு பேசியிருப்பேனேயானால், அவர்களில் ஒருவனான. இவன்தான். அவன் வாழ்ந்துகொண்டிருந்த……அவனுடைய மனைவி ஒரு கருத்த தலைமுடியை கொண்ட ஸ்திரீயாக இருந்தாள். ஆனால் அவரோ பழுப்பு நிற தலை முடியைக் கொண்ட ஸ்திரீயுடன் ஜீவித்துக்கொண்டு, அவள் மூலம் பிறந்த இரண்டு பிள்ளைகளை உடையவனாயிருந்தான். அவன் குடிப்பதும், சபிப்பதும், மதுபான கடைக்கு ஓடுவது, மற்றெல்லா காரியங்களையும் செய்துகொண்டு, அதே சமயத்தில் அங்கே அந்நிய பாஷையில் பேசிக்கொண்டும், தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டுமிருந்தான். 114 பின்பு நான், “கர்த்தாவே, என்னை மன்னியும்” என்றேன். அதன்பின்பு நான் வீட்டிற்குச் சென்றேன். அது உண்மை. மேலும் நான், “நான்……என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லையே. அந்த மாய்மாலக்காரன் மீதும் ஆசீர்வாதமான பரிசுத்த ஆவி இறங்குவது போன்று தென்படுகிறதே” என்று கூறிக்கொண்டேன். ஆயினும், நான், “அவ்வாறிருக்க முடியாதே! அவ்வளவுதான்,” என்றும் கூறிக்கொண்டேன். 115 அதன் பின்னர் நீண்ட காலமாக இதைக் குறித்து நான் ஆராய்ந்துகொண்டும், ஜெபித்துக்கொண்டும் இருந்தபோது, ஒருக்கால் அவர்களோடு வெளியே சென்றால், அவை யாவும் என்னவென்பதைக் குறித்து என்னால் கண்டறிய முடியும் என்றும் எண்ணினேன். இதோ ஒருவன் அசலான கிறிஸ்தவனாயிருக்கிறான். இன்னொருவனோ ஒரு உண்மையான மாய்மாலக்காரனாய் இருக்கிறான். பின்னர் நான், “இது என்னவாயிருக்கும்? ஓ” என்று எண்ணினேன். பின்பு நான், “தேவனே ஒருக்கால் என்னிடத்தில் ஏதோ காரியம் தவறாக இருக்கலாம்” என்று கூறினேன். நான் ஒரு அடிப்படைவாதியாயிருக்கிறபடியால், “அதை…அதை வேதத்தில் கண்டறிய வேண்டுமே. அது வேதத்தில் இருக்க வேண்டும்” என்றும் கூறிக்கொண்டேன். 116 என்னைப் பொறுத்தமட்டில் கிரியையில் வருகின்ற ஒவ்வொரு காரியமும் வேதத்திலிருந்தே வரவேண்டும். இல்லையென்றால் அது சரியானதல்ல. அது இங்கேயிருந்தே வரவேண்டும். அது வேதத்தில் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் அது வெறுமனே ஒரு இடத்தில் என்றில்லாமல் எல்லா விதங்களிலும் வேதத்தினூடாகவே வரவேண்டும். நான் அதை விசுவாசித்தாக வேண்டும். அது ஒவ்வொரு வேத வார்த்தையோடும் ஒன்றாய் இணைய வேண்டும், ஒன்றாய் பொருத்த வேண்டும். இல்லையென்றால் நான் அதை விசுவாசிப்பதில்லை. அந்த காரணத்தினால்தான் பவுல், “வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றான். எனவே நான் வேதத்தை விசுவாசிக்கிறேன். மேலும் நான், “அந்தவிதமாய் நான் வேதத்தில் ஒன்றையுமே காணமுடியவில்லையே” என்றேன். 117 இரண்டு வருடங்களுக்குப் பின்னர், நான் என்னுடைய மனைவி மற்றும் எல்லா காரியங்களையும் இழந்த பின்னர், நான் கிரீன்ஸ் மில் (Green’s Mill) என்ற இடத்திற்குச் சென்று அங்கே உயரே இருக்கின்ற என்னுடைய சிறிய பழைய இடத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தேன். இரண்டு இல்லை மூன்று நாட்களாக, இரண்டு நாட்களாக அங்கே என்னுடைய குகையில் இருந்தேன். அப்பொழுது சற்று சுவாசிக்கும்படியாக காற்றைப் பெற நான் வெளியே நடந்து வந்தேன். நான் அங்கே வெளியே வந்து நடக்கும் போது, அங்கு இருந்த ஒரு மரக்கட்டையின் நுனியில், அதாவது உள்ளே வரும்போதுள்ள நுனியில் என்னுடைய வேதாகமத்தை வைத்திருந்தேன். ஒரு பழைய மரம் சாய்ந்து கிடந்தது. அதில் கிளை இரண்டாக பிரிந்திருந்தது. இப்பொழுது நீங்கள்…மரமானது கீழே விழுந்திருக்க இரண்டு கிளைகளும் இந்த விதமாக மேல் நோக்கியவாறு இருந்தன. சில நேரங்களில் இந்த விதமாக உட்கார்ந்துகொண்டு இரவு நேரங்களில் அப்படியே ஆகாயத்தையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பேன். என்னுடைய கரங்களை இந்தவிதமாக மேல் நோக்கியிருக்க சில நேரங்களில் ஜெபிப்பது போன்று மரக்கிளையின் மேல் உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருப்பேன், அங்கேயே பல நாட்கள் இருப்பேன். அப்படி புசிக்காமலும், குடிக்காமலும் அங்கேயே ஜெபித்துக் கொண்டேயிருப்பேன். நான் புதியதான காற்றை சுவாசிக்கும் படியாக குகையை விட்டு வெளியே நடந்து வந்தேன். அப்போது அங்கே அது குளிர்ச்சியாயும், ஈரமாயும் இருந்தது. 118 ஆக அதன்பின்பு நான் குகையை விட்டு வெளியே வந்து முந்தினநாள் வைத்த இடத்திலேயே என்னுடைய வேதாகமத்தை வைத்தபோது, அப்படியே எபிரேயர் 6-ம் அதிகாரத்திற்கு பக்கங்கள் திருப்பப்பட்டன. அப்போது நான் அந்த இடத்திலிருந்து வாசிக்கத் துவங்கினபோது, “செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம் முதலான காரியங்களாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பரிபூரணாகும்படி கடந்து போவோமாக” என்றிருந்தது. மேலும், “ஏனெனில் ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், மறுதலித்துப்போனவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்றிருந்தது. ஆனால் அதில் கீழே, “எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து முட்செடிகளையும், முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும், சபிக்கப்படுகிறதற்கேற்றதாயும் இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு” என்றிருந்தது. அப்பொழுது ஏதோ ஒன்று “உஷ்ஷ்ஷ்” என்று கடந்து சென்றது. 119 நான், “இதோ அது இருக்கிறது. இப்பொழுது அவர் என்ன கூறினாலும் நான்…கவனித்துக் கேட்பேன்…அவர் இங்கே என்னை எழுப்பி விட்டார். அவர் இப்பொழுது எனக்கு ஒரு தரிசனத்தை கொடுக்கப் போகிறார்” என்று எண்ணிக்கொண்டேன். எனவே நான் அந்த மரத் துண்டின் முனையில் அங்கேயே அமர்ந்து காத்திருந்தேன். நான் எழும்பி நின்று முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாக நடந்தேன். அப்போதும் ஒன்றுமே சம்பவிக்கவில்லை. மீண்டுமாய் என்னுடைய குகைக்கு நடந்து சென்றபோதும் ஒன்றும் சம்பவிக்கவில்லை. எனவே நான், அங்கேயே நின்று, பின்னர் நான், “சரி, இது என்னவாயிருக்கிறது?” என்று யோசித்துப் பார்த்தேன். 120 நான் மீண்டுமாக என்னுடைய வேதத்தண்டைக்கு நடந்து சென்றேன். ஓ, அதில் மீண்டுமாய் பக்கங்கள் திரும்ப அதே இடத்திற்கு வந்தன. நான் அதை கரத்திலெடுத்தேன். பின்பு நான், “நான் அறிய வேண்டும் என்று அவர் விரும்பிகிறது என்ன அதில் இருக்கிறது?” என்று நினைத்தேன். நான் அதைத் தொடர்ந்து கீழே வாசிக்கலானேன். “தேவன் பேரில் வைக்கும் விசுவாசம், மனந்திரும்புதல்” முதலானவைகள் என்றிருக்க நான் தொடர்ந்து, “எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும், சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு” என்று எழுதப்பட்டிருந்ததை வாசித்தேன். ஓ, அது என்னை அப்படியே அசைக்கக்கூடியதாயிருந்ததே! 121 அப்பொழுது நான், “கர்த்தாவே நீர் எதைக்…குறித்ததான தரிசனத்தை எனக்கு கொடுக்கப்போகிறீர்” என்று எண்ணினேன். நான் அங்கு வேறு ஒரு காரியத்தை அவரிடம் கேட்கப்போவதாக இருந்தேன். 122 பின்னர் சடுதியாக எனக்கு முன்பாக ஒரு உலகம் உருண்டு கொண்டிருப்பதை நான் கண்டேன். அது முழுவதும் உழப்பட்டிருந்தது. வெண்மையான ஆடையணிந்த ஒரு மனிதன் தலை நிமிர்ந்த வண்ணமாய் இவ்விதமாக விதைத்துக் கொண்டே சென்றான். அவன் அவ்விதமாக ஒரு குன்றின் மேல் ஏறிப்போனவுடனே அவனைத் தொடர்ந்து இதோ இன்னொரு மனிதன் கறுப்பான ஆடை அணிந்தவனாய் தலை வணங்கினவாறு விதைகளை விதைத்துக் கொண்டு சென்றான். நல்ல விதைகள் முளைத்து வெளிவந்தபோது, அவை கோதுமைகளாயிருந்தன. கெட்ட விதைகள் வளர்ந்து வெளிவந்தபோது, அவை களைகளாயிருந்தன. 123 அதன்பின்னர், பூமியின் மேல் ஒரு பெரிய வறட்சி உண்டானது. கோதுமை செடியின் தலை தொங்கிப்போய் தண்ணீர் தேவையினால் அழிந்துபோகும் நிலையிலிருந்தது. ஜனங்களெல்லோரும் தங்களுடைய கரங்களை உயர்த்தி, மழையை அனுப்பும்படி தேவனிடத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கிறதை நான் கண்டேன். அதற்குப் பிறகு நான் களைகளைப் பார்த்தேன். அது அதின் தலையை தொங்கவிட்டுக் கொண்டு தண்ணீருக்காக தலை வணங்கிக் கொண்டிருந்தது. பின்னர் சரியாக பெரிதான மேகங்கள் குறுக்கே வந்த மழையைப் பொழிய ஆரம்பித்தன. அப்படி மழை பெய்தபோது அப்படியே முழுவதுமாக வளைந்து இருந்த கோதுமையானது “உஷ்ஷ்” என்று எழும்பி நின்றது. நேராக அதின் பக்கத்தில் இருந்த அந்த களையானதும் “உஷ்” என்று நிமிர்ந்து நின்றது. அப்பொழுது நான், “அப்படியென்றால், அது என்னதான்?” என்று எண்ணினேன். 124 பின்னர் அது எனக்கு புரிய வந்தது. இதுதான் காரியம். கோதுமையை விளையச்செய்யும் அதே மழைதான் களையையும் வளரச்செய்கிறது. ஆகையால் அதே பரிசுத்த ஆவியே ஒருகூட்ட ஜனங்களின் மேலும் ஊற்றப்படவும், மற்றவர்களை ஆசீர்வதிப்பது போன்றே ஒரு மாய்மாலக்காரனையும் ஆசீர்வதிக்க முடியும். எனவே இயேசு, “அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்” என்றார். ஆக நாம் கூச்சலிடுவதோ, களிகூர்வதோ அல்ல, ஆனால் “அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்” என்பதேயாகும். 125 நான், “அதுதான் காரியம். எனவே கர்த்தாவே, நான் அதை புரிந்து கொண்டேன்” என்றேன். பின்பு நான், “அப்படியானால் அதுதான் உண்மையான சத்தியமாயிருக்கிறது” என்றேன். இந்த மனிதன்…எனவே தேவனை அறியாமலேயே நீங்கள் வரங்களை உடையவர்களாக இருக்கக்கூடும். 126 ஆகையால் நான்—நான் அந்நிய பாஷையில் பேசுவதில் பேரில் அதிக கண்டிப்பாக இருந்தேன், நீங்கள் பாருங்கள். ஆனால் ஓர் நாள் எப்படியாய் தேவன் அதை எனக்கு ரூபகாரப்படுத்தினார். 127 நான் முதன்முறையாக என்னால் மனமாற்றமடைந்தவர்களுக்கு ஓஹையோ நதியில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது பதினேழாவது நபருக்கு நான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கையில், நான் ஞானஸ்நானம் கொடுக்கத் துவங்குகையில், அப்பொழுது நான், “பிதாவே, நான் இவருக்கு தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுக்கும்போது, நீர் அவரை பரிசுத்த ஆவியினால் அபிஷேகியும்” என்றேன். பின்னர் நான் அவரை தண்ணீருக்குள் மூழ்கச் செய்தேன். 128 அப்பொழுது சரியாக அந்த நேரத்தில் ஒரு சுழற்காற்று மேலே வானத்திலிருந்து வந்தது. அங்கு வந்த அந்த வெளிச்சம் பிரகாசமாயிருந்தது. நூற்றுக்கணக்கான ஜனங்கள் நதிக்கரையின் மேல் இருக்க சரியாக பகல் இரண்டு மணியளவில், ஜூன் மாதத்தில் சம்பவித்தது. அந்த வெளிச்சமானது சரியாக நான் இருந்த இடத்திற்கு மேலாக தொங்கிக்கொண்டிருந்தது. அங்கேயிருந்து ஒரு சத்தம், “கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டது போலவே, நீ பெற்றிருக்கிற ஒரு…ஒரு செய்தியானது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோட்டத்தைக் கொண்டுவரும்” என்று உரைத்தது. அது என்னை மரண திகிலடையச் செய்தது போன்றிருந்தது. 129 நான் திரும்பிப் போய்விட்டேன். அங்கிருந்த எல்லா ஜனங்களும், வார்ப்பட ஆலையாட்களும், மருந்துக்கடைக்காரர்களும் கரையிலிருந்த யாவரும் திரும்பிப் போய்விட்டனர். அன்றைய தினம் மதியம் நான் சுமார் இருநூறு அல்லது முந்நூறு பேர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்தேன். அதன் பிறகு அவர்கள் என்னை வெளியே எடுத்தார்கள், அவர்கள் என்னை தண்ணீரிலிருந்து இழுத்து வெளியே எடுத்தார்கள். சபை மேய்ப்பர்கள் முதலானோர் மேலே ஏறிவந்து, “அந்த வெளிச்சம் வந்ததே அதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டார்கள். 130 கில்ட் எட்ஜ் பாட்டிஸ்ட் சபையிலிருந்து (Gilt Edge Baptist Church) வந்த ஒரு பெரிய கூட்ட கறுத்த சகோதரர்களும், அங்கே இருக்கின்ற லோன் ஸ்டார் (Lone Star) சபையார்களும், இன்னும் அநேகர் அங்கே வந்திருந்தனர். அது சம்பவித்ததைக் கண்ட அநேகர் கூச்சலிடத் துவங்கினர். ஜனங்கள் மயங்கி விழுந்தனர். 131 அங்கே நீச்சல் உடை அணிந்தவளாய் ஒரு படகில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை அதிலிருந்து இறங்கும்படிச் செய்ய நான் முயற்சித்தேன். அவள் ஒரு சபையில் ஞாயிறுபள்ளி ஆசிரியையாய் இருந்தாள். அப்பொழுது நாம், “மார்ஜி, நீ படகைவிட்டு கீழே இறங்கமாட்டாயா?” என்று கேட்டேன். அதற்கு அவள், “பில்லி, நான் இறங்கவேண்டிய அவசியமில்லை” என்றாள். 132 அதற்கு நான், “அது சரிதான், நீ அதைச் செய்ய வேண்டியதில்லை. ஆனால் நான் ஞானஸ்நானம் கொடுக்கின்ற இடத்திலேயே சுவிசேஷத்திற்குப் போதுமான மரியாதை இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்றேன். அவளோ, “நான் அதைச் செய்ய வேண்டியதில்லை” என்றாள். 133 அவள் அங்கேயே உட்கார்ந்து கொண்டு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கிற என்னைப் பார்த்து கொக்கரித்துக் கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தாள், ஏனென்றால் ஞானஸ்நானம் கொடுப்பதில் அவளுக்கு நம்பிக்கையில்லை. எனவே அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் கீழே இறங்கி வந்தபோது அவள் சடுதியில் படகிலிருந்து தலைகீழாக முகங்குப்புற விழுந்தாள். இன்றைக்கு அந்தப் பெண் பைத்தியக்கார காப்பக விடுதியில் இருக்கிறாள். அனவே நீங்கள் தேவனோடு விளையாட முடியாது. புரிகின்றதா? இப்பொழுது கொஞ்சம் கழித்து…ஒருஅழகான பெண் அதற்குப் பின்னர் குடிக்கச் சென்றபோது ஒரு மதுபான புட்டியினால் இடித்துக்கொண்டு அவளுடைய முகமெல்லாம் வெட்டுப்பட்டது. ஓ, ஒரு பயங்கரமான தோற்றமுடையவளானாள். அங்கேயே அதுவும் சம்பவித்தது. 134 பின்னர் என் ஜீவியத்தினூடாகவும் அதை நான் காண்கிறேன். அது அசைந்து கொண்டிருக்கிறதையும் காண்கிறேன். அந்த தரிசனங்களைக் காண்கிறேன். பின்னர் கொஞ்சங் கழித்து அது என்னை அதிகமாய் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. எல்லோரும் அது தவறு என்றே என்னிடத்தில் கூறிக்கொண்டிருந்தார்கள். நான் அங்கே உயரே எப்பொழுதும் ஜெபம் செய்ய செல்கிற அந்த இடத்தை நோக்கி நேராக நடந்தேன். நான்…அது என்னண்டை வரக்கூடாது என்று நான் எவ்வளவாய் ஜெபித்துக்கொண்டிருந்தேன் என்பது ஒரு பொருட்டல்ல…ஆயினும் அது அங்கு வந்தது. எனவே நான்…வெறுமனே…நான் இந்தியானா மாநிலத்தின் வேட்டைக் காவலனாயிருந்தேன். நான் உள்ளே வந்தேன். அங்கே ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் ஜெப கூடாரத்தில் இசைப்பேழையை வாசிக்கிறவளுடைய சகோதரன். அப்பொழுது அவர், “பில்லி இன்று பிற்பகல் என்னோடு மெடிஸன் (Madison) வரை வருவாயா?” என்று கேட்டார். அதற்கு நான், “என்னால் அதை செய்யமுடியாது. நான் வனத்துறை வரைக்கும் சென்றாக வேண்டும்” என்றேன். 135 அப்பொழுது நான் சுற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்து துப்பாக்கியை வைக்கும் தோள்பட்டை வார் முதலியவற்றை கழற்றி வைத்துவிட்டு, என் சட்டையின் கையை சுருட்டிவிட்டுக் கொண்டேன். நாங்கள் இரண்டு சிறு அறைகள் கொண்ட ஒரு வீட்டில் வசித்து வந்தோம். பின்னர் நான் போய் கைகளைக் கழுவிக் கொண்டு, என்னுடைய உணவை ஆயத்தம் செய்ய சென்றேன். நான் கைகளை கழுவிவிட்டு என்னுடைய வீட்டைச் சுற்றி பக்கவாட்டில் நடந்து அழகான நிழல் தரும் ஒரு மரத்தின் (Maple) கீழ் வந்தேன். உடனடியாக ஏதோ ஒன்று “உஷ்ஷ்ஷ்ஷ்” என்று சென்றது. நான் அப்படி செத்தவனைப் போல் ஆனேன். நான் நோக்கிப் பார்த்தபோது, மீண்டுமாய் அதுவேதான் என்பதை அறிந்துகொண்டேன். 136 நான் அந்த படிகளில் அப்படியே உட்கார்ந்தேன். அவன் காரிலிருந்து குதித்து என்னிடத்திற்கு ஓடிவந்து, “பில்லி, நீ மயக்கமடைந்து கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டான். அதற்கு நான், “இல்லை ஐயா” என்றேன். பின்னர் அவனோ, “பில்லி, அப்படியானால் காரியம் என்ன?” என்று கேட்டான். 137 அதற்கு நான், “எனக்குத் தெரியாது” என்றேன். மேலும் நான், “சகோதரனே, தயக்கமில்லாமல் தொடர்ந்து செல்லுங்கள், ஒன்றுமில்லை. உமக்கு நன்றி” என்றேன். 138 என் மனைவி வெளியே வந்து ஒரு குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து, “தேனே, என்ன விஷயம்?” என்றாள். அதற்கு நான், “ஒன்றுமில்லை, இனிய இருதயமே” என்றேன். 139 ஆகவே அவள், “இப்பொழுது வாருங்கள். ஆகாரம் ஆயத்தமாயிருக்கிறதே” என்று கூறி அவளுடைய கரத்தை என்மீதுபோட்டுக் கொண்டு என்னை உள்ளே கொண்டு செல்ல முயற்சித்தாள். 140 அப்பொழுது நான், “தேனே, நான்—நான் உன்னிடத்தில் ஒரு காரியத்தை கூற விரும்புகிறேன்” என்றேன். அடுத்தபடியாக நான், “நீ அவர்களை அழைத்து இன்று பிற்பகல் நான் அங்கே வெளியே வரமாட்டேன் என்று கூறிவிடு” என்றேன். தொடர்ந்து நான், “மேடா, இனிய இருதயமே” என்றேன். பின்னர் நான், “இயேசு கிறிஸ்துவை நான் நேசிக்கிறேன் என்பதையும் என்னுடைய இருதயத்தில் நான் அறிவேன். நான் மரணத்திலிருந்து ஜீவனுக்குள்ளாக கடந்து சென்றிருக்கிறேன் என்பதையும் நான் அறிவேன். ஆனால் பிசாசு என்னோடு எந்த ஒரு காரியத்தையும் செய்ய நான் விரும்பவில்லை.” எனவே நான், “நான் இந்த வண்ணமாகவே செல்ல முடியாது. நான் ஒரு கைதியாயிருக்கிறேன்” என்றேன். நான், “எல்லா நேரங்களிலும் இந்த காரியம் தொடர்ந்து சம்பவிக்கிறது. அதுபோன்றதான காரியங்களும், இந்த தரிசனங்கள் முதலானவைகளும் வந்து கொண்டிருக்கின்றன. இல்லையென்றால், அது என்னவாயிருந்தாலும் சரி அது எனக்கு சம்பவிக்கிறதே” என்றேன். அது ஒரு தரிசனமாயிருந்தது என்று எனக்குத் தெரியாது. நான் அதை ஒரு தரிசனம் என்று அழைக்கவில்லை. நான், “இவைகள் ஞானதிருஷ்டிகளைப் போன்றுள்ளதே” என்றேன். மேலும் நான், “அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. எனவே தேனே நான்—நான்—நான்—நான் அதனோடு நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அது பிசாசு என்று அவர்கள்—அவர்கள் என்னிடத்தில் கூறுகிறார்கள். நான் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறேன்” என்றேன். 141 அதற்கு அவள், “ஓ, பில்லி, ஜனங்கள் உம்மிடத்தில் கூறுபவைகளுக்கு நீங்கள் செவிகொடுக்க வேண்டியதில்லை” என்றாள். 142 அதற்கு நான், “ஆனால், தேனே, மற்ற பிரசங்கிமார்களைப் பார்” என்றேன். மேலும் நான், “எனக்கு அது வேண்டாம்” என்றேன். தொடர்ந்து நான், “காடுகளிலிருக்கும் என்னுடைய இடத்திற்கு நான் போகிறேன். என்னிடத்தில் கிட்டத்தட்ட பதினைந்து டாலர்கள் இருக்கின்றன. நீ பில்லியை கவனித்துக்கொள்” என்றேன். அப்பொழுது பில்லி ஒரு சிறிய பையனாய், ஒரு சிறு உருவங்கொண்ட நபராய் இருந்தான். எனவே நான், “நீ—நீ…அது உனக்கும் பில்லிக்கும் கொஞ்ச நாளைய ஜீவியத்திற்குப்போதுமானது. அவர்களை அழைத்து அவர்களிடம் சொல்லிவிடு. நான் ஒருக்கால் நாளைக்கு வரலாம், திரும்பி வராமலும் போகலாம். அடுத்த ஐந்து நாட்களில் நான் திரும்ப வரவில்லையென்றால், என்னுடைய ஸ்தானத்தில் ஒரு மனிதனை அமர்த்திக்கொள்” என்று கூறி விட்டேன். மேலும் நான், “மேடா தேவன் அதை என்னிடத்திலிருந்து எடுத்துப் போடுவதாகவோ, அவ்வாறு திரும்பவும் சம்பவிக்க அனுமதிக்கமாட்டேன் என்று அவர் எனக்கு வாக்களிக்கும் வரைக்கு நான் அந்த காட்டை விட்டு திரும்பி வரமாட்டேன்” என்று கூறினேன். ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய அறிவின்மையைக் குறித்து சிந்தித்துப் பாருங்களேன்! 143 நான் அந்த இரவு அங்கே மேலே போயிருந்தேன். அடுத்த நாள் ஆவதற்கு முன்பே திரும்பி அந்த சிறிய பழைய அறைக்குள் சென்றேன். அப்பொழுது அதிக நேரமாகிவிட்டிருந்தது. என்னுடைய முகாமிற்கு அடுத்தநாள் போகும்படியாக நான் இன்னும் உயரே போய்க்கொண்டே…மலையின் மேல் தூரமாய் இல்லை, சரியாகக் கூறினால் குன்றின்மேல் போய் அங்கே இருக்கின்ற காட்டுக்குள்ளாகச் சென்றேன். என்னை அங்கே துப்பறியும் காவல்துறை குழுவினராலும்கூட கண்டுபிக்க முடியாது என்றே நான் நம்புகிறேன். எனவே இந்த சிறிய பழைய அறையில்…நான் அந்த பிற்பகல் முழுவதும் மிகவும் இருட்டாகுமட்டாய் ஜெபித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது நான் ஜெபிப்பதும், அங்கே வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிற, “தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே” என்ற பாகத்தை வாசித்துக்கொண்டிருப்பதுமாக இருந்தேன். என்னால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆக அந்த சிறிய பழைய அறைக்குள்ளோ அதிகமாக இருட்டிவிட்டது. 144 நான் ஒரு சிறு பையனாக இருந்தபோது வழக்கமாக அங்கு போய்தான் கண்ணிவலை விரிப்பேன். பின்னர் அங்கிருந்து கண்ணி வலையினூடாகவே சென்று மீன்பிடித்து முழு இரவும் அங்கேயே தங்கியிருப்பேன். அங்கே இடிந்து பாழாய்போன ஒரு சிறிய அறை இருந்தது. அது பல வருடங்களாக இருந்து வருகிறது. நான் அங்கே பல வருடங்களாக சென்று வருகிறேன். அது அந்த நிலைக்கு வருவதற்கு முன்பாக அங்கே வாடகைக்கு யாராவது இருந்திருப்பார்கள். 145 எனவே நான் அங்கே காத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான், “நல்லது” என்றே எண்ணிக்கொண்டேன். பின்னர் அப்படியே காத்திருந்தபோது மணி ஒன்றாயிற்று. இரண்டாயிற்று, மூன்றாயிற்று. நான் தரையில் மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும் நடந்து கொண்டிருந்தேன். அங்கே இருந்த ஒரு சிறிய முக்காலியின் மேல் அமர்ந்தேன்…, ஒரு சிறிய……முக்காலியல்ல, அது ஒரு சிறிய பெட்டியைப் போன்றதாயிருந்தது. அப்பொழுது நான் அங்கே அமர்ந்து, “ஓ, தேவனே, நீர் ஏன் எனக்கு இதைச் செய்ய வேண்டும்?” என்று எண்ணினேன். பின்னர், நான், “பிதாவே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர். நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீரே! நான் பிசாசினால் பீடிக்கப்பட்டவனாய் இருக்க விரும்பவில்லை. அந்த காரியங்கள் எனக்கு சம்பவிக்க அனுமதியாதேயும்” என்றேன். 146 மேலும் நான், “நான்—நான் உம்மை நேசிக்கிறேன். நான் நரகத்திற்குச் செல்ல விரும்பவில்லை. நான் தவறாக இருந்தால், பிரசங்கித்துக்கொண்டும், என்னுடைய பிரயாசங்களை எடுப்பதில் முயற்சித்துக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம்? நான் என்னை மட்டும் நரகத்திற்கு கொண்டு செல்லவில்லை. நான் ஆயிரக்கணக்கானவர்களையும் தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறேன்.” அதாவது அந்த நாட்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இருந்தனர். நான் சொன்னேன்…நான் ஒரு பெரிய ஊழியத்தை உடையவனாயிருந்தேன். மேலும் நான், “சரி, அது மீண்டுமாக எனக்கு சம்பவிக்க நான்—நான் ஒருபோதும் விரும்பவில்லை” என்றேன். 147 நான் இந்த சிறிய முக்காலியின் மேல் அமர்ந்தேன். நான் இந்தவிதமான நிலையில், அதைப்போன்று அப்படியே அமர்ந்து கொண்டிருந்தேன். சடுதியாக ஒரு ஒளி என் அறையில் மினுக்மினுக்கென்று மின்னுவதை நான் கண்டேன். நானோ யாரோ ஒருவர் ஒரு பிரகாசிக்கும் விளக்கோடு (Flash Light) வந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். நான், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, பின்னர் நான், “நல்லது…” என்றே எண்ணினேன். மேலும், “அந்த வெளிச்சம் அங்கிருந்ததே. சரியாக எனக்கு முன்பாக அது இருந்ததே” என்று எண்ணினேன். அங்கே பழைய மரப்பலகைகள் தரையின் மேலிருந்தன. அங்கேதான் சரியாக அது நேராக எனக்கு முன்பாக இருந்தது. ஒரு பழைய தகர செயற்கை எரிஅடுப்பு (Old drum Stove) அங்கே மூலையிலிருந்தது. அதன் மேல்பாகம் உடைந்து போயிருந்தது. அப்பொழுது சரியாக அந்த இடத்தில் ஒரு—ஒரு வெளிச்சம் தரையில் மேலிருந்தது. அப்பொழுது நான், “அது எங்கிருந்து வருகிறது? அது…வந்து கொண்டிருக்க முடியாதே…” என்றே எண்ணிக்கொண்டேன். 148 நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். இதோ அது எனக்கு மேலாக இருந்தது. இதே வெளிச்சம்தான். சரியாக எனக்கு மேலாக அதைப்போன்றே தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு அக்கினியைப்போல, மரகத நிறத்தைப் போன்று சுழன்றுகொண்டு, “உஷ், உஷ், உஷ்” என்ற விதமாக மேலே அதைப் போன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது நான் அதை நோக்கிப் பார்த்தேன். பின்னர் நான், “அது என்னவாயிருக்கும்?” என்று எண்ணினேன். அது எனக்கு பயத்தை ஏற்படுத்திவிட்டது. 149 நான் யாரோ நடந்து வருகிறதை [சகோதரன் பிரான்ஹாம் யாரோ ஒருவர் நடந்துவருவது போன்று நடித்துக் காட்டுகிறார்—ஆசி.] வெறுமனே நடந்து வருகிறதை, அதுவும் வெறுங்காலில் நடந்து வரும் சத்தத்தைக் கேட்டேன். ஒரு மனிதனுடைய பாதம் உள்ளே வருவதையும் நான் கண்டேன். அப்பொழுது அறைக்குள் முழுவதும் இருளாய் இருந்தது. ஆனால் சரியாக அங்கே அந்த இடத்தில் மட்டும் வெளிச்சம் பிரகாசித்துக்கொண்டிருந்தது. நான் ஒரு மனிதனுடைய பாதம் உள்ளே வருவதைக் கண்டேன். அவர் அறைக்குள்ளாக வந்தபோது, நடந்து முன்னாக வந்தார். அவர் பார்ப்பதற்கு சுமர் இருநூறு பவுண்டு எடையுள்ள ஒரு…மனிதனைப் போன்று காணப்பட்டார். அவர் தன்னுடைய கரங்களை இந்த வண்ணமாக மடக்கி வைத்துக்கொண்டிருந்தார். நான் அதை ஒரு சுழல்காற்றில் கண்டிருந்தேன். அது என்னோடு பேச நான் கேட்டிருந்தேன். நான் அதை ஒரு ஒளியின் வடிவில் கண்டிருந்தேன். ஆனால் அப்பொழுதுதான் நான் அதை முதன்முறையாக ஒரு உருவத்தில் கண்டேன். அது நடந்து என்னை நோக்கி நெருங்கி வந்தது. 150 உண்மையான நண்பர்களே, என்னுடைய இருதயமே நின்று விடும் என்றே நான் எண்ணினேன். நான்…சற்று கற்பனை செய்து பாருங்களேன்! உங்களை அங்கே வைத்துப் பாருங்கள், அதே விதமான உணர்வை அது உங்களுக்கு உண்டாகும். ஒருவேளை நீங்கள் என்னைக் காட்டிலும் அந்த பாதையில் அதிக தூரம் சென்றிருக்கலாம். ஒருக்கால் நீங்கள் என்னைக் காட்டிலும் அதிக காலமாக ஒரு கிறிஸ்தவனாக இருந்து வந்திருக்கலாம். ஆனால் அது உங்களை அந்த விதமாகவே உணரும்படிச் செய்யும். ஏனென்றால் எத்தனையோ நூற்றுக் கணக்கான சந்திப்புகளுக்கு பின்னும் அவர் நெருங்கி வரும்போது அது என்னை செயலற்றவனாக்குகிறது. அது சில நேரங்களில் என்னையும் கூட…நான் அநேக சமயங்களில் மேடையை விட்டுச் செல்லும்போது, நான் கிட்டத்தட்ட மரித்தவனைப் போல அவ்வளவு பெலவீனமாகி விடுகிறேன். மேலும் நான் நீண்டநேரம் அங்கேயே தரித்திருந்தால் நான் முழுமையாக மரித்துப்போய் விடுவேன். அப்பொழுது அவர்கள் என்னை மணிக்கணக்கில் வண்டியில் ஏற்றிக்கொண்டு ஓட்டிக்கொண்டே செல்லும்போது நான் எங்கிருக்கிறேன் என்பதையும்கூட அறியாதவனாகவும் இருந்திருக்கிறேன். என்னால் அதை விவரித்துக் கூறமுடியாது. இங்கே வேதாகமத்தில் வாசித்துப் பாருங்கள், அதுவே அது என்னவென்பதை உங்களுக்கு விவரித்துக்கூறும். வேத வார்த்தைகள் அந்த விதமாக கூறுகிறதே! 151 எனவே நான் அங்கே அமர்ந்துகொண்டு அவரையே நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான்—நான் ஒருவிதமாக என் கரத்தை இப்படி வைத்துக் கொண்டிருந்தேன். அவரோ அவ்வளவு இனிமையாக நேராக என்னையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் உண்மையாகவே ஒரு கனத்த குரலை உடையவராக இருந்தார். அப்பொழுது அவர், “பயப்படாதே. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சமூகத்திலிருந்து நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்றார். மேலும் அவர் பேசினபோது, அந்த சத்தமானது நான் இரண்டு வயது உடையவனாயிருந்தது முதற்கொண்டு என்னோடு பேசின அதே சத்தமாகவே இருந்தது. அப்பொழுது நான் அது அவர் தான் என்பதை அறிந்து கொண்டேன். பின்னர் நான், “இப்பொழுது…” நினைத்தேன். 152 இதை கேளுங்கள். இப்பொழுது உரையாடலைக் கவனியுங்கள். நான் நன்கு அறிந்தமட்டில் அதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தையாக குறிப்பிட்டுக் கூறவுள்ளேன். ஏனென்றால் எனக்கு அது சரியாக நினைவில்லை. 153 அவர்…நான் சொன்னேன்…நான் அந்த விதமாக அவரை நோக்கிப் பார்த்தேன். அப்பொழுது அவர், “பயப்படாதே” என்று கூறி, பின்னர் அவ்வளவு அமைதியாக, “உன்னுடைய விசேஷித்த பிறப்பைப் பற்றி உன்னிடம் கூறும்படியாக சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சமூகத்திலிருந்து நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்…” என்றார். அங்கே என்னுடைய பிறப்பு எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் பிறந்தபோது எனக்கு மேலாக அதே விதமான ஒளியே தொங்கினது. ஆகையால் அவர், “உன்னுடைய விசேஷித்த பிறப்பும், தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஜீவியமும், நீ உலகெங்கும் போய் வியாதியாயிருக்கிற ஜனங்களுக்காக ஜெபிக்கப்போகிறாய் என்பதை சுட்டிக்காட்டவே அப்படி இருந்து வருகிறது” என்றார். மேலும், “அவர்களுக்கு என்ன வியாதியாயிருந்தாலும் கவலையில்லை…” என்றும் கூறினார். அவர் அதை குறிப்பிட்டுக் கூறினார். என்னுடைய நியாயாதிபதியாயிருக்கிற தேவன் அதை அறிவார். அதாவது அவர், “புற்றுநோயும்கூட” என்று குறிப்பிட்டுக் கூடினார். மேலும் அவர், “ஒன்றுமே……ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்தால், நீ ஜெபிக்கும் போது உத்தமமாய் இருந்தால், உன்னுடைய ஜெபத்திற்கு முன்பாக ஒன்றுமே நிற்காது, புற்றுநோயும்கூட நிற்காது” என்றார். பாருங்கள், “நீ ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்தால்” என்றே கூறினார். 154 அவர் என்னுடைய எதிராளியல்ல என்பதையும், என்ன்னுடைய நண்பன் என்பதையும் நான் கண்டேன். அந்தவிதமாக அவர் என்னிடத்தில் நெருங்கி வந்து கொண்டிருந்தபோது நான் மரித்துக் கொண்டிருந்தேனா அல்லது என்ன சம்பவித்துக் கொண்டிருந்தது என்பதையும் நான் அறியாதவனாய் இருந்தேன். பின்னர் நான் அவரிடத்தில், “சரி ஐயா” என்றேன். மேலும் நான், “நான்…” என்றேன். சுகமளித்தலைக் குறித்தும், அதைப்போன்ற காரியங்களைக் குறித்தும், அந்த வரங்களைக் குறித்தும் எனக்கு என்ன தெரியும்? ஆகையால் நான், “சரி ஐயா, நான் ஒரு…நான்—நான் ஒரு ஏழ்மையான மனிதன்” என்றேன். தொடர்ந்து நான், “நான் என்னுடைய ஜனங்கள் மத்தியில் இருக்கிறேன். ஏழ்மையாயிருக்கிற என்னுடைய ஜனங்களோடு நான்—நான் ஜீவிக்கிறேன். நான் கல்வியறிவு இல்லாதவன்” என்றேன். மேலும் நான், “என்னால்—என்னால்—என்னால் அதை செய்ய இயலாது, அவர்களும்—அவர்களும் என்னை புரிந்து கொள்ளமாட்டார்கள்” என்றேன். எனவே நான், “அவர்கள்—அவர்கள்—அவர்கள் எனக்கு செவிகொடுக்க மாட்டார்கள்” என்றேன். 155 அதற்கு அவர், “தீர்க்கதரிசி மோசேக்கு இரண்டு வரங்கள், அடையாளங்கள், சரியாகக் கூறினால் அவனுடைய ஊழியத்தை ரூபகாரப்படுத்த கொடுக்கப்பட்டது போலவே உன்னுடைய ஊழியத்தை ரூபகாரப்படுத்தவும் உனக்கு இரண்டு வரங்கள் கொடுக்கப்படும்” என்றார். தொடர்ந்து அவர், “அவைகளில் ஒன்று என்னவெனில், நீ ஒரு நருக்காக ஜெபிக்கையில் உன்னுடைய இடது கையைக் கொண்டு அவர்களுடைய வலக்கரத்தைப் பிடித்து ஜெபிக்கும்போது, அப்பொழுது அமைதியாக நிற்பாயானால், அது…அப்பொழுது உன்னுடைய சரீரத்தில் ஒரு சரீரப்பிரகாரமான ஒரு பாதிப்பு ஏற்படும்” என்றார். மேலும் அவர், “அப்பொழுது நீ ஜெபிப்பாய். அது உன்னைவிட்டு நீங்கிப்போகுமானால், அப்பொழுது வியாதி ஜனங்களிடத்திலிருந்து நீங்கிப்போயிற்று என்று அர்த்தம். அது அவ்வாறு நீங்கிப்போகவில்லையென்றால், ஒரு ஆசீர்வாதத்தை கேட்டுவிட்டு கடந்து போய்விடு” என்றார். “நல்லது”, அதற்கு நான், “ஐயா அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றே ஐயப்படுகிறேன்” என்றேன். 156 மேலும் அவர், “அடுத்த காரியம் இந்தவிதமாய் இருக்கும். அதற்கு அவர்கள் செவிகொடுக்காமற்போனால், அப்பொழுது அவர்கள் இதற்கு செவிகொடுப்பார்கள்” என்றார். அடுத்தபடியாக அவர், “அப்பொழுது நீ அவர்களுடைய இருதயத்தின் இரகசியத்தை அறிந்துகொள்கின்ற காரியம் சம்பவிக்கும்” என்றார். எனவே, “அவர்கள் இதற்கு செவிகொடுப்பார்கள்” என்றார். 157 நான், “சரி ஐயா, அந்த காரணத்தினால்தான் நான் இன்றிரவு இங்கு இருக்கிறேன். என்னிடமாய் வருகின்ற அந்த காரியமானது தவறாயிருந்தது என்று என்னுடைய உடன் போதகர்களால் கூறப்பட்டிருந்தேன்” என்றேன். 158 அதற்கு அவர், “அந்த நோக்கத்திற்காகவே நீ இந்த உலகில் பிறந்தாய்” என்றார். (பாருங்கள், “வரங்களும் அழைப்பும் மாறாதவைகளே”.) எனவே அவர், “அந்த நோக்கத்திற்காகவே நீ இந்த உலகத்தில் பிறந்தாய்” என்றார். 159 அப்பொழுது நான், “ஐயா, என்னுடைய உடன் போதகர்கள் அது பொல்லாத ஆவி என்றே என்னிடம் கூறினார்கள்” என்றேன். பின்னர் நான், “அவர்கள்…அதற்காகவே நான் இங்கே ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்” என்றேன். 160 அவர் இதைத்தான் என்னிடத்தில் குறிப்பிட்டு கூறினார். அவர் கர்த்தராகிய இயேசுவின் முதலாவது வருகையை, தம்முடைய முதல் வருகையை எனக்கு சம்பந்தப்படுத்திக் கூறினார். எனவே நான் சொன்னேன்… 161 நண்பர்களே அது விநோதமான காரியமாயிருந்தது…நான் இங்கேயே ஒரு நபரிடம் நிறுத்திவிட்டு, திரும்பிச் செல்கிறேன். என்னை எப்போதும் அதிக பயமுண்டாக்குகிற காரியம் எதுவெனில், நான் ஒவ்வொரு முறையும் குறிசொல்பவர்களை சந்திக்கும்போது, சம்பவித்திருந்த ஏதோ ஒரு காரியத்தை அவர்கள் அடையாளங்கண்டு கொள்வதாயிருந்தது. அது அப்படியே…என்னை கிட்டத்தட்ட கொன்றுவிடுவதுபோன்று உள்ளது. 162 உதாரணமாக, ஒருநாள் என்னுடைய நெருங்கின உறவினர்களும், நானுமாக ஒரு—ஒரு திருவிழா மைதானத்திற்கு போய்க் கொண்டிருந்தோம். அங்கே குறிசொல்லுகிற ஒருவள் அங்கே உள்ள ஒரு கூடாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் ஒரு வாலிபப் பெண்ணாய், காண்பதற்கு நன்றாக தோற்றமளிக்கிற ஒரு வாலிப ஸ்திரீயாய் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தாள். நாங்கள் யாவருமாக நடந்து போய்க்கொண்டிருந்தோம். அப்பொழுது அவள், “ஒரு நிமிடம் நீ இங்கே வா” என்றாள். மூன்று பையன்களாகிய நாங்கள் அப்படியே திரும்பினோம். அப்பொழுது அவள், “கோடு போட்ட கம்பளிச்சட்டை அணிந்துள்ள உன்னைத்தான்” என்றாள். அது நானாயிருந்தேன். 163 அதற்கு நான், “என்ன அம்மாள்?” என்று கேட்டேன். எங்கோ கடைக்குப்போய் அவளுக்கு ஒரு குளிர்பானத்தை வாங்கிக்கொண்டு வர சொல்லுவாள் போலும் அல்லது அவ்விதமாக ஏதோ காரியமாயிருக்கலாம் என்று நான் எண்ணிக்கொண்டேன். அவள் ஒரு வாலிப ஸ்திரீயாய், ஒருக்கால் இருபதி வயதிற்கு மேம்பட்டவளாய் அல்லது அதைவிட சற்று கூடுதலான வயதுடையவளாய் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தாள். நான் நேராக அவளிடம் நடந்து சென்று, “சரி அம்மா, நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். 164 அதற்கு அவள், “உன்னை ஏதோ ஒரு ஒளி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா? நீ ஒரு குறிப்பிட்ட அடையாளத்தின் கீழ் பிறந்திருக்கிறாய்” என்றாள். அதற்கு நான், “நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டேன். 165 அதற்கு அவள், “நீ ஒரு குறிப்பிட்ட அடையாளத்தின் கீழ் பிறந்திருக்கிறாய். உன்னை பின் தொடருகிற ஒரு—ஒரு ஒளி உண்டு. நீ ஒரு தெய்வீக அழைப்பின் கீழ் பிறந்திருக்கிறாய்” என்றாள். அதற்கு நான், “ஸ்திரீயே, இங்கிருந்து தூரப்போ” என்றேன். 166 நான் நடக்கத் துவங்கினேன், ஏனென்றால் அவ்விதமாகக் கூறுவது பிசாசினாலானது என்று என்னுடைய தாயார் எப்பொழுதும் கூறுவாள். அவள் கூறினது சரியே. எனவே நான்…அது எனக்கு பயத்தை உண்டாக்கியது. 167 நான் வேட்டைக்காவலனாக இருந்தபோது ஓர்நாள் நான் பேருந்தில் போய்க்கொண்டிருந்தேன். நான் பேருந்தில் போய் உட்கார்ந்தேன். எப்பொழுதும் நான் ஆவிகளுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்பது போன்று தென்பட்டது. நான் அங்கே நின்று கொண்டிருந்தேன். இந்த மாலுமி எனக்குப் பின்னாக அங்கே நின்று கொண்டிருந்தான். நான் ஹென்றிவில்லி (Henry ville) என்ற வனத்திற்கு ஒரு பேருந்தில் போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது நான் ஏதோ ஒருவிதமான விநோத உணர்வை உடையவனாயிருந்தேன். நான் பேருந்திற்குள்ளாக சுற்றிப் பார்த்தேன், அங்கே மிகவும் பருமனாக ஒரு—ஒரு ஸ்திரீ நன்றாக ஆடையணிந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் என்னிடத்தில் “நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?” என்று கேட்டாள். அதற்கு நான், “நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?” என்று கேட்டேன். 168 உங்களுக்குத் தெரியுமா? யாரோ ஒரு ஸ்திரீ சாதாரணமாக பேசுகிறாள் என்றே நான் எண்ணிக்கொண்டேன். எனவே நான் அப்படியே இருந்தேன்.…அப்பொழுது அவள், “நான் உன்னிடம் ஒரு நிமிடம் பேச விரும்புகிறேன்” என்றாள். நான், “சரி, அப்படியா அம்மா?” என்றேன். அப்பொழுது நான் திரும்பினேன். உடனே அவள், “நீ ஒரு அடையாளத்தின் கீழ் பிறந்திருக்கிறாய் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள். 169 நானோ, “முன் இருந்ததைப் போன்றே இன்னொரு வேடிக்கையான ஸ்திரீ” என்றே எண்ணிக்கொண்டேன். எனவே நான் அப்படியே வெளியே நோக்கிப்பார்த்தேன். ஆயினும் நான் ஒரு வார்த்தையையும் கூறாமல் அப்படியே இருந்தேன்.… 170 அவளோ, “உன்னிடத்தில் நான் ஒரு நிமிடம் பேசலாமா?” என்று கேட்டாள். நான் அப்படியே அமைதியாய் இருந்தேன்……அதற்கு அவள், “அந்தவிதமாய் நடந்து கொள்ளாதே” என்றாள். 171 நான் தொடர்ந்து முன்னால் பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்பொழுது நானே, “அப்படி இருப்பது ஒரு பெருந்தன்மையான மனிதனைப் போன்றிருக்கவில்லை” என்றே எண்ணினேன். அப்பொழுது அவள், “நான் உன்னிடம் ஒரு நிமிடம் பேச வேண்டும்” என்றாள். 172 நான் தொடர்ந்து முன்பக்கமாக பார்த்துக்கொண்டே இருந்தேன். நான் அவளுக்கு எந்தவித கவனத்தையும் செலுத்தவில்லை. நேரடியாக நான், “மற்றவர்கள் கூறினவிதமாகவே இவளும் கூறுகிறாளா என்று பார்க்கலாமே” என்றே எண்ணினேன். எனவே நான் திரும்பினேன். அப்பொழுது நான், “ஓ, என்னே, அது என்னை நடுக்கமுறச்செய்யும் என்பதை நான் அறிவேன்” என்பதையும் நினைத்துக் கொண்டேன். ஏனென்றால் அதை நினைத்துப் பார்க்கவே நான் வெறுக்கிறேன். எனவே அப்படியே திரும்பினேன். 173 அவள், “முதலாவது என்னைக் குறித்து விளக்கிக் கூறுவது மேலானது” என்றாள். மேலும் அவள், “நான் ஒரு ஜோதிடக்காரி” என்றாள். பின்னர் அவள், “நீயும் அதைப்போன்று ஏதோ ஒரு காரியம் தான் என்று நான் நினைத்தேன்” என்றாள். 174 மேலும் அவள், “பாப்டிஸ்ட் ஊழியக்காரராக இருக்கின்ற என்னுடைய மகனை காணும்படியாக நான் சிக்காகோவிற்கு போய்க் கொண்டிருக்கிறேன்” என்றாள். நான், “சரி அம்மா” என்றேன். 175 அதற்கு அவள், “நீ ஒரு அடையாளத்தின் கீழ் பிறந்திருக்கிறாய் என்பதை யாராவது எப்பொழுதாவது உனக்கு கூறியிருக்கிறார்களா?” என்று கேட்டாள். 176 நான், “இல்லை அம்மா” என்றேன். நான் அவளிடத்தில் அங்கே பொய் சொன்னேன், பாருங்கள், அவள் என்னதான் கூறப்போகிறாள் என்பதை காணவே.…நான் அப்படி கூறினேன். எனவே நான், “இல்லை அம்மா” என்றேன். அதற்கு அவள், “எந்த ஊழியக்காரராவது அதை உன்னிடத்தில் எப்பொழுதாவது கூறியிருக்கிறார்களா?” என்று கேட்டாள். அப்பொழுது நான், “எனக்கு ஊழியக்காரர்களோடு எவ்வித சம்பந்தமும் கிடையாதே” என்றேன். அவள், “ஹூ ஹூ” என்றாள். பின்பு நான் கூறினேன்…அவள்—அவள் என்னிடம் கூறினாள்…நான், “நல்லது…” என்றேன். 177 அதற்கு அவள், “நீ எப்பொழுது பிறந்தாய் என்று நான் சரியாக உன்னிடத்தில் கூறினால், நீ என்னை நம்புவாயா?” என்று கேட்டாள். அதற்கு நான், “இல்லை அம்மா, நம்பமாட்டேன்” என்றேன். அதற்கு அவள், “நீ எப்பொழுது பிறந்தாய் என்று என்னால் கூறமுடியும்” என்றாள். அப்பொழுது நான், “நான் அதை நம்பமாட்டேன்” என்றேன். 178 உடனே அவள், “நீ 1909-ம் வருடம், ஏப்ரல் மாதம் 6-ம் தேதி அன்று காலை ஐந்து மணிக்கு பிறந்தாய்” என்றாள். 179 நான், “அது சரிதான்” என்றேன். பின்பு நான், “அது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன். மேலும் நான், “இங்கே இருக்கிறானே இந்த மாலுமி, இவன் எப்பொழுது பிறந்தான் என்று கூறு” என்றேன். அதற்கு அவள், “என்னால் கூற முடியாது” என்றாள். அப்பொழுது நான், “ஏன் முடியாது? உனக்கு அது எப்படி தெரியும்?” என்று கேட்டேன். 180 அதற்கு அவள், “ஐயா, இங்கே பாருங்கள்” என்றாள். மேலும் அவள் இந்த நட்சத்திர ஜோதிடத்தைக் குறித்து பேசத் துவங்கினாள். அப்பொழுது அவள், “அநேக வருடங்களுக்கு முன்னர்…விடிவெள்ளி நட்சத்திரம் வந்தபோது, அது வான சாஸ்திரிகளை இயேசு கிறிஸ்துவினண்டை வழிநடத்திச் சென்றது உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்டாள். 181 உங்களுக்குத் தெரியுமா? நான் ஒருவிதமாய் அப்படியே தாமதித்து, பின்னர் நான், “சரி, எனக்கு மதத்தைக் குறித்து ஒன்றுமே தெரியாது” என்றேன். 182 அதற்கு அவள், “வான சாஸ்திரிகள் இயேசுவைக்காண வந்ததைக் குறித்து நீ கேட்டிருப்பாயே?” என்றாள். அதற்கு நான், “ஆம்” என்றேன். அப்பொழுது அவள், “அந்த வானசாஸ்திரிகள் யார்?” என கேட்டாள். அதற்கு நான், “ஓ, அவர்கள் வெறும் ஞானிகள் என்று மட்டுமே நான் அறிவேன்” என்றேன். 183 அதற்கு அவள், “வான சாஸ்திரி என்றால் என்ன?” என்று கேட்டாள். மீண்டும் அவள், “அப்படியே என்னைப் போன்ற ஜோதிடர், அதாவது நட்சத்திரத்தை உற்றுப்பார்ப்பவர் என்றே அழைப்பார்கள்” என்றாள். தொடர்ந்து அவள், “இந்த பூமியில் எந்த காரியத்தையாவது தேவன் செய்வதற்கு முன்னர், அவர் எப்பொழுதும் அதை வானத்தில் தெரிவிப்பார். அதன் பின்னரே பூமியின் மேல் தெரிவிப்பார்” என்றாள். அதற்கு நான், “எனகுத் தெரியாது” என்றாள். 184 அப்பொழுது அவள், “சரி…” என்றாள். பின்னர் அவள் இரண்டு இல்லை மூன்று, இரண்டு…மூன்று நட்சத்திரங்களை அதாவது செவ்வாய், வியாழன், வெள்ளி என்பதைப் போன்று கூறினாள். ஆனால் அவைகளல்ல அது. ஆயினும் அவள், “அவைகள் தங்களுடைய பாதையில் குறுக்கே கடந்து ஒன்று சேர்ந்து வரும்போது…” என்றும், பின்னர், “மூன்று வான சாஸ்திரிகள் அங்கே கர்த்தராகிய இயேசுவை சந்திக்க வந்தார்கள் என்றும், அவர்களில் ஒருவன் காமின் வழிமரபிலிருந்தும், ஒருவன் சேமின் வழிமரபிலிருந்தும், இன்னொருவன் யாபேத்தின் வழிமரபிலிருந்தும் வந்தனர்” என்றாள். “மேலும் அவர்கள் மூவரும் பெத்லகேமிலே சந்தித்தபோது, அவர்களோடு வந்த மூன்று நட்சத்திரங்களும்…உலகத்தின் ஒவ்வொரு நபருக்கும் இந்த நட்சத்திரங்களோடு ஏதோ காரியம் தொடர்புடையதாயிருக்கிறது” என்றாள். மேலும் அவள் தொடர்ந்து, “அந்த மாலுமியைக் கேளுங்கள், சந்திரன் இல்லாமற்போகும்போது, வானத்தின் கிரகங்கள் மறைந்து போகும்போதும், அதனோடு சேர்ந்து அலைகளும் அமைதியாகி உள்ளே வருகின்றன” என்றாள். நானோ, “நான் அவனை கேட்க வேண்டிய அவசியமில்லை. நான் அதை அறிவேன்” என்றேன். 185 அதற்கு அவள், “உன்னுடைய பிறப்பு மேலே இருக்கின்ற அந்த நட்சத்திரங்களோடு ஏதோ ஒரு தொடர்புடையதாயிருக்கிறது” என்றாள். அப்பொழுது நான், “சரி, நான் அதை அறியேன்” என்றேன். 186 மேலும் அவள், “இப்பொழுது இந்த மூன்று வான சாஸ்திரிகளும் வந்தனர்” என்றாள். தொடர்ந்து அவள், “அந்த மூன்று நட்சத்திரங்களும், அவைகள்…அவைகள் வித்தியாசமான திசையிலிருந்து வந்து அவைகள் பெத்லகேமிலே சந்தித்தன. அப்பொழுது அவர்கள் அவைகளை கண்டுபிடித்து கூடி ஆலோசித்தனர். அப்பொழுது அவர்கள் நோவாவின் மூன்று குமாரர்களான காம், சேம், யாப்பேத்தின் வழிமரபிலிருந்து வந்தவர்கள் என்பதை கண்டறிந்தனர்” என்றாள். மேலும் அவள், “அவர்கள் வந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தொழுது கொண்டனர்” என்றாள். பின்னர் அவள், “அவர்கள் திரும்பிப் புறப்பட்டுப்போகும்போது வெகுமதிளைக் கொண்டு வந்து அவருக்கு முன்பாக வைத்தார்கள்” என்றாள். 187 அவள் தொட்ர்ந்து, “இயேசு கிறிஸ்து அவருடைய ஊழியத்தில் இந்த சுவிசேஷமானது (காம், சேம், யாப்பேத்தின் ஜனங்களுக்கு) உலகம் முழுவதிற்கும் பிரசங்கிப்படும். அதன்பிறகு நான் மீண்டும் வருவேன் என்று கூறினார்” என்றாள். மேலும் அவள், “அந்த கிரகங்கள், வான கிரகங்கள் அவைகள் சுற்றிக்கொண்டு வருகையில்…அவைகள் பிரிந்து விடுகின்றன. நான் அறிந்திருக்கிறமட்டில் அந்தவிதமாக பூமியின் மேல் அவைகள் இருந்ததேயில்லை” என்றும் கூறினாள். மேலும், “இந்தவிதமான அவைகளின் சுழற்சியில் குறிப்பிட்ட இடைவெளிகளில் அநேக நூற்றாண்டுகளுக்கு ஒருமுறையே தங்களுடைய ஓட்டப்பாதையில் அவைகள் இந்த விதமாக குறுக்கிடுகின்றன” என்றாள். அந்த நேரத்தில் ஒரு வானசாஸ்திரி அங்கே இருந்திருப்பானாயின் அவள் எதைக்குறித்து பேசிக்கொண்டிருந்தாள் என்பதை அவன் அறிந்து கொண்டிருப்பான். ஆனால் எனக்கோ புரியவில்லை. எனவே அவள் பேசிக்கொண்டிருந்தபோது…அவள் தொடர்ந்து, “அவைகள் அந்தவிதமாய் கடக்கின்றன” என்றாள். மேலும் அவள், “மனித வர்க்கத்திற்கு இதுவரை கொடுக்கப்பட்ட மகத்தான வெகுமதி எதுவெனில் தேவன் அவருடைய குமாரனை கொடுத்ததேயாகும். இந்த கிரகங்கள் ஒன்றையொன்று குறுக்கே கடக்கும்போது, ஏன்? அவர் மற்றொரு வெகுமதியை பூமிக்கு அனுப்புகிறார்” என்றாள். தொடர்ந்து அவள், “அந்தவிதமாக கடந்து செல்லும் நேரத்தில் நீ பிறந்திருக்கின்றாய்” என்றாள். எனவே, “அந்த காரணத்தினால் நான் அதை அறிவேன்” என்றாள். 188 அப்பொழுது நான், “அம்மா, முதலாவது நான் அதைக் குறித்த எதையுமே நம்புவதில்லை. மேலும் நான் தேவபக்தியுள்ளவனுமல்ல. எனவே அதைக்குறித்த எதையுமே நான் கேட்க விரும்பவில்லை” என்று கூறிவிட்டேன். பின்னர் நான் நடந்து சென்றிவிட்டேன். எனவே நான் அவளை அப்படியே துண்டித்துக் கொண்டேன். பின்னர் நான் சென்றுவிட்டேன். 189 அப்படிப்பட்டவர்களை சந்திக்கின்ற ஒவ்வொரு முறையும் அந்த விதமாகவே இருக்கும். எனவே நான், “ஏன் அந்த பிசாசுகள் அதை செய்கின்றன?” என்று எண்ணிக்கொண்டேன். 190 ஆனால் பிரசங்கிமார்களோ, “அது பிசாசாயிருக்கிறதே! அது பிசாசே” என்கிறார்களே! அவர்கள் என்னை அதை நம்பும்படி செய்திருந்தனர். 191 அப்படியானால் அங்கே உயரே இருந்த அந்த இரவன்று நான்…அவர் அதை குறிப்பிட்டு கூறுகையில், நான் அவரிடத்தில் கேட்டேன். அதாவது நான், “ஆவியுலகுடன் தொடர்பு கொண்டிருக்கும் இடையீட்டாளர்கள் (Medium) மற்றும் அதைப்போன்று காரியங்களும், பிசாசினால் பிடிக்கப்பட்ட ஜனங்களும் அதைக் குறித்து என்னிடம் எப்பொழுதும் கூறுகிறார்கள். ஆனால் என் சகோதரர்களான போதகர்களோ அது பொல்லாத ஆவியினாலானது என்றே என்னிடம் கூறுகிறார்களே அது ஏன்?” என்று கேட்டேன். 192 அங்கே புகைப்படத்தில் அக்கினி ஸ்தம்பமாக தொங்கிக் கொண்டிருக்கிறாரே அந்த ஒருவர் அப்பொழுது என்ன கூறினார் என்பதை இப்பொழுது கவனியுங்கள். அப்பொழுது அவர், “அன்றைக்கு அது இருந்ததுபோலவே இப்பொழுதும் அது இருக்கிறது” என்றார். மேலும் அவர் என்னிடம் குறிப்பிட்டு கூறத்துவங்கும்போது, “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியம் நடைபெறத் துவங்கினபோது, ஊழியக்காரர்களோ ‘அவரை பெயல்செபூல் என்றும், பிசாசு’ என்றும் கூறினார்கள். ஆனால் பிசாசுகளோ ‘நீர் அவர் தேவனுடைய குமாரன், இஸ்ரவேலின் பரிசுத்தர்’ என்றே கூறின. பிசாசுகள்…பவுலும், பர்னபாவும் அங்கே பிரசங்கித்துக் கொண்டிருந்ததைப் பாருங்கள். ஊழியர்கள், ‘இவர்கள் உலகத்தை தலை கீழாக்குகிறவர்கள், இவர்கள் பொல்லாதவர்கள், இவர்கள் பிசாசுகள், என்றார்கள்.’ ஆனால் விதியிலிருக்கிற ஒரு வயோதிக குறிசொல்லுகிறவளோ பவுலையும், பர்னபாவையும் பார்த்து, தேவனுடைய மனிதர்கள் என்று அடையாளம் கண்டுகொண்டு, ‘இவர்கள் ஜீவபாதையை நமக்கு அறிவிக்கிற தேவனுடைய மனிதர்கள் என்றாளே’” என்று கூறினார். அது சரிதானே? “ஆவியுலகுடன் தொடர்புள்ளவர்களும், குறிசொல்லுகிறவர்களும் பிசாசு பிடித்த ஜனங்கள்”. 193 ஆனால் நாமோ வேத சாஸ்திரத்தின் பேரில் அவ்வளவு புளிப்புகொண்டு ஆவியைக் குறித்து நாம் ஒன்றுமே அறியாத அளவிற்கு வந்து விட்டோம். இதற்குப் பிறகும் நீங்கள் என்னை நேசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அதுதான் காரியமாயிருக்கிறது. நான் பெந்தெகோஸ்துகளையும்கூட கூறுகிறேன். அது உண்மை. வெறுமனே கூச்சலிட்டுக்கொண்டும், சுற்றி சுற்றி நடனமாடிக் கொண்டிருப்பதும் உங்களுக்கு ஆவியைக் குறித்து ஒன்றுமே தெரியாது என்பதைத்தான் பொருட்படுத்துகிறது. 194 அதனுடைய நேர்முக தொடர்பு, அதாவது நேருக்கு நேர் சந்தித்தல், அதுதான் உங்களுக்கு தேவையாயிருக்கிறது. அந்த விதமான சபையைத்தான் தேவன் எழுப்புவதாக இருக்கிறார். அது உண்மையே. அவர்கள் ஒற்றுமையிலும், வல்லமையிலும் ஒன்று சேர்ந்து வரும்போது அது உண்டாகும். 195 அவர் அதைக் குறிப்பிட்டு கூறினார். அந்த ஊழியமானது எவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்பதை, அதாவது அந்த ஊழியம் எவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது என்பதையும் அவர் எனக்கு உறுதிப்படுத்தினார். மேலும் அவர் இவை எல்லாவற்றையும் குறித்தும், எப்படி இயேசுவானவர்…என்பதையும் என்னிடம் கூறினார். 196 அப்பொழுது நான், “இதைக் குறித்து என்னவென்றும், எனக்கு சம்பவித்த இந்த காரியங்களைக் குறித்து என்ன?” என்றும் கேட்டேன். 197 நீங்கள் பாருங்கள், அவர், “அது அப்படியே பலுகி பெரியதாகி, பெருகிக்கொண்டே போகும்” என்றார். அவர் அதை எனக்கு குறிப்பிட்டுக் காட்டினார். இயேசுவானவர் எப்படியாக அதைச் செய்தார் என்றும் என்னிடம் கூறிக்கொண்டிருந்தார். அவர் எப்படி வந்தாரென்றும், காரியங்களை முன்கூட்டியே அறியக்கூடிய ஒரு வல்லமையை அவர் எப்படி உடையவராய் இருந்தாரென்றும், கிணற்றண்டை இருந்த அந்த ஸ்திரீயினிடத்தில் அதை கூறி, தன்னை ஒரு சுகமளிப்பவரென்று உரிமை கோராமல், பிதாவானவர் செய்ய அவர் காண்கிற காரியங்களை மட்டுமே செய்வதாக எவ்வாறு உரிமை கோரினார் என்பதையும் என்னிடம் கூறினார். அதற்கு நான், “சரி, அப்படியானால் அது எப்படிப்பட்ட ஆவியாக இருக்கும்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அது பரிசுத்த ஆவியாயிருந்தது” என்றார். 198 அதன்பின்பு எனக்குள்ளாக ஏதோ காரியம் அங்கே சம்பவித்தது. நான் எந்த காரியத்திற்கு என் முதுகைத் திருப்பி காண்பித்தேனோ அந்த காரியத்திற்காகவே தேவன் என்னை இங்கே கொண்டு வந்தார் என்பதை உணர்ந்து கொண்டேன். கடந்து சென்ற நாட்களிலிருந்த அந்த பரிசேயரைப் போன்றே இது இருந்தது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் வேத வார்த்தைகளை எனக்கு தவறாக வியாக்கியானித்திருந்தனர். எனவே அப்பொழுதிலிருந்து நான் பரிசுத்த ஆவியானவர் கூறின வியாக்கியானத்தையே என்னுடைய சொந்த வியாக்கியானமாக எடுத்துக் கொண்டேன். எனவே நான், “நான் செல்வேன்” என்றேன். அப்பொழுது அவர், “நான் உன்னுடனே கூட இருப்பேன்” என்றார். 199 அந்த தூதன் மீண்டும் அந்த வெளிச்சத்திற்குள் அடியெடுத்து வைக்க மீண்டுமாக அது அவருடைய பாதத்தைப் போன்று சுற்றி, சுற்றி, சுற்றிக்கொண்டே வந்து, அந்த வெளிச்சத்திற்குள் சென்று அந்த கட்டிடத்தை விட்டு வெளியே சென்றுவிட்டது. நான் ஒரு புதிய நபராக வீட்டிற்குச் சென்றேன். 200 நான் நேராக சபைக்கு நடந்து சென்று அதைக் குறித்து ஜனங்களிடம் கூறினேன். அது ஞாயிறு இரவாக இருந்தது. 201 புதன்கிழமை இரவன்று அவர்கள் ஒரு ஸ்திரீயை அங்கே கொண்டு வந்தார்கள். அவள் மேயோ (Mayo) வைத்தியரிடமுள்ள மருத்துவச்சிகளில் (Nurse) ஒருவள். அவள் புற்றுநோயினால் மரித்துக் கொண்டிருந்தாள். அவள் வெறும் ஒரு நிழலேயொழிய வேறொன்றுமில்லை. அவளுடைய கரத்தை நான் கையில் பிடிக்கும்படியாய் நான் நடந்து சென்றபோது, அவள் மீண்டும் மருத்துவச்சியாக பணிபுரிந்து கொண்டிருக்கிறதை நான் அங்கே தரிசனத்தில் அவள் முன்னே கண்டேன். அவள் மரித்துப் போய் விட்டாள் என்று லூயிவில்லிலுள்ள (Louisville) பட்டியலில் இருக்கிறாள். ஆனால் அவளோ பல வருடங்களாக ஜெபர்சன்வில்லில் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள். ஏனென்றால், நான் அங்கே நோக்கிப் பார்த்தபோது அந்த தரிசனத்தை கண்டேன். நான் என்ன செய்கிறேன் என்பதை சிறிதும் அறியாதவனாய் நான் அப்படியே திரும்பி அங்கே நின்று கொண்டிருந்தேன். முதலாவதாக அவளை என்னிடத்தில் கொண்டு வந்து கீழே கிடத்தினபோது, எனக்கு நடுக்கம் உண்டாயிற்று. மருத்துவச்சிகளும் மற்றவர்களும் அவளை சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள். அவளோ அங்கு படுத்துக் கிடந்தாள். அவளுடைய முகமெல்லாம் குழிவிழுந்துபோய், அவளுடைய கண்கள் உள்ளே போயிருந்தன. 202 அவளுடைய பெயர் மார்ஜி மார்கன் (Margie Morgan) நீங்கள் அவளுக்கு எழுதவேண்டுமானால், அவளுடைய விலாசம் 411. நாஃப்பிளாக் அவென்யூ, (Knoblock Avenue) ஜெபர்சன்வில், இந்தியானா அல்லது கிளார்க் கௌண்டி மருத்துவமனை, (Clark Country Hospital) ஜெபர்சன்வில், இந்தியானா என்று எழுதுங்கள். அவள் தன்னுடைய சாட்சியை உங்களுக்கு தெரிவிக்கட்டும். 203 நான் அவளை நோக்கிப் பார்த்தேன். இதுதான் பார்க்கும்படியாய் அங்கே வந்திருந்த முதல் பிணியாளி. அப்பொழுது அங்கே ஒரு தரிசனமும் வந்தது. அந்த ஸ்திரீ மீண்டும் மருத்துவச்சி வேலையை செய்து கொண்டிருக்கிறதையும், நன்றாகவும், பலமாகவும், சுகதேகியாகவும் நடந்து கொண்டிருக்கிறதையும் நான் கண்டேன். அப்பொழுது நான், “கர்த்தர் உரைக்கிறதாவது, ‘நீ ஜீவிப்பாய், மரிக்கமாட்டாய்’” என்றேன். 204 அவளுடைய புருஷன் இந்த உலக காரியங்களில் மிக உயர்ந்த ஒரு மனிதன். அவன் என்னை இந்தவிதமாக பார்த்தான். அப்பொழுது நான் அவரிடம், “ஐயா, நீர் பயப்படவேண்டாம். உங்களுடைய மனைவி ஜீவிப்பாள்” என்றேன். 205 அவன் என்னை வெளியே கூப்பிட்டு கூறினான்…இரண்டு அல்லது மூன்று வைத்தியர்களையும் அழைத்து, “உங்களுக்கு இவர்களைத் தெரியுமா?” என்று கேட்டான். நான், “ஆம், தெரியுமா” என்றேன். 206 “ஏன்”, பின்னர், “நான் அவரோடு, குழிப்ப்பந்தாட்டம் விளையாடியிருக்கிறேன்” என்றேன். அதற்கு அவன், “புற்றுநோய் அவளுடைய குடல்களையே சுற்றிக்கொண்டிருக்கிறது. எனவே குடல் கழுவும் அழுத்தக்குழாய் கருவி (Enema) யின் மூலமும் அவளுடைய குடலை கழுவி சுத்தம் செய்யமுடியாது” என்றாள். 207 அப்பொழுது நான், “அவளுக்கு என்ன ஏற்பட்டுள்ளது என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை. இங்கே ஏதோ காரியம் உள்ளாக இருக்கிறது என்பதை நான் ஒரு தரிசனமாகக் கண்டேன்! என்னிடம் கூறின அந்த மனிதன், நான் எதையெல்லாம் கண்டேனோ அதையெல்லாம் கூறிவிடு, அப்பொழுது அது நீ கண்டவிதமாகவே இருக்கும். மேலும் அவர் என்னிடம் கூறினதை, நான் அதை விசுவாசிக்கிறேன்” என்றேன். 208 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அதிலிருந்து ஒரு சில நாட்கள் கழித்து அவளாகவே தன்னுடைய துணிகளை துவைத்துக்கொண்டு சுற்றி நடந்து கொண்டிருந்தாள். இப்பொழுது அவள் நல்ல பரிபூரண சுகதேகியாய் நூற்று அறுபத்தைந்து பவுண்டு எடை உள்ளவளாய் இருக்கிறாள். 209 நான் அதை ஏற்றுக்கொண்டபோது, அது தூரமாய் போய் விட்டது. அதற்குப் பின்னர் ராபர்ட் டாட்ரி (Robert Daugherty) என்னை அழைத்தார். அப்பொழுது அது இவ்வழியாகப் போய் டெக்சாஸினூடாக உலகம் முழுவதற்கும் போய்விட்டது. 210 ஒருநாள் இரவு சுமார் நான்கு அல்லது ஐந்து முறைகளில்…என்னால் அந்நிய பாஷைகளில் பேசுதல் முதலான காரியங்களை புரிந்துகொள்ள முடியாதிருந்தது. ஆனால் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை விசுவாசித்திருந்தேன், ஜனங்கள் அந்நிய பாஷைகளில் பேசமுடியும் என்பதையும் நான் விசுவாசித்தேன். ஒருநாள் நான் டெக்ஸாஸ் சான் அனிடோனியாவில் மாவட்ட தலைமை கிறிஸ்தவ தேவாலயத்தை நோக்கி நடந்து போய்க் கொண்டிருக்கையில் அங்கே அமர்ந்து கொண்டிருந்த ஒரு சிறு நபர் வேட்டைத்துப்பாக்கியில் குண்டுகள் வெடிப்பதுபோல அல்லது ஒரு இயந்திர துப்பாக்கியில் வேகமாக குண்டுகள் வெடிப்பது போல அந்நிய பாஷையில் பேசத்துவங்கினார். எங்கோ பின்னாக, அங்கே பின்னாக இருக்கின்ற ஒரு நபர் எழும்பி, “கர்த்தர் உரைக்கிறதாவது! மேடையை நோக்கி நடந்து போய்க்கொண்டிருக்கிற அந்த மனிதன் சர்வ வல்லமையுள்ள தேவனால் நியமிக்கப்பட்ட ஒரு ஊழியத்தை உடையவராய், முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முதலாம் முன்னோடியாக யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டதுபோல, இவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு காரணமாயிருக்கும் ஒரு செய்தியை கொண்டு செல்கிறார்” என்றார். 211 நான் அப்படியே மெய்மறந்து செயலிழந்தவனைப் போலானேன். நான் மேல்நோக்கிப் பார்த்தேன். பின்னர் நான், “உங்களுக்கு அந்த மனிதனை தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “இல்லை, ஐயா” என்றார். மேலும் நான், “உங்களுக்கு அவரைத் தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கும் அவர், “தெரியாது ஐயா” என்றார். அப்பொழுது நான், “உமக்கு என்னைத் தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கு அவரோ, “தெரியாது ஐயா” என்றார். பின்னர் நான், “நீர் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டேன். 212 அதற்கு அவர், “நான் அதை பத்திரிக்கையில் வாசித்தேன்” என்றான். வழக்கமாக…அதுவே கூட்டத்தின் முதல் இரவாயிருந்தது. நான் அங்கே நோக்கிப்பார்த்து, பின்பு அவனிடத்தில், “நீர் எப்படி இங்கு வந்தீர்?” என்று கேட்டேன். 213 அதற்கு அவன், “என்னுடைய ஜனங்களில் சிலர் நீர் ‘ஒரு தெய்வீக சுகமளிப்பவர்’ இங்கே வரப்போகிறீர் என்று என்னிடத்தில் கூறினார்கள். ஆகவே நான் வந்தேன்” என்றான். பின்பு நான், “நீங்களெல்லோரும் ஒருவரையொருவர் அறிந்திருக்க வில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவன், “இல்லை” என்றான். 214 ஓ, என்னே! அப்பொழுது நான் பரிசுத்த ஆவியின் வல்லமையைக் கண்டேன்…முன்னர் ஒரு சமயத்தில் நான் அது தவறு என்று நினைத்திருந்தேன்…ஆனால் இந்த தேவனுடைய தூதனோ அந்த காரியங்களை உடையவர்களாயிருந்த அந்த ஜனங்களோடு சம்பந்தப்பட்டிருந்தார்…எபன்பதை நான் அறிந்து கொண்டேன். அவர்கள் மோசடியான காரியங்களையும், அதிக கலப்படமான காரியங்களையும், அதிகப்படியான குழப்பங்களையும் உடையவர்களாயிருந்தாலும் அதில் அசலான பிரிவினரும் அங்கிருந்தனர். [ஒலி நாடாவில் இடம்—ஆசி.]…கிறிஸ்து. அது—அது உண்மையாயிருந்ததை நான் கண்டேன். 215 ஓ, வருடங்கள் கடந்து போனபோதிலும் கூட்டங்களில் தரிசனங்களில் முதலானவைகளை ஜனங்கள் காண்பார்கள். 216 ஒரு சமய புகைப்படமெடுக்கும் ஒருவர், நான் ஆர்கன்ஸாஸில் எங்கேயோ நின்று கொண்டிருந்தபோது அதை ஒரு புகைப்படமாக எடுத்தார். அது இதைப்போன்ற ஒரு கூட்டத்தில் என்று நான் நினைக்கிறேன். அதுவும் இதைப்போன்ற அரங்கத்தில் என்றே நான் நினைக்கிறேன். அப்பொழுது நான் அங்கே நின்றுகொண்டு அதை விவரிக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஜனங்கள் அதை அறிந்திருந்திருந்தபடியால் அதை உட்கார்ந்து கவனிப்பார்கள். அவர்கள் மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் முதலானவர்களே. பின்னர் நான் நோக்கிப் பார்க்க நேர்ந்தபோது, கதவின் வழியாக வந்த அது, இங்கே அது “உஷ், உஷ்!” என்று போய்க்கொண்டிருந்தது. 217 அதன்பின்பு நான், “இதற்குமேல் நான் பேச வேண்டியிருக்காது. ஏனென்றால் இங்கே இப்பொழுது அது வருகிறது” என்றேன். அது அசைந்து மேலே சென்றபோது, ஜனங்கள் கூச்சலிடத் துவங்கினர். அப்பொழுது அது நான் இருக்கின்ற இடம் மட்டுமாய் வந்து சுற்றி மேலே நின்றது. 218 அது அப்படியே சுற்றி நிற்கையில், ஒரு ஊழியக்காரன் மேலே ஓடிவந்து, “நான் அதைக் காண்கிறேன்” என்றான். அது அவனை அப்படியே குருடாக்கினபடியால் அவன் தள்ளாடிக்கொண்டு திரும்பிச் சென்றான். நீங்கள் அவனுடைய புகைப்படத்தை அங்கே புத்தகத்தில் காணமுடியும். அவன் தன்னுடைய தலையை இந்த விதமாய் தொங்கவிட்டுக்கொண்டு தள்ளாடிச் சென்றதை காணமுடியும். நீங்கள் அவனுடைய புகைப்படத்தைக் காணமுடியும். 219 அங்கே அது அப்படியே நின்றது. அப்பொழுது அதை அந்த நேரத்தில் ஒரு செய்திதாளுக்கு புகைப்படமெடுப்பவர் புகைப்படம் எடுத்தார். ஆனால் கர்த்தரோ ஆயத்தமாயிருக்கவில்லை. 220 ஓர் இரவு ஹுஸ்டன், டெக்ஸாஸில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் இன்னிசைக்கூட்டம் என்று நீங்கள் அழைக்கும் இடத்தில்…எண்ணூறு,…எட்டாயிரம் பேர்கள் இருந்தனர். பின்னர் அங்கிருந்த சாம் ஹூஸ்டனில் உள்ள பெரிய அரங்கத்திற்கு வந்தோம். 221 அன்றிரவு அங்கு நடந்த விவாதத்தில் ஒரு பாப்டிஸ்டு போதகர் என்னை, “நீர் ஒரு கீழத்தரமான, மாய்மாலக்காரனேயன்றி வேறொன்றுமில்லையென்றும், ஒரு மார்க்கரீதியான எத்தன் என்றும், என்னை பட்டணத்தை விட்டே துரத்திவிட வேண்டும்” என்று கூறினார். ஆனால் அப்படி செய்யப்படவேண்டியவர் அவரே. 222 அப்பொழுது சகோதரன் பாஸ்வர்த், “சகோதரன் பிரான்ஹாம் அப்படிப்பட்ட ஒரு காரியம், சம்பவிக்க நீர் அனுமதிப்பீரா? அவனை அழைத்துப்பாருங்களே!” என்றார். 223 நான், “இல்லை, ஐயா, மட்டுமீறிய அமளியை உண்டாக்குவதில் எனக்கு நம்பிக்கையில்லை. சுவிசேஷம் அமளியை ஏற்படுத்த உண்டாக்கவில்லை. அது ஜீவிக்கும்படியாக உண்டாக்கப்பட்டிருக்கிறது” என்றேன். மேலும் நான், “நீர் எப்படி அவனை நம்பச்செய்தாலும் கவலைப்படாமல், அவன் அதே விதமாகவே செல்வான்” என்றேன். பின்பு நான், “அவன்…அது அவனுக்கு எந்தவித வித்தியாசத்தையும் உண்டாக்காது. தேவனால் அவனுடைய இருதயத்திற்குள் பேசமுடியவில்லையென்றால் என்னால் எப்படி முடியும்?” என்று கேட்டேன். 224 அடுத்த நாள் ஹுஸ்டன் நாளிதழில், “அவர்கள் என்னத்திற்காக உண்டாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அது காட்டுகிறது” என்று கூறப்பட்டிருந்தது வெளிவந்திருந்தது. அந்த நாளிதழில், “அவர்கள் எதிலிருந்து உண்டாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் எதை பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அதையே ஏற்றுக்கொள்ள பயப்படுகிறார்கள்” என்றும் கூறப்பட்டிருந்தது. 225 வயோதிபர் பாஸ்வர்த் என்னிடம் வந்து, எழுபது வயதிற்கு மேற்பட்ட நிலையில் அப்பொழுது இருந்த அருமையான வயோதிப சகோதரன் தன்னுடைய கரத்தை என்மீது போட்டுக் கொண்டு, “சகோதரன் பிரான்ஹாம்” என்று அழைத்து, மேலும் அவர், “நீர் அதில் ஈடுபடப்போவதில்லை என்று கூறுகிறீரா?” என்று கேட்டார். 226 அதற்கு நான், “இல்லை, சகோதரன் பாஸ்வர்த். இல்லை ஐயா. நான் அதில் ஈடுபடப்போவதில்ல” என்றேன். மேலும் நான், “அது எந்த நன்மையும் செய்யாதே” என்றேன். தொடர்ந்து நான், “நாம் மேடையை விட்டுச் செல்லும்போது அது அமளி உண்டாவதற்கே காரணமாயிருக்கும்” என்றேன். அதுமட்டுமின்றி நான், “நான் இப்பொழுது ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனவே இந்த காரியங்களை எல்லாம் இந்தவிதமாக சின்னாபின்னமாக்க நான் விரும்பவில்லை” என்றேன். மேலும் நான், “அவனை அப்படியே போக விடுங்கள்” என்றேன். பின்னர் நான், “அவ்வளவுதான் அவனை வெறுமனே பிதற்றிக் கொண்டிருக்கிறான்” என்றேன். மேலும் நான், “இதற்கு முன்பும் அவர்கள் நமக்கு அப்படி செய்திருந்தார்களே. எனவே அவர்களிடத்தில் பேசுவது எந்த ஒரு நன்மையும் செய்யாது” என்றேன். பின்னர் நான், “அவர்கள் தங்களுக்குள்ளே முரண்பட்டுக்கொண்டு அப்படியே போய்விடுவார்கள்” என்றேன். அதுமட்டுமின்றி நான், “அவர்கள் ஒருதரம் சத்தியத்தை அறிகிற அறிவைப் பெற்று, அதன் பின்னர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அப்பொழுது அவர்கள் வேறு பிரிதலின் கோட்டை கடந்து சென்றுவிட்டார்கள் என்றும், அவர்கள் இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்படவே மாட்டார்கள் என்றே வேதம் கூறியுள்ளது. மேலும் அவர்கள் அதை ‘பிசாசு’ என்றழைக்கிறபடியால் அவர்களால் அதற்கு வேறொன்றையும் செய்ய முடியாது. அது மட்டுமின்றி அவர்கள் பிசாசாயிருக்கிற ஒரு மார்க்க சம்பந்தமான ஆவியினால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்” என்றேன். 227 அது உண்மையென்றும், ஒரு பிசாசின் ஆவியானது மத சம்பந்தமானது என்பதையும், எத்தனை பேர் அறிவீர்கள்? ஆம் ஐயா, கூடுமான அளவிற்கு அவர்கள் அடிப்படை தத்துக்காரர்களாயிருப்பார்கள். ஆயினும் “அடிப்படைத்தத்துவம்” என்று நான் கூறினது அவ்வளவு நன்றாக இல்லையென்றாலும் அது உண்மையே. “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” அது உண்மை. அற்புதங்களும், அடையாளங்களுமே எப்பொழுதும் தேவனை ரூபகாரப்படுத்துகின்றன. எனவே கடைசி நாட்களில் அது அதே விதமாகவே இருக்கும். கவனியுங்கள். 228 வயோதிப சகோதரன் பாஸ்வர்த், நான்…அவர் என்னோடுகூட வரப்போவதாக இருந்தார். ஆயினும் அவர் ஒருவிதமாக களைப்புற்றிருந்தார். அப்பொழுது அவர் ஜப்பானிலிருந்து திரும்பி வந்திருந்தார். அவர் இங்கே இருக்கப்போவதாக இருந்தார். அவர் என்னோடுகூட லூபக்கில் (Lubbock) இருக்கப்போகிறார். எனவே அவர்…அவருக்கு சிறிது கடுமையான ஜலதோஷம் பிடித்திருந்தபடியால் இந்த முறையும் அவராலும் அவருடைய மனைவியாலும் இந்த ஒன்றிற்கு வரஇயலவில்லை. ஆயினும் அவர்… 229 அவர் காலேப்பை போன்று காணப்படுகிறார் என்றே எல்லோரும் நினைத்தனர். அவர் அங்கே நின்றார், அந்த பெருந்தன்மையான தோற்றத்தை நீங்கள் அறிவீர்கள், அப்பொழுது அவர், “சகோதரன் பிரான்ஹாம்” என்று அழைத்து, “நீர் அதில் ஈடுபட விரும்பவில்லையென்றால், நான் போய் அதை செய்யட்டுமே” என்றார். 230 நான், “ஓ சகோதரன் பாஸ்வர்த், நீரும் அதில் தலையிட்டுக் கொள்ள நான்—நான் விரும்பவில்லை. ஏனெனில் நீங்கள் வீண் சந்தடி செய்வீர்கள்” என்றேன். அதற்கு அவர், “அங்கே சந்தடியான ஒரு வார்த்தையும் இருக்காது” என்றார். 231 இப்பொழுது, முடிப்பதற்கு சற்று முன்னர் இதற்கு செவி கொடுங்கள். அப்பொழுது அவர் அங்கு சென்றார். மேலும் நான், “நீர் சந்தடி செய்யவில்லையென்றால் சரிதான்” என்றேன். அதற்கு அவர், “நான் சந்தடி செய்யமாட்டேன் என்று வாக்களிக்கிறேன்” என்றார். 232 அந்த அரசங்கத்தில் அன்றிரவு சுமார் முப்பதாயிரம் ஜனங்கள் கூடியிருந்தனர். இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற சகோதரன் உட் (Wood) அந்த நேரத்தில் அந்த அரங்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். பின்னர் நான்… 233 என்னுடைய பையன் கூறினான், இல்லை…என்னுடைய மனைவியோ, “நீங்கள் அந்த கூட்டத்திற்கு போகப்போகிறதில்லையா?” என்று கேட்டாள். 234 நான், “இல்லை என்று கூறிவிட்டேன். நான் அங்கு சென்று அவர்களுடைய சந்தடியை கேட்கமாட்டேன். இல்லை ஐயா. நான் அங்கு சென்று அதை கேட்கவும் மாட்டேன்” என்றேன். இரவு நேரம் வந்தபோது, ஏதோ ஒன்று என்னிடத்தில், “அங்கே போ” என்றது. 235 நான் ஒரு வாடகை மோட்டார் வண்டியை எடுத்துக் கொண்டு, என்னுடைய சகோதரனும், மனைவியும் என்னுடைய பிள்ளைகளுமாக அங்கு சென்றோம். நான் அங்கே மாடியின் முப்பதாவது முகப்பில் உயரமாகச் சென்று அமர்ந்து கொண்டேன். 236 வயோதிப சகோதரன் பாஸ்வர்த் அங்கே ஒரு பண்டைய அரசியல் நிபுணனைப் போன்று நடந்து சென்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் சில நகல்களை வைத்திருந்தார்…அதாவது வேதாகமத்தின் ஆறுநூறு வித்தியாசமான வாக்குத்தத்தங்களை அதிலிருந்து நகலெடுத்து வைத்திருந்தார். அப்பொழுது அவர், “இப்பொழுது வேதபண்டிதர் பெஸ்ட் அவர்களே, நீர் இங்கே வந்து இந்த வாக்குத்தத்தங்களில் ஒன்றை எடுத்து, வேதாகமத்தின் மூலம் அதை தவறென்று நிரூபியுங்கள். வேதாகமத்தில் உள்ள இந்த ஒவ்வொரு வாக்குத்தத்தமும் இயேசு கிறிஸ்து வியாதியஸ்தரை இந்நாளில் குணமாக்குகிறார் என்பதையே சார்ந்ததாயிருக்கிறது. எனவே உம்மால் இந்த வாக்குத்தத்தங்களில் ஒன்றை எடுத்து, அதை வேதாகமத்தின் மூலம், அதை வேதத்தைக் கொண்டு, அது வேதத்திற்கு முரண்பட்டது என்று காண்பிக்கக்கூடுமானால், அப்பொழுது நான், ‘நீர் கூறினது சரியே’ என்று கூறி உம்முடைய கரத்தை குலுக்கிவிட்டுப்போய் நான் அமர்ந்து கொள்வேன்” என்றார். 237 மேலும் அவன், “நான் அங்கே மேடைக்குப் போகும்போது அதை கவனித்துக் கொள்வேன்” என்றார். அவனோ சகோதரன் பாஸ்வர்த்திடம் கடைசியாக சிக்கலை தீர்த்து வைக்கலாம் என்று விரும்பினான். பாருங்கள். 238 ஆனால் சகோதரன் பாஸ்வர்த்தோ, “சரி, சகோதரன் பெஸ்ட் அவர்களே, நான் ஒன்றை உங்களிடத்தில் கேட்பேன். அதற்கு நீர் என்னிடத்தில், ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று பதிலளிப்பீரானால், நாம் விவாதத்தை இப்பொழுதே முடித்துக்கொள்ளலாம்” என்றார். அதற்கு அவன்—அவன், “நான் அதற்கு பதிலளிப்பேன்” என்றான். மேலும் அவன் நடுவரிடத்தில் உங்களால் அதை கேட்கக் கூடுமா? என்று கேட்டான். அதற்கு அவர் “ஆம்” என்றார். 239 அப்பொழுது அவர், “சகோதரன் பெஸ்ட் அவர்களே, யேகோவாவின் மீட்பின் பெயர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு உபயோகிக்கப்பட்டதா? ‘உபயோகிக்கப்பட்டதா’ அல்லது ‘இல்லையா?’” என்று கேட்டார். 240 அது அதை தீர்த்து வைத்தது. எல்லாமே அவ்வளவுதான். எனக்குள்ளாக ஏதோ காரியம் உடல் முழுவதுமாக போய்க் கொண்டிருக்கிறதற்காக உணர்ந்தேன் என்பதை உங்களுக்குக் கூறுகிறேன். நானே அதைக்குறித்து ஒருபோதும் நினைத்ததே இல்லை. பாருங்கள். எனவே அப்பொழுது நான், “ஓ, என்னே, அவனால் பதிலளிக்க முடியாதே! அது அதனை பிணைக்கிறதே” என்று எண்ணிக் கொண்டேன். மேலும் அவர், “சரி, வேத பண்டிதர் பெஸ்ட் அவர்களே, நான்—நான் அதிர்ச்சியடைந்துள்ளேன்” என்றேன். அதற்கு அவன், “நான் அதற்கு பதிலளிப்பேன்” என்றான். 241 மேலும் அவர், “நீர் என்னுடைய சாதாரணமான எளிய கேள்விக்கே பதில் அளிக்க முடியவில்லை என்பதற்கான நான் அதிர்ச்சியடைகிறேன்” என்றார். அவன் அவ்வளவு சாதாரணமாக உணர்ச்சிவசப்படாமல் ஒரு வெள்ளிக்காயைப் போல இருந்தான். ஆயினும் அவன் எங்கே நின்று கொண்டிருக்கிறான் என்பதையும் அறிந்திருந்தான். எனவே அதன் பின்னர் அவன் அந்த வேத வார்த்தைகளோடு அங்கேயே உட்கார்ந்து விட்டான். பின்னர் இவர், “இன்னும் முப்பது நிமிடங்களை எடுத்துக்கொள், அதன்பின்னர் நான் பதிலளிப்பேன்” என்றார். 242 அதன்பின்னர் வயோதிப சகோதரன் பாஸ்வர்த் உட்கார்ந்து கொண்டு அந்த வேத வார்த்தைகளை எடுத்துக் கொண்டு அவனை அப்படியே இறுகக்கட்டி, அவனை அப்படிப்பட்ட ஒரு நிலையில் வைத்து அவனுடைய முகமே சிவந்து போக கிட்டத்தட்ட ஒரு தீக்குச்சியை அவன்மேல் உரசினால் எரியும் நிலைக்கு ஆகிவிட்டார். 243 அவன் அங்கிருந்து எழும்பி, கோபத்துடன் அந்த காகிதங்களை தரையில் வீசி எறிந்துவிட்டு, எங்கே ஏறிப்போய் ஒரு நல்ல கேப்பிளைட் (Campbellite) பிரிவினரின் பிரசங்கத்தை செய்தான். நான் ஒரு பாப்டிஸ்டு. எனவே அவர்கள் எதை விசுவாசிக்கிறார்கள் என்பதை நான் அறிந்திருந்தேன். அவன் ஒருபோதும்…அவன் உயிர்த்தெழுதலின் பேரில் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். “அதாவது, அழிவுள்ளது அழையாமையை தரித்துக் கொள்ளும்போது’ என்று கூறி அதன்பிறகே நமக்கு தெய்வீக சுகம் உண்டாயிருக்கும்” என்றான். ஓ! என்னே! நாம் அழிவில்லாதவர்களான பிறகு நமக்கு தெய்வீக சுகம் எதற்குத் தேவை? (“இந்த அழிவுள்ளது அழியாமையை தரித்துக்கொள்ளும் போது” அதாவது மரித்தோரின் உயிர்த்தெழுதலா)? லாசருவின் பேரில் இயேசுவானவர் செய்த அற்புதத்தையும்கூட அவன் சந்தேகித்தான். ஏனெனில் அவன், “லாசரு மீண்டும் மரித்துப்போனான். எனவே அது வெறுமனே ஒரு தற்காலிகமான காரியம்தான்” என்றான். பார்த்தீர்களா? 244 அவன் அந்தவிதமாக கூறிமுடித்த பின்னர், அவன், “தெய்வீக சுகமளிப்பவரை இங்கே கொண்டு வாருங்கள், நான் அவர் செய்வதைக் காணட்டுமே!” என்றான். 245 அப்பொழுது அவர்களுக்கு சற்று குழப்பம் உண்டானது. அப்பொழுது சகோதரன் பாஸ்வர்த், “நான் உம்மிடத்தில் கேட்ட ஒரு கேள்விக்குக்கூட சகோதரன் பெஸ்ட் நீர் பதிலளிக்காததால் நான் உம்மைக் குறித்து எதிர்பாராத அதிர்ச்சியடைகிறேன்” என்றார். 246 எனவே அப்பொழுது அவன் சினங்கொண்டு தன்னையே மறந்தவனாய், “அந்த தெய்வீக சுகமளிப்பவனை கொண்டு வாருங்கள், அவன் சுகமளிப்பதை நான் காணட்டுமே” என்றான். அதற்கு இவர், “சகோதரன் பெஸ்ட் ஜனங்கள் இரட்சிக்கப்படுவதில் உமக்கு நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு அவன், “நிச்சயமாக நம்பிக்கையுள்ளதே!” என்றான். பின்பு இவர், “அப்படியானால் நீர் ஒரு தெய்வீக இரட்சகர் என்று அழைக்கப்பட விரும்புகிறீரா?” என்று கேட்டார். அதற்கு அவன், “நிச்சயமாக அவ்வாறு நான் அழைக்கப்பட விரும்பவில்லையே” என்றான். 247 மேலும், “நீர் ஆத்துமாவின் இரட்சிப்பைக் குறித்து பிரசங்கிக்கும் காரணத்தால் அதுவும் உம்மை ஒரு தெய்விக இரட்சகராக ஆக்கிவிடாதே” என்றார். அதற்கு அவன், “ஆம் நிச்சயமாய் அவ்வாறு ஆக்காதே!” என்றான். 248 எனவே அவன், “அதுபோலவே சரீரத்திற்கான தெய்வீக சுகமளித்தலை சகோதரன் பிரான்ஹாம் பிரசங்கிப்பத்தினால் அது அவரை ஒரு தெய்வீக சுகமளிப்பவராக ஆக்கிவிடாது. அவர் தெய்வீக சுகமளிப்பவரல்ல. அவர் இயேசு கிறிஸ்துவினிடத்திற்கே ஜனங்களை சுட்டிக்காட்டுகிறார்” என்றான். 249 அதற்கும் அவர், “அவரை இங்கே கொண்டுவா. அவர் செய்வதை நான் காணட்டுமே! ஜனங்களை இன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு நான் நோக்கிப் பார்க்கட்டும். அப்பொழுது நான் அதை விசுவாசிப்பேனா அல்லது இல்லையா என்பதை நான் உங்களுக்கு சொல்லுவேன்” என்றார். 250 அப்பொழுது சகோதரன் பாஸ்வர்த், “சகோதரன் பெஸ்ட் அவர்களே, கல்வாரியில் சிலுவையை விட்டு இறங்கிவா, அப்பொழுது நாங்கள் உம்மை விசுவாசிப்போம் என்பது போன்ற இன்னொரு நிகழ்ச்சியாக இது தென்படுகிறதே” என்றார். புரிகின்றதா? 251 ஓ, அதன் பின்னர் அவன் உண்மையாகவே கோபமடைந்து விட்டான். எனவே அவன், “அவர் சுகமளிப்பதை நான் காணமட்டுமே! அவர் சுகமளிப்பதை நான் காணட்டுமே!” என்றான். அப்பொழுது நடுவர்களே அவனை உட்கார வைத்தனர். அவன் அங்கே நடந்து போனான். ஒரு பெந்தேகோஸ்தே பிரசங்கியார் அங்கே நின்று கொண்டிருந்தார். அப்பொழுது இவன் அவரை முகத்திலே அப்படியே அறைந்து கொண்டே மேடையினூடாகச் சென்றார். ஆகையினால் அவர்கள் அவனை அங்கேயே அப்பொழுது நிறுத்திவிட்டார்கள். (எனவே சகோதரன் பாஸ்வர்த், “இங்கே, இங்கே அது கூடாது, கூடாதே” என்றார்.) ஆகையினால் நடுவர்கள் அவனை உட்கார வைத்தனர். 252 ரேமண்ட ரிச்சி (Raymond Richey) என்பவர் எழும்பி நின்று, “தெற்கு பாப்டிஸ்டு கூட்டத்தின் நடத்தை இதுதானா?” என்று கேட்டுவிட்டார். பின்னர், “பாப்டிஸ்டு ஊழியக்காரர்களாகிய உங்களைத்தான், தெற்கு பாப்டிஸ்டு கூட்டம் இந்த மனிதனை இங்கு அனுப்பியுள்ளதா அல்லது அவராகவே இங்கு வந்தாரா?” என்று கேட்டார். அவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை. உடனே அவர், “நான் உங்களைத்தான் கேட்கிறேன்” என்றார். அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் அறிந்திருந்தார். 253 அதற்கு அவர்கள், “அவர் தானாகவே வந்தார்” என்றார்கள். காரணமென்னவெனில் பாப்டிஸ்டுகள் தெய்வீக சுகமளித்தலிலும் கூட விசுவாசம் கொண்டவர்கள் என்பதை நான் அறிவேன். ஆகையினால்தான் அப்பொழுது அவர்கள், “அவர் தானாகவே வந்தார்” என்றார். 254 ஆகவே இதுதான் அப்பொழுது நடந்தது. அப்பொழுது சகோதரன் பாஸ்வர்த், “சகோதரன் பிரான்ஹாம் கூட்டத்தில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியும். எனவே அவர் வந்து கூட்டத்தை முடித்து அனுப்ப விரும்பினால் நலமாயிருக்கும்” என்றார். அப்பொழுது ஹாவர்டோ, “நீர் அப்படியே அமைதியாய் உட்காரும்” என்றார். அதற்கு நான், “நான் அமைதியாகத்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்” என்றேன். 255 அப்பொழுது சரியாக அந்த நேரத்தில் ஏதோ ஒன்று சுற்றி வந்து சுற்றி சுழலத் துவங்கிற்று. அது கர்த்தருடைய தூதன் என்பதை நான் அறிந்து கொண்டேன். அப்பொழுது அவர், “எழும்பி நில்” என்றார். 256 சுமார் ஐந்நூறு ஜனங்கள் இவ்விதமாய் தங்களுடைய கரங்களை ஒன்றாக கோர்த்துக்கொண்டு இவ்விதமாக ஒரு திட்டுப் போலாக்கிக் கொள்ள நான் மேடைக்கு இறங்கி வந்தேன். 257 அப்பொழுது நான், “நண்பர்களே, நான் தெய்வீக சுகமளிப்பவன் அல்ல, நான் உங்களுடைய சகோதரன்” என்றேன். பின்னர் நான், “சகோதரன் பெஸ்ட் எந்தவித…இல்லை” என்றேன். இல்லை, நான், “சகோதரன் பெஸ்ட் அவர்களே, என்னுடைய சகோதரனே உமக்கு எவ்வித அவமதிப்பும் கிடையாது. உங்களுடைய திடநம்பிக்கைகளை பற்றிக் கொண்டிருப்பதில் உங்களுக்கு உரிமை இருப்பதுபோன்று எனக்கும் என்னுடைய திடநம்பிக்கைகளை பற்றிக் கொண்டிருப்பதில் அவ்வாறே உரிமை உண்டு” என்றேன். பின்பு, நான், “தொடர்ந்து நிச்சயமாகவே, சகோதரன் பாஸ்வர்த் அவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உம்முடைய திசையிலிருந்தும் உம்மால் நிரூபிக்க முடியவில்லை என்பதை நீர் காண்கிறீர். வேதத்தை நன்றாக வாசித்து இந்த காரியங்களை அறிந்தவர்களாலும்கூட அதைச் செய்ய முடியாதே” என்றேன். மேலும் நான், “ஜனங்கள் சுகமடைதலைப் பொறுத்த மட்டில் சகோதரன் பெஸ்ட் அவர்களே, நான் அவர்களை சுகப்படுத்த முடியாது. ஆனால் நான் ஒவ்வொரு இரவும் இங்கே இருக்கிறேன். ஆகையால் கர்த்தர் அற்புதங்களைச் செய்வதை நீர் காணவிரும்பினால், இங்கே வாரும். அவரே அதை ஒவ்வொரு இரவும் செய்கிறார்” என்றேன். 258 அதற்கு அவன், “நீர் யாரையாவது சுகப்படுத்துவதை நான் காண விரும்புகிறேன். நானே அவர்களை காணட்டும். நீர் அவர்களை உம்முடைய மனோவசியப்படுத்தும் வசியத்தினால் வசியப்படுத்தலாம். ஆனால் இங்கே இப்பொழுதிலிருந்து ஒரு வருடத்திற்கு நான் அதை காணவிரும்புகிறேன்” என்றான். அதற்கு நான், “சரி, சகோதரன் பெஸ்ட் அவர்களே, அவர்களை பரிசோதித்துப் பார்க்க உமக்கு உரிமை உண்டாயிற்றே” என்றேன். 259 அதற்கு அவன், “அதைப் போன்ற காரியத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் நீங்கள் மரத்துப்போன மண்டை ஓட்டு பரிசுத்த உருளைகளின் கூட்டமேயன்றி வேறொன்றுமில்லை. பாப்டிஸ்டுகள் அப்படிப்பட்ட எந்த அர்த்தமற்றவைகளையும் நம்புவதில்லை” என்றான். 260 அதற்கு சகோதரன் பாஸ்வர்த், “ஒரு நிமிடம் பொறும்” என்றார். பின்னர், “இந்த இரண்டு வார கூட்டங்களில் எத்தனை பேர் இங்கு இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அப்பொழுது முந்நூறு பேர்களுக்கும் அதிகமானவர்கள் எழும்பி நின்றனர். அப்பொழுது அவர், “இதற்கு என்ன சொல்லுவீர்கள்?” என்று கேட்டார். 261 அதற்கு அவன், “அவர்கள் பாப்டிஸ்டுகள் அல்ல” என்று கூறி விட்டான். மேலும், “யாரும் எதை வேண்டுமானாலும் சாட்சி பகர முடியும். ஆனால் அது சரியாக இருக்காதே” என்று கூறினான். 262 மேலும் அவர், “தேவனுடைய வார்த்தை அது சரியென்று கூறுகிறது. உன்னால் அதை எதிர்த்து நிற்கமுடியாது. ஜனங்களும் அதை சரியென்றே கூறுகின்றனர். எனவே உங்களால் அதை நிராகரித்து தள்ளிவிட முடியாது. எனவே அதைக்குறித்து நீர் என்ன செய்யப்போவதாக இருக்கிறீர்?” என்று கேட்டார். பாருங்கள், அது அந்தவிதமாக இருந்தது. 263 நான், “சகோதரன் பெஸ்ட், சத்திய எதுவோ அதை மட்டுமே நான் கூறுகிறேன். நான் உண்மையுள்ளவனாயிருந்தால், அந்த சத்தியத்தை ஆதரிக்க தேவன் கடமைபட்டிருக்கிறார்” என்றேன். தொடர்ந்து நான், “அவர் அவ்வாறு…அவர் சத்தியத்தை ஆதரிக்கவில்லையென்றால் அப்பொழுது அவர் தேவனல்லவே” என்றேன். மேலும் நான், “நான் ஜனங்களை சுகமாக்குகிறதில்லை, நான் இந்த காரியங்களை காணும்படியான ஒரு வரத்தோடும் பிறந்தேன்” என்றேன். அதுமட்டுமின்றி நான், “நான் தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். ஆனால் என்னுடைய இருதயத்தின் திட நம்பிக்கையை நிறைவேற்றுவதைக் காட்டிலும் என்னால் வேறெதுவும் செய்ய இயலாது” என்றேன். “மேலும் நான் இயேசு கிறிஸ்து மரித்தோலிருந்து எழுந்துவிட்டார் என்று நான் விசுவாசிக்கிறேன். எனவே அந்த ஆவியே வந்து, தரிசனங்கள் முதலியவற்றை காண்பிக்கிறது. ஆனால் அது குறித்து கேள்வி உண்டாயிருக்குமாயின் இங்கு வந்து அதை கண்டறியுங்கள்” என்றேன். பின்பு நான், “அவ்வளவுதான்” என்றேன். ஆனால் நான், “எனக்காக, நான் எனக்கென்று சொந்தமாக எதையுமே செய்ய முடியாது” என்றும் கூறினேன். “நான் சத்தியத்தை கூறுவேனாயானால், அது சத்தியம் என்று சாட்சி பகர தேவன் எனக்கு கடமைப்பட்டவராயிருக்கிறார்” என்றேன். 264 சரியாக அந்த நேரத்தில் ஏதோ ஒன்று, “உஷ்ஷ்ஷ்ஷ்!” என்று சென்றது. இதோ அவர் வருகிறார், கீழே இறங்கி வருகிறார். அமெரிக்க புகைப்படக்காரர்களின் சங்கமானது டெக்ஸாஸ், ஹுஸ்டனில் உள்ள நிழற்படம் எடுக்கும் தொழிலகத்தினரைக் கொண்டு பெரிய நிழற்பட கருவிகளை (Camera) அங்கே வைத்திருந்தனர். (ஆனால் அவர்கள் புகைப்படங்களை எடுக்க தடைசெய்யப்பட்டிருந்தனர்) ஆயினும் அவர்கள் புகைப்படமெடுத்தனர். 265 அவர்கள் திரு.பெஸ்ட் அவர்களின் புகைப்படங்களை எடுக்க அங்கிருந்தபோது, நான் அங்கு செல்வதற்கு முன்பாக, அவன் “ஒரு நிமிடம் பொறுங்கள். நான் இங்கு ஆறுவிதமான மாயத்தோற்ற புகைப்படங்களை எடுக்க வந்துள்ளேன்” என்றான். பின்னர் அவன், “இங்கே இப்பொழுது என்னை புகைப்பட மெடுங்கள்” என்றான். அடுத்தபடியாக அவன் அந்த வயோதிப பரிசுத்த மனிதனுடைய மூக்கின் மீது இந்தவிதமாக தன்னுடைய விரலை வைத்துக்கொண்டு, “இப்பொழுது என்னுடைய புகைப்படத்தை எடுங்கள்” என்றான். அப்பொழுது அவர்கள் எடுத்தனர். அதன் பின்னர் அவர் தன்னுடைய கைமுட்டியை எடுத்து அதை அவர்மீது வைத்து, “இப்பொழுது என்னுடைய புகைப்படத்தை எடுங்கள்” என்றான். அப்பொழுதும் அவர்கள் அதை அந்தவிதமாகவே எடுத்தனர். அவன் அந்தவிதமாக செய்தபின்பு தன்னுடைய புகைப்படத்திற்காக தனியே நின்றான். பின்பு அவன், “நீங்கள் இதை என்னுடைய பத்திரிக்கையில் இந்தவிதமாக காண்பீர்கள்” என்றார். 266 சகோதரன் பாஸ்வர்த் அங்கே நின்றிருந்தபோதும், ஒரு காரியத்தையும் கூறவேயில்லை. அதன்பின்னரே அவர்கள் இதனுடைய புகைப்படத்தை எடுத்தனர். 267 அன்றிரவு அவர்கள் வீட்டிற்கு திரும்பும் வழியில் (கத்தோலிக்க பையன் அதை எடுத்தான்) அவன் மற்றொரு பையனிடத்தில் இதை கூறினான். அதாவது, “நீ அதைக் குறித்து என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான். 268 அதற்கு அவன், “நான் அவரை குற்றம் கூறினேன் என்பதை அறிவேன். அந்த கழுத்துவீக்கம் தொண்டையை விட்டு நீங்கினபோது, அவர் அவனை மனோவாசியம் செய்தார் என்றே நான் கூறினேன்” என்றான். மேலும் அவன், “நான் அதன்பேரில் தவறாக கூறியிருக்கக்கூடும்” என்றான். பின்னர், “அந்த புகைப்படத்தைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான். அதற்கு அவன், “எனக்கு தெரியாது” என்று கூறிவிட்டான். 269 அவர்கள் அதை திராவகத்தில் போட்டனர். இதோ இருக்கிறது அவருடைய புகைப்படம். உனக்கு தேவையென்றால் நீ அவரை கேட்கலாம். அவர்கள் வீட்டிற்குச் சென்றனர். அப்பொழுது அங்கே உட்கார்ந்து ஒரு சிகரெட்டை புகைத்தான். பின்பு உள்ளே சென்று சகோதரன் பாஸ்வர்த் அவர்களின் நிழற்படம் ஒன்றை வெளியே இழுத்தான். அது நிழற்படமாக இருந்தது. பிறகு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என இழுத்தபோது அவைகள் யாவுமே வெறுமையாயிருந்தது. தேவன் அங்கு நின்று கொண்டிருந்த தம்முடைய பரிசுத்தமாக்கப்பட்ட வயோதிப மனிதனை அந்த மாய்மாலக்காரன் அவருடைய மூக்கில் அல்லது கையில், இந்தவிதமாக அவருடைய மூக்கிற்கு கீழே கைமுட்டியினால் தாக்குவதைப் போன்ற புகைப்படத்தை எடுக்க அனுமதிக்கவில்லை. அவர் அதை அனுமதிக்கவே மாட்டார். 270 அவர்கள் அடுத்த ஒன்றை வெளியே இழுத்தனர். அது இதோ இருக்கிறது. அன்றிரவு அந்த மனிதனுக்கு மாரடைப்பு உண்டாயிருந்தது என்று அவர்கள் கூறினர். 271 அவர்கள் இந்த நிழற்படத்தை வாஷிங்டன் D.C. க்கு அனுப்பினர். அது தனி பிரசுர பதிப்புரிமை பெறப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. 272 கைவிரல் ரேகை மற்றும் தஸ்தாவேஜுகள் முதலியனவற்றை பரிசோதிக்கும் துப்பறியும் புலனாய்வு அரசியல் துறை அரங்க அமைப்பின் தலைவர் ஜார்ஜ் ஜே. லேஸி (George J. Lacy) என்பவர் உலகம் முழுவதிலும் உள்ள மகத்தானவர்களில் ஒருவராவார். இவரிடத்தில் அது கொண்டுவரப்பட்டு, பரிசோதனை செய்யும் நிழற்படக்கருவி, ஒளிகள் போன்றவற்றின் அருகில் இரண்டு நாட்களாக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த பிற்பகல் நாங்கள் அங்கே வந்தபோது, அவர், “சங்கை பிரான்ஹாம் அவர்களே, நானும்கூட உங்களை குறை கூறுபவனாகவே இருந்து வந்தேன்” என்றார். மேலும் அவர், “யாரோ ஒருவர் அந்த ஒளியையும், அதைப் போன்ற காரியங்களையும் கண்டதாக கூறும் போது நானும் அது மனோதத்துவம் என்று கூறிவிட்டேன்” என்றார். அவர் தொடர்ந்து, “உங்களுக்கே தெரியும், அந்த பழைய மாய்மாலக்காரன் இவ்விதமாய் கூறுவதுண்ட” (அவர் அவிசுவாசிகளைத்தான் குறிப்பிட்டார்) “‘கிறிஸ்துவானவர், பரிசுத்தவான்கள் முதலானோருடைய தலைகளுக்கு மேலாக படங்களில் காணப்பட்ட ஒளிவட்டம் உள்ளதே’ என்று கூறும்போது அவன், ‘அது வெறுமனே மனோதத்துவமே’” என்பான். மேலும், “சங்கை பிரான்ஹாம் அவர்களே, இந்த புகைப்பட கருவியின் இயந்திர கண்ணானது மனோதத்துவத்தை படமெடுக்காதே! இந்த ஒளியானது கண்ணாடி வில்லையின் மேல் அல்லது அந்த நிழற்படத்தின் மேல் விழுந்திருக்க வேண்டும். அதோ அது இருக்கிறது” என்றார். மேலும் அவர்…கூறினார்… 273 நான் அதை அவர்களிடத்தில் சமர்ப்பித்தேன். அப்பொழுது அவர், “ஓ, திருவாளரே, அதனுடைய மதிப்பு என்னவென்று உமக்கு தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நான், “சகோதரனே அது எனக்கல்ல, எனக்கல்ல” என்றேன். எனவே அவர்…கூறினார்… 274 “உண்மையிலேயே நீர் உயிரோடு இருந்து கொண்டிருக்கையில் அது ஒருபோதும் எந்த விளைவையும் உண்டாக்காது. ஆனால் என்றோ ஓர்நாள் நாகரீகம் தொடர்ந்து செல்லுமாயின், கிறிஸ்தவ மார்க்கமும் அப்படியே தரித்திருக்குமாயின், அப்பொழுது இதைக் குறித்த ஏதோ ஒரு காரியம் சம்பவிக்கும்” என்றார். 275 எனவே நண்பர்களே, இன்றிரவு இந்த பூமியின் மேல் இதுவே நம்முடைய கடைசி கூட்டமாயிருக்குமானால், நீங்களும் நானும் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னத்திலிருக்கிறோம். என்னுடைய சாட்சி உண்மையாயிருக்கிறது. அநேக, அநேக காரியங்கள், அதை எழுதவேண்டுமானால் எத்தனையோ நூல் தொகுதிகளாக ஆகிவிடும். ஆனால் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 276 இந்த புகைப்படமில்லாமல் நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறபோது தானாகவே அந்த ஒளி வந்து சுற்றி நின்றதைக் கண்டவர்கள் இங்கே உண்மையாகவே எத்தனை பேர்கள் இருக்கிறீர்கள்? இக்கட்டிடத்தில் உள்ளவர்களே, அதை எப்போதாவது கண்டிருக்கிற யாராவது இங்கிருந்தால் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். சுமார் எட்டு இல்லை பத்து கரங்கள் இங்கே உயர்த்தப்பட்டிருப்பதை பாருங்கள். 277 நீங்களோ, “அவர்கள் அதை பார்த்திருக்கக்கூடுமா, நான் அதை பார்க்கவில்லையே?” எனலாம். ஆம் ஐயா. 278 வானசாஸ்திரிகளை பின்தொடர்ந்து அந்த—அந்த நட்சத்திரமானது ஒவ்வொரு வானிலை ஆராய்ச்சி நிலையத்தையும் கடந்துதான் சென்றது. ஆனாலும் அவர்களைத் தவிர வேறெவரும் அதை காணவில்லை. அவர்கள் மட்டுமே அதை கண்டனர். 279 எலியா அங்கே நின்றுகொண்டு அந்த எல்லா அக்கினி மயமான இரதங்களையும் மற்ற காரியங்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் கேயாசியோ சுற்றும் முற்றும் பார்த்தும் அவைகளை எங்கேயும் காணமுடியவில்லையே. அப்பொழுது எலியா கேயாசியின் கண்களை திறக்கும்படி தேவனிடம் வேண்டியபோது, தேவன் அவைகளைக் காணும்படி அவனுடைய கண்களைத் திறந்தார். அதன் பின்னரே அவன் அவைகளைக் கண்டான். பாருங்கள். ஆனால் அவன் ஒரு நல்ல பையனாக அங்கே நின்று கொண்டு சுற்றுமுற்றுமாய் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். ஆனாலும் அவனால் அதை காணமுடியவில்லையே. நிச்சயமாக சிலரே அதை காணும்படியாகவும், சிலர் அதை காணமுடியாதபடியாகவும் அது கொடுக்கப்பட்டிருக்கிறது. அது உண்மையே. 280 ஆனால் இப்பொழுது நீங்கள் அதை ஒருபோதும் காணாதவர்களாயிருந்தால் அதை ஒருபோதும் காணாதவர்களானால், நீங்கள் அதை உங்களுடைய இயற்கையான கண்களினால் கண்டிருந்து, புகைப்படத்தில் அதை ஒருபோதும் காணாதவர்களாயிருந்தால், இயற்கையான கண்களினால் அதை கண்டவர்கள், உங்களைக் காட்டிலும் அதை புகைப்படத்தில் காண்கிறவர்களுக்கே ஒரு மகத்தான நிரூபணம் உண்டாயிருக்கிறது. காரணம் நீங்கள் உங்களுடைய இயற்கையான கண்களினால் தவறாக கண்டிருக்கக்கூடும். அது ஒரு பொய் தோற்றமாயிருந்திருக்கலாம். அதுசரிதானே? ஆனால் அது ஒரு கண் பார்வையின் பொய் தோற்றமல்ல. அது உண்மையாயிருக்கிறது. அது உண்மைதான் என்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபிக்கிறது. எனவே கர்த்தராகிய இயேசு இதை செய்திருக்கிறார். நீங்களோ, “அப்படியானால் சகோதரன் பிரான்ஹாம் அது என்னவென்று நீர் நினைக்கிறீர்?” என்று கேட்கலாம். 281 இது இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து பாலஸ்தீனாவிற்கு வழிநடத்தின அதே அக்கினி ஸ்தம்பம் என்றே நான் விசுவாசிக்கிறேன். இது சிறைச்சாலையினுள் வந்து, பரிசுத்த பேதுருவின் அருகில் வந்து, அவனைத் தொட்டு, அவனுக்கு முன் சென்று கதவைத் திறந்து அவனை வெளியே வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அதே ஒளியின் தூதன் என்றே நான் விசுவாசிக்கிறேன். அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்றே நான் விசுவாசிக்கிறேன். ஆமேன்! நேற்று இருந்த அவரே இன்றைக்கும் அதே இயேசு கிறிஸ்துவாகவே இருக்கிறார். அவர் என்றென்றைக்கும் அதே மாறாத இயேசுவாகவே இருப்பார். 282 நான் அதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கையில், அந்த புகைப்படத்திலிருக்கின்ற அதே ஒளி…இப்பொழுது நான் நின்று கொண்டிருக்கின்ற இடத்திலிருந்து சுமார் இரண்டு அடி தூரத்திற்கும் அருகில் இருக்கிறது. அது உண்மை. நான் என்னுடைய—என்னுடைய கண்களினால் அதை காணமுடியவில்லை. ஆனால் அது இங்கே நின்று கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். இப்பொழுது அது என்னுடைய உட்புறத்தில் அமர்ந்திருக்கிறது என்பதை நான் அறிவேன். ஓ! சர்வவல்லமையுள்ள தேவனின் வல்லமை பற்றிப்பிடிக்கிறதையும் காரியங்கள் எப்படி வித்தியாசமாய் காணப்படுகின்றன என்ற வித்தியாசத்தையும் மட்டுமே உங்களால் அறிந்து கொள்ளக்கூடுமானால் நலமாயிருக்குமே! 283 அது எவருக்கும் ஒரு அறைகூவலாகவே (Challenge) இருக்கிறது. நான் எந்த வியாதியஸ்தருக்காகவும் ஜெபிக்கப் போவதில்லை. நான் ஒரு ஒப்புக்கொடுத்தலை செய்யப் போகிறேன். ஏனென்றால் ஜனங்களின் மேல் தரிசனங்கள் தொங்கிக் கொண்டிருக்கிறன. ஹு—ஹு. தேவன் அதை அறிந்திருக்கிறார். நான் ஜெப வரிசியை அழைக்கப் போவதில்லை. நான் உங்களை அங்கேயே உட்கார்ந்திருக்கும்படி அப்படியே விட்டுவிட்டுப் போகிறேன். உங்களில் எத்தனை பேர் ஜெப அட்டை வைத்திராமல் இருக்கிறீர்கள்? ஜெப அட்டை வைத்திராதவர், ஜெப அட்டை வைத்திராமலிருக்கிற உங்களுடைய கர்த்தை நாங்கள் காணட்டும். 284 இங்கே உட்கார்ந்திருக்கிற கறுத்த சகோதரியே, உம்முடைய கரம் உயர்த்தப்பட்டிருக்கிறதை நான் காண்கிறேன். அது சரிதானே? நான் உங்களை தனியே காட்டும்படியாக அப்படியே ஒரு நிமிடம் எழும்பி நில்லுங்கள். பரிசுத்த ஆவியானவர் என்ன கூறுவார் என்பதை நான் அறியேன். ஆனால் நீங்களோ மகிழ்ச்சியோடும், உத்தமத்தோடும் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடத்தில் ஜெப அட்டை இல்லையா? சர்வ வல்லமயுள்ள தேவன் உங்களுடைய தொல்லை என்னவென்பதை எனக்கு வெளிப்படுத்துவாரானால்…நான் ஒரு துவக்கத்திற்காக இதை கூறிக்கொண்டிருக்கிறேன். வெறுமனே துவங்குவதற்காகவே. நீங்கள் என்னை…விசுவாசிக்கிறீர்களா? ஒன்றுமில்லை…என்னைக் குறித்த நன்மையான காரியம் ஒன்றுமேயில்லை என்பதை நீங்கள் அறீவீர்கள். நீங்கள் ஒரு திருமணமான ஸ்திரீயாயிருப்பீர்களேயானால், நான் உங்களுடைய கணவனைக் காட்டிலும் வித்தியாசமானவன் அல்ல. நானும் வெறுமனே அவரைப் போலவே ஒரு மனிதன். ஆனால் இயேசு கிறிஸ்துவோ தேவனுடைய குமாரனாயிருக்கிறார். இந்த காரியங்களை ரூபகாரப்படுத்தவே அவர் தம்முடைய ஆவியை அனுப்பினார். 285 உங்களோடுள்ள கோளாறு என்னவென்பதை தேவன் எனக்கு கூறுவாரானால் (எனக்கு உங்களோடு தொடர்பு கொள்ள எனக்கு எந்த ஒரு வழியுமே கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள்) நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிப்பீர்களா? [அந்த சகோதரி விளக்கிக் கூறுகிறாள்—ஆசி.] தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அப்படியானால் உங்களுடைய உயர் இரத்த அழுத்தம் உங்களை விட்டுப் போய்விட்டது. அதுதான் உங்களுக்கு இருந்தது. அது சரிதானே? அப்படியானால் அமருங்கள். 286 நீங்கள் அதை வெறுமனே ஒரு முறை விசுவாசியுங்களேன்! நான் அதை விசுவாசிக்கும்படி எவருக்கும் சவாலிடுகிறேன். 287 இங்கே பாருங்கள். நான் உங்களுக்கு ஒரு காரியத்தை கூறட்டும். மார்த்தாள், கர்த்தராகிய இயேசுவண்டை வந்தாள். அப்பொழுது அந்த வரம் கிரியை செய்யாமலிருந்திருக்கலாம்…ஆனால் அவர் என்ன செய்யப்போவதாக இருந்தார் என்பதை பிதாவானவர் அவருக்கு ஏற்கனவே காண்பித்திருந்தார். அது ஒருபோதும் கிரியை செய்திருக்காது. ஆனால் அவள், “கர்த்தாவே, நான்.…நீர் இங்கே இருந்தீரானால் என்னுடைய சகோதரன் மரித்திருக்கமாட்டான்” என்றாள். மேலும் அவள் “இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை தேவன் உமக்கு தந்தருளுவா ரென்று அறிந்திருக்கிறேன்” என்றாள். 288 அவர், “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா?” என்றார். 289 அவள் என்ன கூறினாள் என்பதை கவனியுங்கள். அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, நீர் கூறின எல்லா காரியங்களும் சத்தியம் என்று நான் விசுவாசிக்கிரேன். நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றாள். அதுவே அவளுடைய தாழ்மையான அணுகுமுறை. நீங்கள் வித்தியாசத்தை உணருகிறீர்கள், இல்லையா அம்மாளே? ஆம், அது உண்மை. 290 அங்கேயிருக்கிற அந்த சிறுபெண், அங்கே உங்களுக்கு பக்கத்தில் அமர்ந்துள்ள அவளும்கூட மூட்டு வலியினாலும், ஸ்திரீகளுக்குள்ள தொல்லையினாலும் அவதியுறுகிறாள். அம்மாளே அது சரிதானே? சிவப்பு ஆடை அணிந்துள்ள அந்த சிறு பெண்ணே அப்படியே ஒரு நிமிடம் எழுந்து நில். நீங்கள் மிகவும் நெருக்கமாக இருந்த தினால் தரிசனம் உமக்கு வந்திருக்கிறது. மூட்டு வியாதி, ஸ்திரீகளுக்குள்ள தொல்லை. அது சரிதானே. இதோ இருக்கிறது உங்கள் ஜீவியத்திலுள்ள ஏதோ ஒரு காரியம் (உம்மை நேராக பார்க்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது) உன்னுடைய ஜீவியத்தின் மேல் உமக்கு அதிக கவலை இருக்கிறது. அதிக தொல்லையும் இருக்கிறது. அந்த தொல்லை உங்கள் அன்பான ஒருவரைக் குறித்ததேயாகும். அது உங்களுடைய கணவனாகும். அவர் ஒரு குடிகாரர். அவர் சபைக்கு போக மாட்டார். இது உண்மையானால், உங்களுடைய கரத்தை உயர்த்திக்காட்டுங்கள். அம்மாளே, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நீங்கள் வீட்டிற்குச் சென்று உங்களுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் சுகமாக்கப்பட்டீர்கள். உங்களைச் சுற்றிலும் வெளிச்சம் பிரகாசிக்கிறது. 291 அங்கே அவருக்கு அடுத்தபடியாக ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஐயா, உங்களைத்தான், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரன், “ஆம், நான் விசுவாசிக்கிறேன்” என்கிறார்.—ஆசி.] உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? [“ஆம் ஐயா.”] நீர் உம்முடைய புலன்களில் ஒன்றை இழந்துவிட்டிருக்கிறீர். அது முகர்வுணர்வாயிருக்கிறது. அது சரிதானே? அது சரியென்றால், உங்களுடைய கரத்தை அசைத்துக் காட்டுங்கள். [“அது உண்மை.”] உங்களுடைய கரத்தை உங்கள் வாயண்டை இந்தவிதமாக எடுத்து வைத்து, [“கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். [“கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்”] தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது போகலாம். நீங்கள் உங்களுடைய சுகத்தை பெற்றுக்கொள்வீர்கள். 292 தேவனில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். அங்கே பின்னாக இருக்கிறவர்களே, அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பயபக்தியாய் இருங்கள்! 293 அங்கே பின்னாக மூலையில் ஒரு அம்மாள் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அந்த ஒளியானது அவள் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். நான் அதைக் குறித்து சொல்லக்கூடிய ஒரே வழி அதுவே. அந்த ஒளி தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஒளி இங்கே அந்த பெண்மணியின் மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது. அது என்னவென்பதை என்னால் ஒரு நிமிடத்தில் காணக்கூடுமானால் நலமாயிருக்கும். அது வெளியாகும்…அந்த ஸ்திரீ இருதயக்கோளாறினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறாள். அவள் என்னையே நேராக நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். 294 அவளுக்கு அடுத்தபடியாக, அவளுடைய கணவர் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவளுடைய கணவருக்கு ஏதோ சுகவீனம் ஏற்பட்டிருக்கிறது. அவர் சுகவினமாகவே, நிலைகுலைந்துபோய் சுகவீனமாக இருந்து வருகிறார். ஐயா, அது சரிதானே? அது உண்மையானால், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அது உண்மை. அங்கே கழுத்துப்பட்டையோடு உள்ள அம்மாளே உங்களைத்தான். திருவாளரே, அது உண்மைதானே? நீர் இன்றைக்கு ஒருவிதமாக நிலை குலைந்தவராக இருந்து வருகிறீர், அல்லவா? உமக்கு உம்முடைய வயிறு நிலைகுலைந்துள்ளது. அது உண்மை. 295 நீங்கள் இருவரும், நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா? ஐயா, உங்களுக்கும்தான், நான் உங்களுக்கு சொல்லுகிறேன். உம்முடைய கரத்தை நீர் உயர்த்தியிருப்பதை நான் காண்கிறேன். உங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. நீர் சுருட்டுகளை புகைக்கிறீர். நீர் அதை செய்யக்கூடாது. அதுவே உம்மை சுகவீனமாக்குகிறது. அது சரிதானே? அது உண்மையென்றால் உங்களுடைய கரத்தை இந்தவிதமாய் அசைத்துக் காட்டுங்கள். அதுதான் உங்களை நிலையை குலையச் செய்து கொண்டிருக்கிறது, அது உங்களுடைய நரம்புகளை பாதிக்கிறது. அந்த அசுத்தமான காரியத்தை தூக்கியெறிந்து விடுங்கள், அதை இனி ஒருபோதும் செய்யவே செய்யாதீர்கள். நீர் அதை மேற்கொள்வீரானால் அப்பொழுது அது சரியாகிவிடும். உம்முடைய மனைவியின் இருதயக்கோளாறும் அவளை விட்டு நீங்கிவிடும். நீர் அதை விசுவாசிக்கிறீரா? அது சரிதானே? என்னால் இங்கிருந்து உம்மை காணமுடியவில்லை. அதையும் நீர் அறிவீர். ஆனால் நீர் உம்முடைய.…முன் சட்டைப்பையில் சுருட்டுகளை வைத்துக் கொண்டிருக்கிறீர். அது உண்மை. எனவே அந்தப் பொருட்களையும் வெளியே எடுத்து வைத்துவிட்டு, உங்களுடைய கரத்தை உங்களுடைய மனைவியின் மீது வைத்து, இந்தவிதமான காரியத்தோடிருந்த உங்களுடைய தொடர்பு முடிந்து விட்டது என்று தேவனிடம் சொல்லுங்கள். பின்பு நீங்கள் சுகத்தோடு வீட்டிற்கு செல்வீர்கள். நீரும் உம்முடைய மனைவியும் சுகமடைவீர்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக! உங்களுடைய முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 296 இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற இந்த சிறு அம்மாள் என்னையே இங்கு நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறாள். நீர்…அங்கே அந்த முன்வரிசையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர். ஒரு சிறு அம்மாள்…அங்கே உட்கார்ந்து கொண்டு என்னையே நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறாள். உங்களிடத்தில்…இல்லை…இங்கே உங்களிடத்தில் ஒரு ஜெப அட்டை இருக்கிறதா அம்மாளே? நீங்கள் எந்த ஜெப அட்டையும் வைத்திருக்கவில்லையா? நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவால் உங்களை குணப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 297 அவளுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் நீர் இதைக் குறித்து என்ன நினைக்கிறீர்? அம்மாளே, உம்மிடத்தில் ஜெப அட்டை இருக்கிறதா? உம்மிடத்தில் இல்லையா? நீங்களும்கூட சுகமடைய வேண்டுமென்று விரும்புகிறீர்களா? வடிற்றுக் கோளாறு நீங்கி வழக்கமாக நீங்கள் சாப்பிடுவது போன்று, சாப்பிட நீங்கள் விரும்பவில்லையா? இப்பொழுது இயேசு உங்களை சுகமாக்குகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கிவிட்டார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களேயானால், எழும்பி நில்லுங்கள். உங்களுக்கு வயிற்றில் சீழ்புண் உண்டாகியிருந்தது இல்லையா? அது நரம்புத்தளர்ச்சியின் காரணமாகவே ஏற்பட்டிருக்கிறது. நீண்ட காலமாகவே உங்களுக்கு நரம்புக் கோளாறு இருந்து வருகிறது. விசேஷமாக அமிலநீர் மற்ற காரியங்களும் அல்லது அமிலம் இரைப்பை நான் குறிப்பிடுகிறேன். அதுவே நீங்கள் ஏப்பம் விடும்போது உங்களுடைய உணவை மீண்டும் உங்களுடைய வாய்க்கு கொண்டு வந்து பற்களை கூச்சமுடையதாக்குகிறது. அது உண்மை. ஆம், ஐயா, அது இரப்பை இரணப்புண். அது உங்களுடைய வயிற்றுக்கு அடியில் இருந்து கொண்டிருந்தது. விசேஷமாக முறுகலாக சுடப்பட்ட ரொட்டியை வெண்ணெயோடு சேர்த்து புசித்தபிறகு சில சமயங்களில் அது எரிச்சலடைகிறது. அது சரியா? நான் உங்களுடைய சிந்தையை வசீகரித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் பிழையற்றவராயிருக்கிறார். இப்பொழுது நீங்கள் சுகமாக்கப்பட்டீர்கள். சுகத்தோடு வீட்டிற்குச் செல்லுங்கள். 298 இந்த திசையில் அங்கே பின்னால் இருக்கும் உங்களுக்கு என்ன? அங்கேயிருக்கின்ற உங்களில் சிலர் ஜெப அட்டை இல்லாமல் இருக்கிறீர்கள். எனவே உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சிலர் ஜெப அட்டைகளில்லாமல் இருக்கிறார்கள். சரி, பயபக்தியாயிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். மாடியின் முகப்பில் இருக்கிற உங்களைக் குறித்து என்ன? தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். 299 இதை நானே எனக்கு செய்து கொள்ள முடியாது. இது அவருடைய உயரிய ஒப்பற்ற கிருபையாய் இருக்கிறது. நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? அவர் எனக்கு காண்பிக்கிறபடியால் மட்டுமே என்னால் கூறமுடிகின்றது. உங்களுடைய விசுவாசம்…உங்களுடைய விசுவாசத்தை குலுக்கும்படியாய் நான் அதை கூறி, பின்னர் அவர் என்னை எந்த வழியாக நடத்துவார் என்பதை பார்ப்பேன். இது உங்களுடைய சகோதரனல்ல என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா? நீங்கள் அவருடைய சமூகத்தில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். இதை செய்து கொண்டிருக்கிறது நானல்ல, உங்களுடைய விசுவாசமே அதை கிரியை செய்கிறதாயிருக்கிறது. நான் அதை கிரியைக்குள்ளாக முடியாது. உங்களுடைய விசுவாசமே அதை செய்கிறதாயிருக்கிறது. அதை கிரியைக்குள்ளாக்க எனக்கு எந்த வழியுமில்லை. ஒரு நிமிடம். 300 இந்த மூலையில், அங்கே ஒரு கறுத்த மனிதன், மூத்தவராய் கண் கண்ணாடி அணிந்து கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். ஐயா, உங்களிடத்தில் ஒரு ஜெப அட்டை இருக்கிறதா? ஒரு நிமிடம் அப்படியே எழும்பி நில்லுங்கள். நீங்கள் என்னை தேவனுடைய ஊழியக்காரன் என்று உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் வேறு யாரைக் குறித்தோ நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், இல்லையா? அது சரியென்றால் உங்களுடைய கரத்தை அசைத்துக் காட்டுங்கள். நான் உங்களுடைய சகோதரன் என்ற காரணத்திற்காக அல்ல. இப்பொழுது உங்களிடத்தில் ஒரு ஜெப அட்டை இல்லை. எனவே ஜெப வரிசையில் நீங்கள் வருவதற்கு உங்களுக்கு எந்த ஒரு வழியுமில்லை, ஏனென்றால் உங்களிடத்தில் ஒரு ஜெப அட்டை இல்லை. இப்பொழுது உங்களில் யாரிடத்திலாவது ஜெப அட்டை இருந்தால், நீங்களும் எழும்பி நிற்க வேண்டாம். ஏனென்றால் நீங்கள் ஜெப வரிசையில் வந்து நிற்க உங்களுக்கு ஒரு தருணம் கிடைக்கும். பாருங்கள். 301 ஆனால் அந்த ஒளியானது அவருக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். அது இன்னமும் ஒரு தரிசனமாய் வெளிப்படவில்லை. சகோதரன், நான் உங்களை சுகப்படுத்த முடியாது, என்னால் முடியாது. தேவனால் மட்டுமே அதைச் செய்ய முடியும். ஆனால் உங்களுடைய…உங்களுடைய உங்களிடம் விசுவாசமிருக்கிறது. நீங்கள் விசுவாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே ஏதோ—ஏதோக்காரியம் இருக்கின்றது. அதுவே—அதுவே அதற்கு ஏதோ வழியை உண்டு பண்ணியிருக்கிறது. 302 சர்வ வல்லமையுள்ள தேவன் இந்த மனிதனுக்கு அவனுடைய தொல்லை என்னவென்பதைக் கூறினால், எஞ்சியுள்ள யாவரும் உங்களுடைய சுகத்தை ஏற்றுக்கொள்வீர்களா? எனக்கு பத்து, பதினைந்து அடிகளுக்கு அப்பால் ஒரு மனிதன் பரிபூரணமாய் நின்று கொண்டிருக்கிறார். நான் என்னுடைய ஜீவியத்தில் அவரை கண்டதேயில்லை. அவர் அங்கே ஒரு சாதாரண மனிதனாக நின்று கொண்டிருக்கிறார். சர்வ வல்லமையுள்ள தேவன் அந்த மனிதனோடுள்ள கோளாறு என்னவென்பதை வெளிப்படுத்துவாரானால், நீங்கள் ஒவ்வொருவரும் இங்கேயிருந்து சுகமடைந்தவர்களாக வெளியே நடந்து செல்ல வேண்டும். இதற்கு மேல் தேவனால் என்ன செய்ய முடியும்? அது சரிதானே? 303 ஐயா, உங்களிடத்தில் எந்தவித கோளாறும் இல்லை. நீர் பெலவீனமாய் இருக்கிறீர், இரவு நேரங்களில் சில நேரங்கள் எழுந்துகொள்ளுதல், சிநீர்பை கோளாறு போன்றவைகளே உள்ளன. ஆனாலும் அதுவல்ல உம்முடைய தொல்லை. உமக்குள்ள தொல்லை உம்முடைய மகனைக் குறித்ததாயிருக்கிறது. உங்களுடைய மைந்தன் ஏதோ ஒருவிதமான அரசாங்க நிறுவனத்தில் இருக்கிறார். அவன் இரண்டு முரண்பட்ட இயல்புகளை கொண்டவனாயிருக்கிறான். அது சரிதானே? அது சரி யென்றால் உங்களுடைய கரத்தை அசைத்துக் காட்டுங்கள். அது முற்றிலும் சரியே. 304 இப்பொழுது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இங்கே நின்று கொண்டிருக்கிறார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? நாம் எழுந்து நின்று துதியை செலுத்தி நம்முடைய சுகத்தை பெற்றுக்கொள்வோமாக. 305 சர்வ வல்லமையுள்ள தேவனே, ஜீவனின் காரணரே, எல்லா நன்மையான ஈவையும் அளிப்பவரே, நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத அதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாய் இங்கே இருக்கிறீர். 306 சாத்தானே, நீ நீண்ட காலமாக இந்த ஜனங்களிடத்தில் பொய்யுரைத்து ஏமாற்றியிருக்கிறாய். அவர்களை விட்டு வெளியே வா! அக்கினி ஸ்தம்பத்தின் ரூபத்தில் இப்பொழுது இங்கிருக்கிற ஜீவனுள்ள தேவனுடைய சமூகத்தினால் இந்த ஜனங்களை விட்டுச் செல்லும்படி நான் உனக்கு கட்டளையிடுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களை விட்டு வெளியே வா. 307 நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய கரங்களை உயர்த்தி, தேவனை ஸ்தோத்தரித்து, ஒவ்வொருவரும் உங்களுடைய சுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். [சபையோர் தேவனை ஸ்தோத்தரித்துக்கிறார்கள்.—ஆசி.]